இணையும் ஒரு குடும்பம்
தின/வார இதழ்: தினகரன் வாரமஞ்சரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 7, 2024
பார்வையிட்டோர்: 428
(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வெகு நாட்களாக ‘காதி’ சனூஸினது வீட்டின் முன் ‘ஹோலே அப்பகுதியின் காதிக் கோடாக இயங்கி வரு கிறது. வழமை போல் அன்றும், காதி சனூஸ் தன் கடமைக் காக, காலை எட்டு மணிக்கே தன் ஆசனத்தில் வந்து அமர்ந்து கொண்டார். விரிந்து கிடந்த பைலுக்குள், சிறிது நேரம் மூழ்கியிருந்துவிட்டு தமிழிலே, கையெழுத்தில் அழகாக எழுதப்பட்டிருந்த பத்துப் பன்னிரண்டு காகிதங் களைப் பொறுக்கி எடுத்துக் கொண்டார். ‘பைலை’ மூடி தனக்கு முன்னே போடப்பட்டிருந்த மேசையின் வலது பக்கமாய் வைத்துவிட்டு அக்காகிதங்களை அதே மேசையில் தனக்கு முன்னே வைத்து ‘பேப்பர் வெயிட்டையும் அதன் மேல் இட்டுக் கொண்டார்.
மூக்குக் கண்ணாடியைக் கழற்றி ‘பேப்பர் வெயிட்’ டின் பக்கமாய் வைத்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்து கொண்டார். எதிரே… வலது புறமாய் இடப்பட்டிருந்த ஆசனங் களிலே ஆண்களும், இடது புறமாய் சற்று பின்னே போடப் பட்டிருந்த ஆசனங்களிலே பெண்களுமாய் நிரம்பி வழிந்து கொண்டிருந்தனர்.
எல்லோரையும் சுற்றிப்பார்த்து புன்னகை பூத்துக் கொண்டார் காதி சனூஸ்பேப்பர் வெயிட்’டை நகர்த்தி மேலே வைக்கப்பட்டிருந்த காகிதத்தை மீண்டும் பார்த்து விட்டு நிமிர்ந்தார்.
“நிஸார் மாஸ்டர் வந்திருக்கா? அவர் மனைவி சித்தி நிஹாறா…?”
இருவரும் ஆசனங்களிலிருந்து எழுந்து நின்று தத்தம் வருகையைத் தெரிவித்துக் கொண்டனர்.
ரெண்டுபேரும் இஞ்ச வாங்க. தனக்கு முன்னே கையைக் காட்டினார்.
இருவரும், அவரின் முன்னே இரு பக்கங்களிலும் வந்து நின்று கொண்டனர்.
வலது புறமாய் நின்றிருந்த ஆசிரியரான நிஸாருக்கு நாற்பது, நாற்பத்தொரு வயதிருக்கலாம். அளவான உயரம், அதற்கேற்ற பருமனும் கொண்டவர். கருகரு வென்று வளர்ந்து கிடந்த முடியை வலது பக்கமாய் வாரி விட்டிருந்தார்.
இடது புறமாய் நின்றிருந்த அவரின் மனைவியான நிஹாறாவோ, பத்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றிருந் தாள். முப்பத்தைந்து முப்பத்தாறு வயதிருக்கலாம்.செ சழிப் பான நிலத்திலே வளர்ந்திருக்கும் ஒரு மலர்ச்செடி போல் வளர்ந்திருந்தாள். முழு மதி முகத்தில் நயனங்கள் நாணத் தில் நீந்தின. அவள் அழகாக முக்காடுமிட்டிருந்தாள்.
“பொருத்தமான சோடி. என்ன பிரச்சினை இவர்களுக்குள்?”
பார்வைகள் அனைத்தும் அவர்களிலே பாய்ந்திருந்தன. ஒரு மண் விழுந்தாற்கூட விண்னென்று கேட்குளவிற்கு நிசப்தம் நிலவியது.
காதி சனூஸே அங்கு நிலவிய அமைதியை முதன் முதலில் குலைத்தார். சித்தி நிஹாறாவை நோக்கி, “உங்கட புருசன் நிஸார் மாஸ்டர், உங்கள் வேணாமெண்டு வழக்குப் போட்டிருக்கார். ரெண்டு பேரையும் விசாரிக்கிறத்துக்குத்தான், நான் இண்டைக்கு தவண போட்ட” என்றார்.
பொங்கி வந்த கண்ணீரை ஒருவாறு கட்டுப்படுத்திக் கொண்டாள் நிஹாறா. இப்போது நிஸாரை நோக்கினார். காதி சனூஸ். அவனோ, மலர்ந்த முகத்தோடு அநாயாச மாய் நின்றிருந்தான்.
“நீங்க, ஏன் உங்கிட பெண்சாதிய வேணாமெண்டு நேரத் நீங்க. சொல்றிங்க? விஷயங்களச் சொல்லுங்க. தோட இந்த விஷயங்கள எனக்கிட்டயும் சொல்லித்தான் இருக்கிங்க. என்டாலும் இஞ்சதான் அத முக்கியமாச் சொல்லணும். சொல்லுங்க” என்றார் காதி.
நிஸார் புன்முறுவல் பூத்தான், கீழுதட்டைப் பற்க ளாற் கடித்துக் கொண்டு சற்றுச் சிந்தித்துவிட்டுச் சொன்னான்.
“நான் இத விரிவாகச் சொல்லிக்கொண்டு போக விரும்பல்ல, சுருக்கமாகவே சொல்றன். கொஞ்சக் காலமா. இவ குடும்ப விஷயங்கள் எல்லாத்திலயும் அலட்சியமா நடந்துவந்தா, புருசண்டு என்ன அவ்வளவா மதிக்கவுமில்ல. என்ன சம்மதமிண்டா இருங்க, இல்லாட்டி விட்டிட்டுப் போங்க என்று சொல்ற அளவுக்கும் வந்திட்டா. இவவோட இன்னும் வாழ்றத்துக்கு என்ட மனம் விரும்பல்ல. அதுதான் நான் வழக்குப் போட்ட என்ன பிரிச்சிவிட்டிருங்க” என்றான். அவனது நெற்றி மேலே சுருங்கி, மெல்ல மெல்ல பழைய நிலைக்கு மீண்டது.
“மாஸ்டர், டக்கிண்டு இப்படியெல்லாம் சொல்லப் படா. கொஞ்சம் பொறுங்க” என்ற சனூஸ், சித்தி நிஹாறாவை நோக்கி, “எல்லாத்தையும் இப்ப கேட்டுக்கிட் டுத்தானே இருந்திங்க. இதுக்கு நீங்க என்ன சொல்லப் போறிங்க?” என்றார். தலையிலே அணிந்திருந்த வலைத் தொப்பியைச் சரி செய்து கொண்டு அவளை ஊன்றி அவதானித்தார்.
நிஹாறா ஆரம்பத்தில் நன்கு நாணமுற்றவள் போல் காணப்பட்டாலும் பின்பு தன்னைச் சுதாரித்துக் கொண்டு தலை நிமிர்ந்தாள். சிறிது நழுவிக் கிடந்த முக்காட்டை ஒழுங்குபடுத்திக் கொண்டு இவ்வாறு கூறினாள்:
“நாங்க திருமணம் செய்து சரியாக எட்டு வருசம். எங்களுக்கு ஆறு வயசில ஒரு மகன்கூட இருக்கு. இவக என்னத் திருமணம் செய்யும்போது, க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை சித்தியடைந்துவிட்டு ஆசிரியராக வேலை செய்து வந்தாங்க. எனது பெற்றோர் எங்களுக்குச் சீதன ஆதனமாக சாதாரண மட்டத்திலிருந்து சற்று உயர்வாக மதிக்கக்கூடிய ஒரு வீட்டையும், கைக்கூலியாக பதினையா யிரம் ரூபாக் காசையும் தந்தாங்க. குடுக்கல் வாங்கல் விஷயத்தில, அவர்கள் எங்களுக்குள் எந்த வகையிலும் பிரச்சினைகளை வைக்கவில்லை. நானும் எனது கணவரும் மிகவும் சந்தோஷமாகவே வாழ்க்கை நடத்தி வந்தோம். இவக என்னக் கலியாணம் முடிச்சத்துக்குப் பிறகு, அதாவது ஏறக்குறைய மூன்று வருசங்களுக்குப் பின், தான் ஒரு பட்ட தாரியாக வரவேண்டுமென்று மிகவுமே ஆசைப்பட்டாங்க. அதன் காரணமாக, க.பொ.த. உயர்தரப்பரீட்சை எடுத்து அதிலே நன்கு சித்தியடைந்து பல்கலைக்கழகஞ் சென்று இன்று பி.ஏ.பட்டதாரியாகவும் இருக்காங்க. பல்கலைக் கழகத்திலே கல்வி கற்றபோது சம்பளமற்ற லீவு மட்டுமே இவகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலைமையில, எனது கணவர் எப்படியோ பட்டதாரியாகிவிடவேண்டும். அவருக்கு எவ்விதமான பிரச்சினைகளையும் நாம கொடுக் கக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில குடும்பப் பொறுப் புக்கள் அனைத்தையும் நானே பொறுப்பேற்றேன். முக்கியமாக. இவக பல்கலைக்கழகத்திலிருந்த போது முழுக்க முழுக்க எங்கள் குடும்ப வாழ்க்கையை எனது பெற்றோரின் உதவியைக் கொண்டே நடத்தி வந்தேன். அதுமட்டுமல்ல, அக்காலங்களிலே பல சந்தர்ப்பங்களில், தனிப்பட்ட வகையில் கூட நான் எனது பெற்றோரின் உதவியைப் பெற்று இவகளுக்கு உதவியும் வந்திருக்கிறேன்.
இவக பட்டதாரியாக வந்தவுடன் இதையெல்லாம் முற்றாக மறந்துவிட்டு என்ன அலட்சியப்படுத்தத் தொடங் கினாங்க. இவக கூறுவது போல குடும்ப வாழ்க்கையில நான் எச்சந்தர்ப்பங்களிலும் இவகள அலட்சியப்படுத்தி யதே கிடையாது. சோர்வான ஒரு நிலையிலோ, அல்லது சுகவீனமான சந்தர்ப்பங்களிலோ என்னையறியாமல் சில வேளைகளிலே நான் அவ்வாறு அலட்சியமாக நடந்து கொண்டிருப்பேனோ என்னவோ தெரியாது. இனி என்னத் துக்குத்தான் விஷயங்கள ஒழிப்பான். திறந்து சொல்றன். பி.ஏ. பரீட்சை பாஸ்பண்ணினத்துக்குப் பொற்கு இவக ஒழுப்பம் என்டால் போதும், நான் ஒரு பட்டதாரி. உன்ன விட்டிட்டுப்போய் நல்ல ஒரு இடத்தில் கலியாணம் முடிச்சிருவன். மிகவும் கவனம் எண்டும், ஓண்டும் இல்லாத உன்ன முடிச்சிக்கிட்டுப் பெரிய கணதட்டாயிருக்கு. நல்லாக் காணியும், காரும், காசியும் வாங்கிக்கிட்டு கலியாணம் முடிச்சிருவன். ஜாக்கிரதை எண்டும் கதைப்பாங்க. அது மட்டுமல்ல, வெளியில் சிலரிடமும், எப்படியோ என்ன விட்டிட்டுப்போய் நல்ல ஒரு இடத்தில கலியாணம் முடிக் கணும் எண்டும் கதைத்திருக்காங்க” என்றுவிட்டு தனது உரையைத் திடீரென்று நிறுத்தினாள் நிஹாறா. அவளின் விழிகளிலிருந்து பலபல வென்று பொங்கிவந்த கண்ணீர் இமைக் கரைகளை உடைத்துக் கொண்டு கன்னங்களை நனைத்தது. கண்ணீரைச் சேலைத் தலைப்பினால் மெல்லத் உரையைத் துடைத்துவிட்டுக் கொண்டு மேலும் தனது தொடர்ந்தாள்.
“ஒரு சந்தர்ப்பத்தில… நான் இவகள சம்மதமிண்டா இருங்க. இல்லாட்டி என்ன விட்டிட்டுப் போங்க எண்டு சொன்னது உண்மைதான். அது எப்படிண்டா அதையும் விபரமாகச் சொல்றன் கேளுங்க.
ஒரு நாள் இவக வாய்க்கு வந்தபடி கதைத்தாங்க. ஹேய் நிஹாறா, உங்கட வாப்பா, உம்மா நல்ல ஆக்கள், அவக பழைய மொடல் வீடொன்றையும், பதினையாயிரம் ரூபாக் காசையும் தந்து என்ன ஏமாத்திப் போட்டாங்க. எங்களுக்கு இன்னுமொரு பொம்பிளப்பிள்ளதான் இருக்கு. நாங்க ஒழைக்கிறதெல்லாம் அவங்க ரெண்டு பேருக்குந் தான். அதுவும், எங்கட மூத்த மகள் நிஹாறாவைக் கவனிச் சுப்போட்டுத்தான் மத்தப் பிள்ளயப் பாப்பம் எண்டு சொன் னாங்க. இப்ப பாத்தா அவகள இந்தப் பக்கத்திலயுமே காணல்ல.
இது ஒரு பட்டதாரி இருக்கிற வீடா? ஊரில் எத்தனையோ பட்டதாரிகள் எவ்வளவு அழகான வீட்டில் எவ்வளவோ சுகத்த அனுபவிச்சுக் கொண்டு வாழ்றாங்க, உங்களுக்கெல்லாம் சரியான பாடம் படிப்பிச்சுக் காட்றன்’ என்று நற நற வென்று பல்லைக் கடித்துக் கொண்டாங்க.
அதற்கு நான், ”எனது பெற்றோர் நமக்குத் தாற தெல்லாம் தந்திட்டாங்க. ஆனாஅவங்க ஒண்டி சொன்னாங்க நாங்க மேலதிகமாத் தேடினா உங்களத்தான் முதல்ல கவனிப்பம் எண்டு. அது உண்மைதான். அவங்க இண்டைக்கு அண்டன்டைய வாழ்க்கையை யும் நடத்த முடியாத நிலையில் கஷ்டப் பர்ராங்க. குமரொண்டு அப்படியே பெருமூச்சுவிட்டுக் கொண்டிருக்கு. அவங்க அதைக் கரைசேர்க்கமுடியாத நிலையில் இண்டைக் குத் தத்தளிக்காங்க. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்க. எல்லா ரும் வாங்கினவங்கதான் நல்லாரிக்காங்களா? வாங்காத வங்களும் நல்லாரிக்காங்க. அவங்கள விட்டிட்டு நாங்க இன்னும் முன்னுக்கு வரணுமிண்டா வேறு ஏதாவது முயற்சி களச் செய்வம். எங்களுக்கும் அல்லாஹ் தருவான்” என்றேன்.
அதற்கு இவக, ”என்னடி, பெரிய ஆள்போலக் கதைக்கிறாய். உங்களுக்கெல்லாம் செய்து காட்றன் வேல” என்டாங்க.
கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்ட நான், “செய்து காட்டிறன் ஒரு வேல. நல்ல பாடம் படிப்பிக்கிறன் என்றெல்லாம் ஒரேயே சொல்றிங்க. என்ன விட்டிட்டுப் போய் வேற கலியாணமா செய்யப்போறிங்க? என்னதான் வேல செய்யப்போறிங்க?’ என்று கேட்டேன்.
“ஓம்… ஓம்… நான் நல்ல ஒரு இடத்தில் கலியாணம் முடிக்கப்போறன். புள்ள ஒண்டிருக்கு. அதுக்கு வேணு மிண்டா, செலவைக்கட்டுவன். இன்னும் கொஞ்ச நாளைக் குப் பொறுத்துக்க” என்றாங்க.
எனக்கு இந்த உலகமே வெடித்துச் சிதறுவது போலி ருந்தது. அருவிபோல் கண்களிலிருந்து வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டேன்,,
“உங்கள என்ட உயிரிலும் மேலாக எண்ணி, இறுதி வரை என்னைக் காப்பாத்துவீங்க என்று நம்பியிருந்தேனே. சீ…நீங்களும் ஒரு மனிதனா? மிருகம்! துரோகி!” என்று புலம்பினேன்.
அதற்கு இவக, ”என்னடி சொன்னாய்! மிருகமா. துரோகியா” என்றவாறு வேங்கை போல் பாய்ந்து வந்து என்னைத் தாறுமாறாக அடித்து மிதித்து நொறுக்கினாங்க. வேதனை பொறுக்க முடியாத நான், ‘சம்மதமிண்டா இருங்க. இல்லாட்டி நமக்கென்னவின்ன என்ன விட்டிட்டுப் போங்க” என்றன்.
அன்று போனவங்கதான். இதுதான் விஷயம்” என்றுவிட்டு நெடு மூச்சொன்றை உதிர்த்து விட்டுக் கொண் டாள். முக்காட்டைச் சரிசெய்து கொண்டு காதி சனூஸை நோக்கினாள். இமைகள் இரண்டும் வண்டின் இறக்கைக ளைப்போல படபடவென இரு முறை அடித்துக்கொண்டன.
“பிரியிறத்துக்கா கலியாணம் முடிச்ச? எனக்குப் பிரியிறத்துக்குச் சம்மதமில்ல” என்றாள்.
மெல்ல வலது புறமாய்த் திரும்பினார் சனூஸ். எவ்வித சலனமுமின்றி, இவற்றிற் கெல்லாம் அசைந்து கொடுப்பேனா என்றவாறு நின்றிருந்த நிஸாரை நோக்கினார்.
“இப்ப நீங்க என்னயும் சொல்றண்டா சொல்லுங்க” என்றார்.
”என்னத்தச் சொல்ற, இவ வேணுமிண்டா இன்னும் என்னன்டான சொல்லட்டும். நான் எதுவும் சொல்லல்ல. நேரத்தோட நான் சொன்ன அவ்வளவும்தான் விஷயம். எப்படியோ என்னப் பிரிச்சி விட்டிருங்க. இவ்வோட என்னால சேர்ந்து வாழ ஏலா.” இது நிஸார்.
அனைத்தையும் நன்கு அவதானித்துக் கொண்ட காதி சனூஸ். தாடியை வருடி விட்டுக் கொண்டார். நிஸாரை நோக்கி பின்வருமாறு பகர்ந்தார்:
“உங்களப் பார்த்தா, உங்களுக்குள்ள நடந்திருக்கின்ற விஷயங்கள யோசிச்சா நீங்க கூறுகின்ற காரணங்கள்தான் பிரச்சினைகளைத் தோற்றுவித்தது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. உண்மையாகப் பார்த்தா, நீங்க பட்டதாரியானதால தான் பிரச்சினைகள் ஏற்பட்டிருக் கிறாப் போல தெரியிது.”
“சே.. அதில்ல..ஆ ” என்று நெளிந்தான் நிஸார்.
“இல்லல்ல..நான் ஏத்துக்கல்ல. அதுதான் உண்மை” என்ற காதி சனூஸ் மேலும் தொடர்ந்தார்:
“மாஸ்டர்…நீங்க பட்டதாரியான ஒரேயொரு காரணத்துக்காக மட்டும் உங்கட மனைவிய விட்டுப் பிரியிற தெண்டா அது மிகவும் பெரிய பாவம். அது மட்டுமல்ல, உங்களப் பொறுத்த வரையில் அது, நியாயமானதுமல்ல. அது எப்படியெண்டா கொஞ்சம் விளக்கமாகச் சொல்றன் கேளுங்க…
நீங்க இவவக் கலியாணம் முடிச்சி வவோட இருக்கக்கதான் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு ஆயத்தம் செய்து பரீட்சையும் சித்தியடைந்து அதற்குப் பின் பல் கலைக்கழகம் சென்று பட்டப் பரீட்சைக்குப் படித்து பட்டப் பரீட்சையும் சித்தியடைந்திருக்கிங்க. சித்தியடைந் திருப்பது நீங்கதான். என்டாலும் அதில கணிசமான பங்கு உங்கட மனைவிக்கும் இருக்கு. ஒரு கணவனின் வருவாயில், உழைப்பில் ஒரு மனைவிக்கு எவ்வாறு பங்கிருக்குமோ அது போல உங்கட பட்டத்திலும் உங்கட மனைவிக்குப் பங் கிருக்கு. இத எவருமே மறுக்க முடியாது. உங்கட மனைவி பிரச்சின உள்ள ஒருவராக இருந்திருந்தா நிச்சயமாக நீங்க ஒரு பட்டதாரியாக வந்திருக்க முடியாது. திருமணத்துக்குப் பின் ஒருவர் முன்னேறுகிறார் என்றால் அதற்கு முக்கியமான காரணம் மனைவிதான். இதனை எவருமே மறுக்கமுடியாது.
நீங்க திருமணம் செய்யிறத்துக்கு முன் பட்டதாரி யாசு வந்திருந்தா உங்கட இஷ்டம் போல நடந்து கொண்டிருக்கலாம். அதை எவருமே கேட்கவும் முடியாது.
நல்லரச் சிந்தித்துப்பாருங்க. அதுமட்டுமல்ல, உங்க ளுக்கு ஒரு மகனுமிருக்கு. கலியாணம் எண்டு முடிச்சா அதனோடயே கிடந்து கழிஞ்சிரணும். பாவம்! வேறு ஏதா வது சின்னப் பிரச்சினைகள் இருந்தாலும் கூட அதனையும் மறந்திட்டு உங்கட மனைவியைக் கூட்டிக்கொண்டு போங்க.’காதி சனூஸ் நிஸாரை நோக்கி புன்னகை பூத்துக் கொண்டார்.
“நீங்க எப்படின்டான நினைச்சிக்கங்க. அதப்பத்திப் பறுவாயில்ல. எனக்கு இவ வேணா; என்னப்பிரிச்சு விட்டிருங்க. நான் கூட்டிக்கிட்டுப் போகல்ல.”
நிஸாரின் இவ்வார்த்தைகள் அம்புகளாய் நிஹாறவின் நெஞ்சில் பாய்ந்தன.
“ம்…ஸ்…ஹு” என்று விம்மி வெடித்தாள்.
மீண்டும் * காதி சனூஸ் நிஸாரை நோக்கினார். “வாறமாதம் இருபத்தைந்தாம் திகதி தவண போர்ரன்: இடையில் சரியாக ஒருமாதம் இருக்கி. நல்லா யோசிச்சிட்டுவாங்க. அநியாயமான ஒரு முடிவுக்கு வந்திராதிங்க” என்றுவிட்டு வலைத் தொப்பியைக் கழற்றி தலை மயிரைச் சற்று ஒதுக்கிவிட்டு அதைத் திரும்பவும் அணிந்து கொண்டார்.
திகதி இருபத்தைந்து,
காதிக்கோடு அன்றும் உயிர்த்துடிப்புடன் விளங் கியது. ஆண்களுக்குரிய பகுதியில் ஆண்களும், பெண்களுக் குரிய இடத்தில் பெண்களுமாய் நிரம்பி வழிந்து கொண் டிருந்தனர். காதி சனூஸ் தனது இருக்கையில் வெகு கம்பீரமாய் உட்கார்ந்திருந்தார். அங்கு அவரின் அதிகாரம், கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது.
நிஸாரின் வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள் ளப்பட்ட போது அனைவரின் கவனமும் அதன் பக்கமாகத் திரும்பியிருந்தது.
காதி சனூஸ் சதைப்பிடிப்பான தனது கன்னத்தை வருடி விட்டுக் கொண்டார். தனக்கு எதிரே வலது புறமாய் நின்றுகொண்டிருந்த நிஸாரையும், இடது பக்கமாய் நின்றி ருந்த அவனது மனைவி சித்தி நிஹாறாவையும் அவளோடு ஒட்டிக்கொண்டு நின்ற ஆறு வயது நிரம்பிய அவர்களது மகனையும் ஒரு முறை பார்த்துப் புன்முறுவல் சிந்திக் கொண்டார்.
தனது தடித்த மீசையை இலேசாய்த் தடவி விட்டுக் கொண்டு நிஸாரை நோக்கி, ”நீங்க இப்ப ஒரு நல்ல முடி வோடத்தான் வந்திருப்பீங்க எண்டு நினைக்கன். போட் டிட்டு உங்கட மனைவியக் கூட்டிக்கொண்டு போங்க. என்ன சொல்றிங்க?” என்றார்.
நிஸாரோ நீளக் காற்சட்டைப் பைகளுக்குள் கைகளைப் புதைத்துக் கொண்டு அமைதியில் ஆழ்ந்தான். சற்று நேரத்தின் பின் இவ்வாறு இயம்பினான்:
“நான் விஷயங்களத் திறந்து சொல்றன். தனக்கு ஒரேயொரு பிள்ளதானை இருக்கு. அதுக்குச் செலவைக் கட்டிக்கலாம். எப்படியோ இவவோட இருந்து பிரிஞ்சி நல்ல ஒரு இடத்தில மாளிகை போன்ற ஒரு வீடும், நல்லாக் காணியும், காசும், காரும் வாங்கிக்கிட்டுத் திருமணம் செய்து நன்கு சொகுசாக வாழலாம் என்ற ஓர் ஆசை என்னுள்ளே பேயாக ஆட்டியது. அதனால், நான் எனது மனைவி விட்ட சின்னச்சின்னப் பிழைகளைக் கூட பெரிதாக எடுத்துக் கொண்டேன். எங்கள் குடும்பம் இவ்வளவு தூரம் காதிக்கோட்டுக்கு வருவதற்கு எனது பிழையான எண்ணம் தான் காரணம்.
திருமணத்துக்குப் பின் ஒருவன் முன்னேறுகிறான் என்றால், அதில் கணிசமான பங்கு அவனது மனைவிக்கே உண்டு என்பதை எடுத்துக் காட்டியதோடு, எனது பட்டத் தில் பிரதானமான பங்கு எனது மனைவிக்கே இருக்கிறது என்பதையும் நிரூபித்து தக்க சந்தர்ப்பத்தில் எனது பிழை யைச் சுட்டிக்காட்டி என்னைத் திருத்திவிட்டீர்கள். அநியா யமாகப் பிரிந்துவிட இருந்த எங்கள் குடும்பத்தை அதிலி ருந்து காப்பாத்தி விட்டீர்கள். தங்களுக்கு நான் என்ன கைமாறு செய்வேன்” என்றுவிட்டு நிமிர்ந்து நின்றான்.
“நீங்க எந்த விதமான கைமாறும் எனக்குச் செய்ய வேணா. ஆனா, நீங்களும் உங்கள் குடும்பமும் என்றும் இனிதாக வாழ்ந்தால் அதுவே போதும். சரி, இப்ப நீங்க உங்கட மனைவியையும் கூட்டிக்கிட்டு வீட்டுக்குப் போங்க” என்றுவிட்டு காதி சனூஸ், நிஸாரின் மனைவியை அவதானித்தார்.
அவளின் முகமோ அன்றலர்ந்த செந்தாமரை மலர் போல் காட்சி தந்தது. அவர் விசுக்கென்று வலது புறமாகத் திரும்பி மேசை மேல் வைக்கப்பட்டிருந்த ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்தார்.
– தினகரன் வாரமஞ்சரி, 1988 ஒக்டோபர், 16.
– காணிக்கை (சிறுகதைகள்), முதற் பதிப்பு : ஜனவரி 1997, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம் வெளியீடு, இலங்கை.