ஆறுவது சினம்
கதையாசிரியர்: சுந்தர சண்முகனார்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 18, 2026
பார்வையிட்டோர்: 108
(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒர் ஊரில் பொறுமைசாலி, கோபக்காரன் என்று இரண்டு பணக்காரர்கள் இருந்தார்கள். பொறுமைசாலிக்குக் கோபமே வராது. ஆனால், கோபக்காரன் உப்புக்கு உதவாத காரியத்திற் கெல்லாம் ஓடி ஓடிக் கோபித்துக் கொள்வான்.
அவ்வூர் அரசன் மகனுக்கும் கல்யாணம் நடந்தது. இருவரும் கலியாணத்திற்குச் சென்றார்கள். கோபக்காரன் தனக்குச் சீக்கிரம் தாம்பூலம் கொடுக்கவில்லை என்று கோபித்துக் கொண்டான்.
பொறுமைசாலி பொறுமையாய் இருந்தார்.
பின்பு சாப்பாட்டில் தனக்கு முதல் பந்தியில் இடம் கொடுக்கவில்லை யென்று கோபக்காரன் அரசனைத் திட்டினான். அரசனுடைய ஆட்கள் கோக்காரனை அடித்துத் துரத்திவிட்டார்கள்.
பொறுமைசாலி அமைதியாய் இருந்து கடைசி பந்தியில் சாப்பிட்டார்.
அவருடைய பொறுமைக் குணத்தைக் கண்டு அரசன் ஆச்சரியப்பட்டான். தன் அரண்மனையில் அவருக்கு ஓர் உயர்ந்த உத்தியோகமும் கொடுத்தான்.
கோபக்காரன் கேள்விப்பட்டுத் தன் குற்றத்திற்கு வருந்தினான். (ஆகையால்)
கோபத்தை அடக்கவேண்டும்.
எழுதியவர்: மயிலம் தமிழ்க்கல்லூரியில் விரிவுரையாளரா யிருந்த வித்துவான் சுந்தர சண்முகனார்.
– ஆத்திசூடி அமிழ்தம், குழந்தைக் கதை மலர், முதல் பதிப்பு: 30-8-1948, பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி.
![]() |
பேராசிரியர் சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922 – அக்டோபர் 30, 1997) புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த ஒரு மிகச்சிறந்த தமிழ்த்தேசிய அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழில் முறையியல் (Methodology) அடிப்படையில் புதிய ஆய்வுத் துறைகளை உருவாக்கிய முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். “சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழ்நாட்டுத் தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்.”, என தமிழ்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அறம் செய விரும்பு
சுந்தர சண்முகனார்
July 18, 2026
ஈவது விலக்கேல்
சுந்தர சண்முகனார்
July 18, 2026
ஊக்கமது கைவிடேல்
சுந்தர சண்முகனார்
July 18, 2026
