கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 13, 2025
பார்வையிட்டோர்: 2,369 
 
 

(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம் – 10

‘அப்படியும் இருக்குமோ…?’ 

சரளா யோசிக்க ஆரம்பித்தாள்…

அரவிந்தனை ‘குரங்கு மூஞ்சி…’ ‘ஜொள்ளு வாயன்…’ என்றெல்லாம் காரணப் பெயரிட்டு.. பாசத்துடன் விளித்தவள் அவள்தான்… 

பூர்ணிமா சொன்னதைப் போல… அவள் சொல்லித்தான் பூர்ணிமாவுக்கே அந்தப் பெயர்களைப் பற்றித் தெரியும்… 

அப்படியிருக்கையில்.. அவள் மேல் சரளா குற்றம் சொல்வது சரியில்லாத ஒன்று தானே..? 

‘நானும்தான்.. இத்தனை நாளாய் இல்லாமல் இப்போப் போய் அவனுக்காக ஏன் வக்காலத்து வாங்கித் தொலைக்கிறேன்…’ 

காரணம் புரியாமல் தவித்தாள் சரளா…. 

அவளையறியாமல்.. அரவிந்தனை அடிக்கடி பார்க்க ஆரம்பித்தாள்.. அவன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த நாள்களில் அவளை வசீகரிக்காத அவனின் தோற்றம்.. இப்போதுதான் அவளை வசீகரிக்க ஆரம்பித்திருந்தது.. 

‘ஹேண்ட்சம்மாத்தான் இருந்து தொலைக்கிறான்..’

அவனது செய்கையை… பேச்சுவாக்கில்.. ஒற்றை விரலால் முடிகோதி கொள்ளும் இயல்பை… அப்படி முடி கோதும் போது கலைந்திருக்கும் சிகையின் அழகை… அவள் ரசிக்க ஆரம்பித்தாள்.. 

‘இன்னைக்கு டக்கராத்தான் டிரெஸ் பண்ணியிருக்கான்…’ 

மனதிற்குள் அவள் பாராட்டிக் கொண்டிருக்கும் போதே.. அவன் யதேச்சையாக அவள் பக்கம் திரும்பிப் பார்த்து வைக்க.. சட்டென்று பார்வையை தழைத்துக் கொண்டாள் சரளா… 

‘கண்டு கொண்டிருப்பானோ…’ 

லஜ்ஜையுடன் அவள் அடிப்பார்வை பார்த்தபோது.. அவன் கல்லையும்… மண்ணையும் பார்ப்பதைப் போல… அவளையும் உனக்கெல்லாம் ஒரு கணக்கா என்று பார்த்து விட்டு முகம் திருப்பிக் கொண்டு விட்டான்… 

அவளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது….

‘இதைச் சும்மா விடக் கூடாது… ‘ என்ற நினைவுடன் அவனுடன் வேண்டுமென்றே சண்டையை வளர்க்கலானாள்… 

“ஏன் சார் இந்த ஸ்டேட்மெண்டை இங்கே வைத்திங்க…?” 

“நீங்கதானே கேட்டிங்க…” 

அவளது கேள்விக்கு.. அவளின் முகம் பார்க்காமல் அவன் பதில் சொன்ன விதத்தில் அவள் மனம் காயப்பட்டது… அந்த மனவலியில் அவன் மீதான அவளின் கோபம் இன்னமும் அதிகரித்தது… 

“நான் கேட்டது இப்ப இல்லை… அப்ப…”

“எப்பக் கேட்டால் என்ன..? கேட்டது நீங்கதானே..”

“ஹலோ… இது ஆபிஸ்.. உங்க வீடில்லை…”

“எனக்கும் அந்த நினைவிருக்கு…” 

“அந்த நினைவிருந்தால்… நான் கேட்டப்பவே இந்த ஸ்டேட்மென்டை ரெடி பண்ணிக் கொடுத்திருக்கனும்… அதை விட்டுட்டு.. ஆற.. அமர.. எனக்கென்னன்னு ரெடி பண்ணிக் கொடுத்திருக்கக் கூடாது…” 

சரளா விடாமல் சண்டை வளர்க்க… குணசீலனின் புருவங்கள் உயர்ந்தன.. பூர்ணிமா அரவிந்தனுக்கு பரிந்து கொண்டு வந்தாள்… 

“எதுக்குடி அவர்கூட சண்டை போட்டுக்கிட்டு இருக்க..?” 

“ஊம்..? எனக்கு அப்படியொரு வேண்டுதல்.. பேசாமல் உன் வேலையைப் பார்த்துக்கிட்டுப் போவியா. அதை விட்டுட்டு பஞ்சாயத்து பண்ண வந்திட்டா… உன்னை இப்ப வழக்குத் தீர்த்து வைக்கவான்னு நான் கூப்பிட்டேனா..?” 

“நீ கூப்பிட்டாத்தான் நான் வரனுமா..?”

“கூப்பிடாமலே வர.. நீயென்ன சின்னக்கவுண்டரா.. இல்லை.. நாட்டாமையா..?” 

சரளாவின் இனம் புரியாத கோபம் பூர்ணிமாவை கட ஆரம்பிக்க… குணசீலன் குறுக்கே வந்தான்… 

“ஏங்க.. அவங்க என்ன சொல்லிட்டாங்கன்னு அவங்க மேலேயும் கோபப்படறீங்க…? உங்களுக்கு என்னதாங்க பிரச்னை…?” 

“அதைச் சொன்னால் நீங்க உடனே தீர்த்து வைத்து விடுவீங்களா…” 

“சொல்லித்தான் பாருங்களேன்…” 

”அப்படியா..? உங்களுக்கு அவ்வளவு பவர் இருக்கா..? நீங்க இந்த பேங்கில் வேலை செய்கிறிங்களா..? இல்லை… பிரைம் மினிஸ்டரா இருக்கீங்களா..?” 

“ஆக… உங்க பிரச்னையை தீர்க்கனுமுன்னா.. நான் ப்ரைம் மினிஸ்டர் லெவலில் இருக்கனுமுன்னு சொல்கிறிங்க.. ? அடேங்கப்பா.. நீங்க படா ஆள்தான்.. டேய் அரவிந்தா.. இவங்க கண்ணுக்கு முன்னாலே உட்கார்ந்தால் தானே உன்னை ஒரு வழி பண்ணனும்னு நினைப்பாங்க.. வாடா.. கேண்டின் பக்கம் போய் தொலைக்கலாம்…” 

சரளாவை முறைத்துக்கொண்டே.. அரவிந்தன் கேண்டின் பக்கமாகத் தள்ளிக் கொண்டு போனான் குணசீலன்… 

“என்னதாண்டா ஆச்சு…?” 

”அவ காலையே சுத்திக்கிட்டு வர்ற செல்லப் பிராணியைப் போல இத்தனை நாளும் இருந்தேனில்லையா.. இப்ப அது இல்லாமல் போனதில் அம்மணி கடுப்பாகிறாடா…” 
 
“ஓ… அப்படியா விசயம்…?” 

“அதுதான்.. அதுக்குத்தான் இவ்வளவு கோபமும்.. ஆர்ப்பாட்டமும்…” 

“எனக்கு ஒன்னுதாண்டா.. புரிய மாட்டேங்குது.. இத்தனை நாளாய் அவ உன்னை ஏறெடுத்துப் பார்க்க மாட்டாளான்னுதானே.. தவம் கிடந்த.. ? இப்பத்தான் அவ உன்னைப் பார்க்க ஆரம்பிச்சிட்டாள்ல..? அப்புறமும் எதுக்கு அவனை டென்சனாக்குற…?” 

“அவளா பார்த்தா… ?” 

“பின்னே..? ஆபிஸைக் கூட்டிக் கழுவற செங்கம்மாவா உன்னைப் பார்த்தா..?” 

“நான் அதைச் சொல்லலைடா மச்சான்..” 

“வேற எதைச் சொன்ன..?”

“அவளைப் பார்க்க வச்சேனில்ல…” 

அரவிந்தன் கண்சிமிட்டிச் சிரிக்க.. குணசீலன் விசயம் புரிந்தவனாக பலத்த குரலில் சிரித்தான்… 

“அப்படிப் போடு அரிவாளை.. இதுவும் ஒரு டெக்னிக்கா..?” 

“அதேதான்.. நானும் செஞ்சிப் பார்த்தேன்.. இவ திரும்பிப் பார்ப்பேனான்னு சொல்லிட்டா… திரும்பிப் பார்க்காம இருந்து காட்டினேன். அம்மணிக்கு என் காதல் பார்வையே பழிகிப் போயிருச்சா… கடுப்புப் பார்வையைக் கண்டதும்.. தாங்க முடியலை.. ஜெர்க் ஆகிறா..” 

“உன்னை என்னமோன்னு நினைச்சேண்டா.. மச்சான்… இப்படித் தீயாய் வேலை செய்யறியே.. நடத்துடா.. நடத்து….” 

அவர்கள் திரும்பிவந்த போது கண்முன்னாலிருந்த அரவிந்தனை.. கடத்திக் கொண்டு போன விரோதியைப் பார்க்கும் பார்வையை குணசீலனை நோக்கி சரளா பார்த்து வைக்க.. அவளிடம் சிநேகிதமாக சிரிக்க முயன்று தோற்றான் குணசீலன்… 

அவனுடைய சிரிப்பைக் கவனிக்காததைப் போல.. கடுகடுவென்று முகத்தை வைத்துக் கொண்டாள் சரளா..

பூர்ணிமாவுக்குள் கோபம் துளிர்த்தது.. சரளா.. குணசீலனை அலட்சியம் செய்வதாக அவள் நினைத்தாள்.. 

‘இவன்தான் ஆகட்டும்.. அவளிடம் எதற்காக.. ‘ஈ’யென்று பல்லைக் காட்டனும்…’ 

பூர்ணிமாவின் கோபம் குணசீலனின் பக்கம் திரும்பியது.. அவனைப் பார்த்தபடி.. அவள் அரவிந்தனிடம் பேச வாய் திறந்தபோதே அது தனக்கான பேச்சு என்பதை கண்டு கொண்டான் குணசீலன்.. அவனது கண்கள் மின்னின.. 

சரளாவுடன் சேர்ந்து கொண்டு.. பூர்ணிமாவை அவன் சீண்டிப் பார்த்த நாளிலிருந்தே.. அவள் குணசீலன் பக்கம் திரும்புவதில்லை… அன்று அவளது பார்வை திரும்பியதைக் கண்டதும்.. அவன் மனம் சிறகடித்தது… 

‘எவ்வளவு நாளாச்சு… இவள் என் பக்கம் திரும்பி..’

“ஏன் அரவிந்தன் சார்…”

“என்னன்னு கேளுடா…” 

“நான் உங்களைக் கூப்பிட்டேன் அரவிந்தன் சார்..”

“நானும் உன்னைத்தாண்டா கேட்கச் சொன்னேன்..” 

“சாரைத்தான் ப்ரைம் மினிஸ்டரான்னு கேட்டுட்டாங்கள்ல…” 

“அதுக்கென்னவாம்டா…”. 

“விட்டுத் தொலைச்சுட்டுப் போக வேண்டியது தானே… அதை விட்டுட்டு சிரிப்பென்ன வேண்டிக்கிடக்கு..?” 

“அவங்களைக் கூடத்தான் சின்னக் கவுண்டரா.. இல்லை நாட்டாமையான்னு அவங்க கேட்டு வைச்சாங்க.. அதுக்காக.. அவங்க பிரண்ட் கூட பேச மாட்டாங்களாடா..?” 

“நானும்.. சாரும் ஒன்னுன்னு சொல்கிறாரா அரவிந்தன் சார்…” 

நான் சரளாவின் தோழி.. தோழிகளுக்குள் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்வோம்.. குணசீலன் அப்படியா..? அவன் எதற்காக சரளாவிடம் நட்பு பாராட்ட வேண்டும்..? 

பூர்ணிமாவின் நட்பும்.. குணசீலனின் நட்பும்.. ஒன்று போன்ற தன்மையுடையதா..? 

இந்த அர்த்தத்தில் தான் பூர்ணிமாவும் அந்தக் கேள்வியை கேட்டு வைத்தாள்… 

அதன் இன்னொரு பரிணாமம் வெளிப்படுத்திய சொந்தத்தில் குணசீலனின் கண்கள் மின்னின… 

“ஆமாம்ன்னுதான் சொல்லேண்டா அரவிந்தா.. அவங்களும் நானும் ஒன்னுதான்…” 

அப்போதுதான் அந்தச் சொற்றொடரின் அர்த்தத்தை முழுமையாக உணர்ந்து கொண்டவளாக.. பூர்ணிமா லஜ்ஜை கொண்டாள்.. அவள் முகம் சிவந்துவிட்டது… 

‘இப்படிப் போய் கேட்டு வைச்சிட்டேனே…’ 

அவள் உதட்டைக் கடித்துக் கொள்ளவும் குணசீலனின் சிரிப்பு அதிகரித்தது… 

‘விழிக்கிறதைப் பாரு.. ஒன்னான்னு கேட்டாள்ல..? அதான்.. ஒன்னுன்னு சொல்லிட்டேனில்ல.. என் பின்னாலேயே வந்திருவாளா…’ 

இப்போதும் குணசீலன் அவளுடைய கேள்விக்கான பதிலைத்தான் சொல்லுகிறான் என்று பூர்ணிமா மனம் சோர்ந்தாள்… 

அவள் கேட்டாள்.. அவன் பதில் சொன்னான்… இதை அவனுடைய காதலின் உத்திரவாதமாக எப்படி எடுத்துக் கொள்வது.. ? 

இருந்தாலும் கூட… நீண்ட நாள்களுக்குப் பின்னால் அவர்களுக்கு ஊடே நிகழ்ந்த ஜாடைப் பேச்சினால் அவள் மனம் சிறகடித்தது.. 

வழக்கமான கள்ளப் பார்வையை அவள் அவன் பக்கம் வீச ஆரம்பிக்க.. குணசீலன் அதை நேர் கொண்ட பார்வையால் ரசித்துக் கொண்டிருந்தான்… 

அதைக் கண்ட சரளாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது… 

‘ஊரில் இருக்கிறவங்க எல்லாம் என்னமா சைட் அடிக்கிறாங்க… இத்தனை நாளாய் சைட் அடித்த இந்த மாக்கானுக்கு இப்ப என்ன வந்து தொலைத்தது… ?’ 

அவள் மனதிற்குள் பொருமியபடி அரவிந்தனின் பக்கம் லேசாக பார்த்து வைக்க.. அவனும் அவளை நிமிர்ந்து பார்த்தான்…. 

அதுவரை அவன்.. அவளை அப்படிப் பார்த்ததில்லை.. அப்படிப்பட்ட தீட்சண்யமான பார்வையினை அவனிடம் அதற்கு முன் கண்டிராத சரளா.. திகைத்துப் போனாள்… 

பார்வையை விலக்கிக் கொள்ள முடியாமல் ஒர்விதமான தவிப்பு அவளுக்குள் எழுந்தபோது.. அவன் நிதானமாகக் கேட்டான்… 

“நீங்க கேட்டு.. எதை நான் இல்லைன்னு சொல்லியிருக்கேன் சரளா..? என் உயிரைக் கேட்டாலும் கொடுப்பேனே.. இந்த ஸ்டேட் மென்டையா கொடுக்க மாட்டேன்.. ? பப்ளிக் வரிசையில் நின்னுக்கிட்டு இருந்தாங்க அதனால… கவுண்டர் டைம் முடிகிற வரைக்கும் வெயிட் பண்ண வேண்டியதாப் போச்சு.. அதற்கா இத்தனை கோபம்…?” 

அவளின் கோபத்தை மதித்து இதமாக அவன் பேசிய விதத்தில் சரளா நெகிழ்ந்து விட்டாள்… 

“அரவிந்தன்…” அவள் கண்களில் நீர் துளிர்த்து விட்டது… 

“ஸ்ஸ்.. இது சின்ன விசயம் சரளா.. நான் உங்க உணர்வுகளை மதிக்கிறேன்.. எங்கே நான் காதலை உங்களிடம் நேரடியாகச் சொன்னா… நீங்க சங்கடப்பட்டு விடுவீங்களோன்னுதான் நான் பூர்ணிமாவிடம் அதை சொல்லி விட்டேன்.. என் மனசை தெரியப் படுத்தறது மட்டும்தான் அதன் நோக்கம்..” 

சரளா எதைக் குற்றம் சொன்னாளோ.. அந்தக் காரணத்தை ஒரே நொடியில் தகர்த்து விட்டான் அரவிந்தன்… 

அத்தியாயம் – 11

“நீங்க என் கண்ணுக்கு முன்னாலேதான் இருக்கறிங்க… இல்லைன்னு நான் சொல்லலை.. அதுக்காக… முகம் பார்த்து என்னைக் காதலிக்கிறயான்னு கேட்டால் அது நல்லவா இருக்கும்.. ? காதலுக்கும் ஒரு மரியாதை இருக்கு சரளா.. அதை நான் கொடுத்தேன்.. அது ஒரு தப்பா…?” 

அரவிந்தன் என்ன காரணத்துக்காக பூர்ணிமாவிடம் தன் காதலைச் சொல்லி… அவளை சரளாவிடம் தூது அனுப்பினானோ.. அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்… 

ஆனால்.. முகத்தை வெகு தீவிரமாக வைத்துக் கொண்டு.. வார்த்தைகளை நிதானமாகக் கோர்த்து.. அதை ஒரு தெளிவுடன் அவன் பேசிய விதத்தில் சரளா அயர்ந்தே போனாள்… 

“காதல் சொல்ல ஆயிரம் வழி இருக்குதான் சரளா.. அதில் முதல் வழியே தூது அனுப்புகிறதுதான்…” 

அரவிந்தன் சொன்னதைக் கேட்ட சரளா ‘ஆ வென்று வாய் பிளந்தாள்… 

“என்ன அப்படிப் பார்க்கறிங்க..? கிருஷ்ணருக்கு தன் காதலை தூதுவர் மூலம்தான் ருக்மிணி தெரியப் படுத்தினாள்ன்னு புராணம் சொல்லுது…” 

‘இவன் புராணத்தைக் கூடத் தெரிஞ்சு வைத்திருக்கானே…’ 

“சங்க கால இலக்கியங்களில்.. தலைவனுக்கு.. தலைவி.. தூது விடுகிறதைப் பற்றிச் சொல்லாத பாடல்களே இல்லை… மேகம் விடு தூது.. பறவை விடு தூதுன்னு.. ஏகப்பட்ட தூதுக்கள் இருக்கு. இதில் ஒன்னை ஃபாலோ பண்ணி நான் உங்க பிரண்டை தூதுவிட்டேன்.. இது ஒரு தப்பா…?” 

‘இவன் இலக்கியத்தையும் படிச்சிருக்கானா..?’

“யார் மனசிலங்க காதல் இல்லாம இருக்கு.? உங்க மனசில் இல்லையா… ? இல்லை…. என் மனசில் இல்லையா…?” 

அரவிந்தனின் காந்தப் பேச்சில் கவரப்பட்டிருந்த சரளா தன்னையறியாமல் தலையைத் தலையை ஆட்டி அதை ஆமோதித்துக் கொண்டிருந்தாள்… 

அதைப் பார்த்த பூர்ணிமாவிற்கு சிரிப்பு வந்து விட்டது… அவள் சிரித்துக் கொண்டே திரும்பிப் பார்க்க.. அதே நேரத்தில் குணசீலனும் வாய்விட்டுச் சிரித்தபடி அவளைப் பார்த்தான்… 

ஒரு நொடி.. இருவரும் ஒருவருக்கொருவர் நேரடியாக பேசிக் கொள்ள மாட்டார்கள் என்பதை மறந்து போனவர்களாக இருவரும்.. முகம் பார்த்துக் கொண்டார்கள்… 

குணசீலனின் சிரிக்கும் கண்களில் தெரிந்து செய்தி எதுவென்று அறிந்து கொள்ள முயன்றாள் பூர்ணிமா…. 

அதைப் புரிந்து கொண்டவனைப் போல… அவன் புருவங்களை உயர்த்… அவள் அவசரமாக பார்வையை விலக்கிக் கொண்டாள்… 

‘இவன் ஒருத்தன்.. காதல் இருக்குன்னும் சொல்லமாட்டான்… இல்லைன்னும் சொல்ல மாட்டான். என்னைத் திரிசங்கு சொர்க்கத்திலேயே வைப்பதில் இவனுக்கு ஒரு சந்தோசம்…’ 

பூர்ணிமா மனதிற்குள் குனமந்து போனாள்… 

அவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் அரவிந்தன். சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக.. தன் கடமையை செவ்வனே ஆற்றிக்கொண்டிருந்தான்… 

”என்ன ஒன்னு.. அந்தக் காதலை நான் வெளியில் சொல்றேன்.. நீங்க சொல்லலை… அவ்வளவுதாங்க வித்தியாசம்….” 

என்னவோ.. சரளா அவனைக் கண்டவுடன் காதல் கொண்டு விட்டதைப் போலவும்.. அதைச் சொல்லாமல் மனதுக்குள் புதைத்து வைத்துக் கொண்டு 

‘சொல்லாமல் தானே… 
இந்த மனசு துடிக்குது…’ 

என்று மனதிற்குள் துடித்துக் கொண்டு பாடிக் கொண்டிருப்பதைப் போலவும் அவன் பேசிக் கொண்டே போக… சரளா அவனின் தொடர் ஓட்டத்தைப் போன்ற.. அந்த தொடர் பேச்சில் ஈர்க்கப் பட்டாள்… 

“கில்லாடி டீ… அவன்…” 

ஹாஸ்டல் அறையில்.. தூங்காமல் மடியில் தலையனையை வைத்துக் கொண்டு சுண்கள் செறுக.. ஒரு மார்க்கமாகச் சொன்ன சரளாவை விசித்திரமாகப் பார்த்தாள் பூர்ணிமா… 

“எவனைச் சொல்கிற… ?” 

“அவன்தான்.. அந்த அரவிந்தன்..” 

‘எதை வைச்சு இந்த திடிர் முடிவுக்கு வந்த.. ?”

“த்ச்சு.. குறுக்க.. குறுக்கப் பேசாதேடி..” 

“அது சரி…” 

“அவனோட டேலண்டைப் பார்த்தயா…?” 

ஒழுங்காக வேலையை முடிக்காமல்.. தினமும் மேனேஜரை அல்லாட வைக்கும்.. அரவிந்தனுக்கு அப்படி என்னதான் திறமை இருக்கிறது என்று பூர்ணிமாவுக்குப் புரியவில்லை… 

“என்னத்தை கிழிச்சுட்டான்.. இன்னிக்கும் ரிப்போட்டை ஒழுங்கா பிரிண்ட் அவுட் எடுத்துத் தராம சொதப்பிட்டான்… இவனுக்கு போய் என்ன டேலண்ட் இருக்கும்ன்னு என் தூக்கத்தை கெடுத்துக்கிட்டு இருக்கிற…?” 

சரளாவுக்கு சுர்ரென்று கோபம் வந்து விட்டது…

“நீயெல்லாம் மனுஷியாடி…?” 

“உன் கூடவெல்லாம் பிரண்டா இருந்தா.. இப்படிக் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லித்தான் ஆகனும். போல…” 

“மெஷின் கூட வேலை செஞ்சு… செஞ்சு.. நாம எல்லோருமே மெஷினாவே மாறிப் போயிட்டோம்…’ 

“அப்ப நீயும் மனுஷியில்லங்கிறதை ஒப்புக்கிட்ட.. வெரிகுட்…” 

“அவன் பேசின புராணக் கதைகளைக் கேட்டியா..?”

“அதை அவன் எங்கே சுட்டானோ…” 

”அவனோட இலக்கிய ஈடுபாட்டைப் பார்த்தியா..?” 

“அதுதாண்டி எனக்கும் புரியல.. இவனுக்கும் இலக்கியத்துக்கும் எத்தனையோ மைல் தூரமிருக்குமே.. அப்படியிருக்க.. இலக்கியத்தைப் பற்றி இவன் எப்படிம போட்டுத் தாக்கினான்…?” 

இதைச் சொன்ன பூர்ணிமா நீண்ட காலமாக தன் தோழியாக இருப்பவள் என்பதை மறந்து போனவளாக அவளை ஒரு விரோதியைப் பார்ப்பதைப் போல பார்த்து வைத்தாள் சரளா… 

“அவனுக்கும் இலக்கியத்துக்கும் தான் ரொம்ப துரம்…உன் குணசீலனுக்கும் இலக்கியத்துக்கும் ரொம்ப பக்கமோ…?” 

“இப்போது எதுக்காகடி அவனைப் பேச்சில் இழுக்கிற…? எதை வைத்து அவனை என் ஆளுன்னு சொல்கிற…?” 

“நீ மட்டும் அரவிந்தனை அப்படிச் சொல்லலாமா.?”

“நான் சொன்னால் என்னைச் சொல்லு அதை விட்டுவிட்டு..வேற ஒரு ஆளை ஏன் பேச்சில் இழுக்கி… முதலில் இதுக்கு ஒரு பதிலைச் சொல்லு.. அரவிந்தனைச் சொன்னால் உனக்கெதுக்கு இவ்வளவு கோபம் பொத்துக்கிட்டு வருது…?” 

பூர்ணிமாவின் கேள்வியில் சரளா திகைத்தாள்… 

‘அதுதானே., அவனைச் சொன்னால் எனக்கெதுக்கு கோபம் வரனும்.. ? அவன் யாரோ… நான் யாரோ… ?’ 

நினைத்துக் கொண்டிருக்கும் போதே.. அப்படி அரவிந்தனை யாரோவாக நினைக்க முடியாமல் மனதுக்குள் அரவிந்தனைப் பற்றிய இதமான நினைவு எழுந்தது… 

‘அதெப்படி இவள் இப்படிச் சொல்லலாம்…?’

மனதை கோபித்துக் கொள்ள முடியாமல் சிநேகிதியை முறைத்துப் பார்த்தாள் சரளா… 

“ஏண்டி அப்படிப் பார்க்கிற…?” 

“எதுக்குடி அப்படிச் சொன்ன..?”

“உள்ளதைத்தானே சொன்னேன்…” 

“அடேங்கப்பா.. இவள் பெரிசா உள்ளதைச் சொல்லி விடறவ.. குணசீலனைப்பத்தி உன் மனசில உண்மையாகவே என்ன நினைப்பிருக்குன்னு உள்னால சொல்ல முடியுமா…?” 

அதுவரை… சரளாவின் முகத்தை ‘அகப்பட்டுக் கொண்டாயா…?’ என்பதைப் போல கேலியுடன் பார்த்துக் கொண்டிருந்த பூர்ணிமாவின் முகம் மாறியது… 

அகப்பட்டுக் கொண்டவளாக அவள் திருதிருத்து முகம் திருப்பிக் கொண்டாள்… 

“என் மனசில் காதல் வந்தால் அதை நான் ஒப்புக்கொள்வேன்.. உன்னைப் போல மனசை மறைத்து வைத்து வேசம் போடமாட்டேன்.. நீ வேசக்காரிடி..” 

“வேஷக்காரி…!” 

பூர்ணிமாவின் மனம் அதிர்ந்தது.. 

கடைசியில் அவள் வேசக்காரியாக ஆகிவிட்டாள்.. குணசீலனின் கண்ணாமூச்சி விளையாட்டினால்.. அவன் மனதில் காதல் இருக்கிறதா… இல்லையா.. என்று தெரியாமல் குழம்பிப் போய் கிடக்கிறாளே.. அவள் வேசக்காரி… 

‘நீ கொடுத்து வைத்தவள்டி…’ 

சரளாவின் நினைவில் பூர்ணிமா மனம் குமுறினாள்.

‘உன்னைக் காதலிப்பவன் மனசுக்குள் இருக்கும் காதலை மறைக்காமல் உன்னிடம் சொல்லிவிட்டான்.. என் காதலன் அப்படியில்லையே.. அவன் மனசுக்குள்.. நான் இருக்கிறேனா.. இல்லையான்னே தெளிவாத் தெரியலையேடி… அலைக்கழிக்கிறானே… உன்னைப் போல நானும் அழகியா இருந்து தொலைத்திருந்தா நாளோ அவனிடம் என் காதலைச் சொல்லியிருப்பேன்.. அப்படியில்லாமப் போனேனேடி.. இப்பப் போய் அவனிடம் நான் என் காதலைச் சொல்லி.. அவனும் ஏற்றுக்கிட்டா.. அது காதலா இருக்காதேடி… என் மேல் அவன் காட்டுகிற இரக்கமாகத்தானே இருக்கும்..? காதலை யாருமே.. யாசிப்பாய் வாங்கக் கூடாது சரளா.. அது தானாய் வரனும்…’

அப்படித் தானாய் வருகிற காதல்… குணசீவனின் மனதில் அவளுக்காக உதித்து விடாதா என்று அவன் மனம் படும் பாட்டை சரளாவிடம் சொல்ல முடியாமல் ஊமையாகிப் போனாள் பூர்ணிமா… 

உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்ட சரளா.. பூர்ணிமாவிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை… 

ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல்.. ஒரே வண்டியில் வந்து இறங்கின தோழிகளை வியப்புடன் பார்த்தான் குணசீலன்… 

“என்னடா ஆச்சு.. இவங்க இரண்டு பேருக்கும்..?” 

அந்தப் பூர்ணிமா எதையாவது என் ஆளிடம் சொல்லி வைச்சிருப்பா.. இல்லைன்னா இவ இப்படி மூட் அவுட் ஆகமாட்டா…” 

அரவிந்தன் காதலியை அக்கறையுடன் பார்த்தபடி கூற.. குணசீலனுக்கு.. சுள்ளென்று கோபம் வந்துவிட்டது… 

“எந்தப் பூர்ணிமாடா..? தெருவில் போகிற பூர்ணிமாவா..?” 

“உனக்கெதுக்குடா இவ்வளவு கோபம் வருது..?”

“அவ.. சரளாவோட பிரண்ட்.. நமக்கு கோ வொர்க்கர் அந்த நினைவு இருக்கட்டும்…” 

“இருக்கும்.. இருக்கும்…” 

‘அவளைச் சொன்னால் இவனுக்கு ஏன் கோபம் வருது… ?’ 

எப்போதும் போல இப்போதும் நினைத்துக் கொண்ட அரவிந்தன்… அதைப் பற்றி அதிகமாக யோசித்து மண்டையை போட்டு உழப்பிக் கொள்ளாமல் சரளாவை பார்வையிட்டான்… 

கொஞ்ச நேரத்தில் சரளாவின் முன்னால் ஐஸ்கிரிம் கப் வந்து நின்றது…

நிமிர்ந்து பார்த்த சரளாவின் கண்களில் தெரிந்த ஆச்சரியத்தைக் கண்ட அரவிந்தன் நிதானமாகக் கூறினான்.. 

“எப்பவுமே சிரித்த முகமாய் இருக்கறவங்க.. இன்னைக்கு சிடுசிடுன்னு முகத்தை வைத்துக்கிட்டு இருந்தீங்க… சரி.. ரொம்ப சூடாய் இருக்கீங்கன்னு ஐஸ்கிரிமுக்கு ஆர்டர் பண்ணினேன்… சாப்பிடுங்க… கூலாய் தொண்டைக்குள் விழுந்தா… நீங்களும்.. கூலாமாறி விட மாட்டிங்களா…?” 

ஜஸ்கிரிமை எடுத்துக் கொண்ட சரளாவின் பார்வையில் தென்பட்ட பெருமிதத்தைக் கண்டதும்.. தனக்கு ஏன்.. அப்படிப்பட்ட கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது என்று பூர்ணிமாவின் மனம் வலித்தது… 

அவள் ஓரக்கண்ணால் குணசீலனைப் பார்த்தபோது, அவன் தீவிரமாக… கம்யூட்டரின் திரையைப் பார்த்துக் கொண்டிருந்தான்… 

அத்தியாயம் – 12

அரவிந்தன்… சரளாவின் திருமணம் இரு வீட்டாராலும் முடிவு செய்யப்பட்டு விட்டது… முகம் முழுவதும் பூரிப்புடன் அவர்கள் இருவரும் அலுவலகத்தில் இரு ந்தவர்களுக்கு திருமண அழைப்பிதழ்களை விநியோகித்த போது. பூர்ணிமாவுக்குள் ஏக்கம் துளிர்த்தது… 

அவள் மனதுக்குள் தனிமையாக உணர்ந்தாள்… ”அவரும்.. நானும் சென்னைக்கே டிரான்ஸ்பர் கேட்டு அப்ளை பண்ணிட்டோம்டி… ரெண்டு பேருக்குமே சென்னைதான் சொந்தஊர்… இங்கேயிருந்து என்ன பண்ண…?” 

திருமணம் முடிந்த கையோடு மாறுதல் உத்தாவும் வந்துவிட… அரவிந்தனும்.. சரளாவும்.. சென்னைக்குப் போய் விட்டார்கள்.. அவர்களின் இடத்தில்… வேறு இருவர் வந்து சேர்ந்தார்கள்… 

“ஹாய்… ஐ ஆம் லிசி… நியு அப்பாயிண்ட்மென்ட்…” 

குணசீலனின் அருகிலிருந்த பூர்ணிமாவைத் திரும்பிக் கூடப் பார்க்காமல்.. குணசீலனிடம் மட்டும் கைநீட்டின அந்த லிசியை பார்த்த முதல் பார்வையிலேயே பூர்ணிமாவுக்கு பிடிக்காமல் போய் விட்டது.. 

லிசிக்கு ஏனோ பெண்களிடம் பேசிப் பழக விருப்பமில்லாமல் இருந்தது… ஆண்களிடம் பசையில்லாமல் ஒட்டிக் கொண்டாள்.. அவளது உடைகளில் தெரிந்த அபாரமான கழுத்து வளைவுகளின் இறக்கம் பூர்ணிமாவை அரு வெறுப்புக்கு உள்ளாக்கியது… 

“வேலையில் சேரனும்கிற ஆர்வத்தில கிளம்பி வந்துட்டேன்… இன்னும் எங்கே தங்கனும்கிறதைப் பத்தி யோசிக்கலை…” 

என்னவோ… காலம் காலமாய் பழகினவளைப் போல அவள் குணசீலனிடம் பேசிய விதத்தில் பூர்ணிமாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது… 

‘இவளுக்கு இதைப் பகிர்ந்துக்கு வேற ஆள் கிடைக்கலியா…’ 

அவளுடைய எரிச்சலைக் கவனிக்காமல் குணசீலன் இயல்பாக லிஸியிடம் பேசிக் கொண்டிருந்தான்… 

“அப்படியா… இப்ப எங்கே தங்கியிருக்கீங்க…?” 

“திருநெல்வேலியில் எங்களுக்கு தூரத்துச் சொந்தக்காரங்க வீடு இருந்துச்சு… இப்போதைக்கு அங்கே தங்கியிருக்கேன்.. இனித்தான் எங்கே தங்கனும்கிறதைப் பத்தி யோசிக்கனும்…” 

“ஓஹோ…” 

குணசீலன் அதற்கு மேல் அதைப் பற்றிப் பேசாமல் வேலையைக் கவனிக்க ஆரம்பித்ததில் பூர்ணிமா கொஞ்சமாக நிம்மதி அடைந்தாள்.. 

ஆனால்… அப்படி நிம்மதியாய் உன்னை இருக்க விட்டு விடுவேனா என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறவளைப் போல லிசி.. மேலும் பேச்சை வளர்த்தாள்… 

“நீங்க எங்கே சார் தங்கியிருக்கீங்க….?” 

“ஏன்.. நீயும் அவன் கூடப் போய் தங்கப் போகிறயா..?’ பூர்ணிமா மனம் கொதித்தாள்… 

அவளின் மனப் போராட்டத்தை உணராதவனாக லிஸியைப் பார்த்த குணசீலனின் புருவங்கள் உயர்ந்தன.. 

“என் வீட்டில் தங்கியிருக்கேன்…” 

‘மூக்கை உடைத்து விட்டான்…’ பூர்ணிமா மனம் நிறைய லிசியோ… கலகலத்துச் சிரித்தாள்… 

”குட் ஜோக்… எப்படி சார்… இப்படி டைமிங் ஜோக் அடிக்கிறிங்க..? ரியலி… ஐ அப்ரிஸியேட் யு…” 

‘விட மாட்டேங்கிறாளே…’ 

கைப் பொருளை காவல் காக்கும் உடைமைக்- காரியாய் பூர்ணிமா தவித்துப் போனாள்… 

அது அவளுடைய கைப் பொருள்தான் என்று உறுதியாகத் தெரிந்தாலாவது அவளால் லிஸியை அடக்க முடியும்.. அது தெரியாத போது எப்படி அவள் லிஸியை அடக்குவாள்..? 

குணசீலன் லிஸியை வெற்றுப் பார்வை பார்த்து விட்டு வேலையைத் தொடர்ந்தாள்… 

உன்னை அப்படி வேலை செய்ய விட்டு விடுவேளா என்று லிஸி பேச்சைத் தொடர்ந்தாள்… 

“உங்க வீட்டில்தான் தங்கியிருக்கீங்க… ? ஓகே. உங்க வீட்டில் நீங்க மட்டும்தான் தங்கியிருக்கீங்களா..?”

“கூட… என் அப்பா.. அம்மா.. தம்பின்னு.. என் குடும்பம் தங்கியிருக்குது…” 

“ஜ ஸீ… உங்க வொய்ப்… ?” 

“இன்னும் வரலை…” 

“ஹௌ நைஸ்.. தேங்க் யு…” 

இதில் இவள் இத்தனைச் சந்தோசப்பட்டு நன்றி சொல்ல என்ன இருக்கிறது என்ற நினைவுடன் குணசீலன் சீட்டைவிட்டு எழுந்து கொண்டான்… 

“என்ன சார் எழுந்துட்டிங்க…?” 

இப்படிக் கேட்கிறவளை கன்னம்.. கன்னமாய் அறைந்தால் என்ன என்று தோன்றியது பூர்ணிமாவுக்கு.

ஆண்பிள்ளை.. பாத்ரூம் போகக்கூட எழுந்து கொள்வான்.. இவளுக்கு அதைப்பற்றி என்ன கேள்வி வேண்டக்கிடக்கிறது என்று பல்லைக் கடித்துக் கொண்டாள் அவள்… 

நல்ல வேளையாக குணசீலன் அப்படியெல்லாம் பதில் சொல்லி விடவில்லை… 

“காபி குடிக்கப் போகிறேங்க…” என்றான் அவன்…

“நானும் ஜாயின் பண்ணிக்கலாமா..?” தயக்கமில்லாமல் லிஸி கேட்டாள்…. 

இப்படிக் கூட ஒட்டுப் புல் போல ஒருத்தி ஒட்டிக் கொள்வாளா என்று குணசீலன் எரிச்சல் பட்டுப் போனான்… 

சும்மாவே அவனுக்கு நொய்.. நொய்யென்று யாராவது பேசிக் கொண்டிருந்தால் அவர்களைக் கட்டோடு பிடிக்காது… 

லிஸி அந்த ரகமாக இருந்து வைத்தாள்.. பேசிப் பேசியே அவனுக்கு தலை வலியை வரவைத்து விட்டு… அதற்காக காபி குடிக்கப் போகிறவனிடம்… தானும் வரவா என்று கேட்டு.. அவனை கதிகலங்க வைத்தாள்…. 

“வேணாங்க…” 

“ஏன்..?” 

“நான் காபி மட்டும் குடிக்க மாட்டேன்… 

“பின்னே..?” 

“சிகரெட் பிடிப்பேன்..” 

“ஐ ஹேவ் நோ அப்ஜெக்சன்…” 

“பட்.. ஐ ஹேவ் அப்ஜெக்சன்… சில விசயங்களில் எனக்கு பிரைவஸி வேணும்.. லேடிஸ் முன்னால் நான் சிகெரெட் பிடிக்க மாட்டேன்…” 

“ஓகே.. ஓகே.. அதுக்கு ஏன் இவ்வளவு கோவிச்சுக்கறிங்க..? எனக்கு தங்க இடம் வேணும்.. அதைப்பத்தி உங்ககிட்ட கேட்கலாம்ன்னு நான் நினைச்சேன்…” 

“என்கிட்டக் கேட்டு என்ன பிரயோஜனம்.. அதோ… அவங்க லேடிஸ் ஹாஸ்டலில் தான் இருக்கிறாங்க.. அவங்ககிட்ட இதைப் பத்திக் கேளுங்க…” 

பூர்ணிமாவை கை காட்டி விட்டு.. குணசீலன் போய்விட்டான்…. 

‘இதுக்கு இவன் என்னை ரெண்டு சாத்துக்கூட சாத்தியிருக்கலாம்…’ 

லிஸியுடன் பேச விருப்பமில்லாமல் பூர்ணிமா முகம் திருப்பிக் கொண்டாள்… 

லிஸியுடன் பேசுவதை எப்படித் தவிர்ப்பது என்ற யோசனையுடன் பூர்ணிமா இருந்த போது… அவளுக்கு அந்த வேலையையும்.. கவலையையும் வைக்காமல்.. லிஸி.. பூர்ணிமாவுடன் பேச முயலவே வில்லை… 

குணசீலன் திரும்பி வந்த போது.. கண்கள் மின்ன அவனை எதிர் கொண்டாள் லிஸி… 

“காபி… சாப்பிட்டுட்டிங்களா..?” 

“ம்ம்ம்…” 

“உங்க அப்பா என்ன செய்கிறார்…?” 

“அவர் டெபுடி தாசில்தார்…” 

“பெரிய வேலைதான்… அம்மா..?”

“ஹவுஸ் வொய்ப்…” 

அதைப் பற்றி எதுவும் சொல்லாமல் லிஸி மௌனித்து விட… அவளைக் கேலிப் புன்னகையுடன் பார்த்தான் குணசீலன்… 

“ஹவுஸ் வொய்புங்கிறது தான் பெரிய வேலை… உங்களுக்கு அது தெரியாது போல…” 

தாயைப் பற்றி உயர்வாகப் பேசும் தன்மையுடன்தான் குணசீலன் இதைச் சொன்னான்.. அதற்கு லிஸி வேறு விதமாக பதில் சொல்லி வைத்தாள்…. 

“நீங்க சொன்னால் நான் கேட்க மாட்டேன்னா சொல்லப் போகிறேன்..? நீங்க தெரிய வைத்தா தெரிஞ்சுக்கறேன்…” 

இது என்ன மாதிரியான பதில் என்று பிடிபடாமல் புருவம் சுருக்கினான் குணசீலன்… 

பூர்ணிமாவின் முகமே சுருங்கிவிட.. அவன் மனதிற்குள் மணியடித்தது… 

‘இவ சும்மாவே பொறாமை பிடிச்சவ… இந்த லிஸி வேற இந்த மாதிரி பேசி வைக்கிறாளே..’ 

எதற்கு வம்பு என்ற நினைவில் குணசீலன் வேலையைக் கவனிக்க ஆரம்பிக்க.. அதற்கு விடுவேனா என்று லிஸி… விட்ட பேச்சை தொடர்ந்து வைத்தாள்… 

“தம்பி என்ன செய்கிறார் சார்..?” 

“இன்ஜினியரிங் படிக்கிறான்…” 

லிஸியின் முகம் பார்க்காமல் பதில் சொன்ன குணசீலனை அள்ளிப் பருகுவதைப் போலப் பார்த்தான் லிஸி… 

“உங்க வீடு சொந்த வீடுதானே சார்..?” 

“ம்ம்ம்…” 

“ரொம்பப் பெரிசாவும்.. அழகாவும் இருக்கு..”

‘இது இவளுக்கு எப்படித் தெரியும்..?’ 

குணசீலனும்.. பூர்ணிமாவும்.. ஒன்று போல மனதிற்குள் ஆச்சரியப் பட்டுப் போனவர்களாய் லிஸியைப் பார்த்தார்கள்.. 

“என்ன சார்.. இது எப்படி எனக்குத் தெரியும்ன்னு பார்க்கறிங்களா..?” லிஸி கொஞ்சலாக கேட்டாள்… 

ஆமாம் என்பதைப் போல குணசீலன் தலை அசைத்தான்… 

“உங்க வீட்டுக்கு எதிர் வீட்டிலேதான் எங்க தூரத்துச் சொந்தக்காரங்க குடியிருக்கிறாங்க…” 

“யாரைச் சொல்கிறிங்க…?” 

குணசீலனின் வீட்டிற்கு எதிரில் பத்து வீடுகளைக் கொண்ட ஒரு மேன்சன் இருந்தது… 

அதில்.. எந்தப் போர்சனில் யார் குடியிருக்கிறார்கள் என்று அவனுக்கு எப்படித் தெரியும்.. ? 

“ஆனந்தன்னு… மருந்துக் கம்பெனியில் வேலை பார்க்கிறாரே.. அவர்தான்…” 

“ஓ..அவரா..” 

ஆனந்தனை தெருவில் போகும் போதும்.. வரும்போதும்… பார்த்திருந்த குணசீலன் யதார்த்தமாக கேட்டு வைக்க.. லிஸி உற்சாகமானாள்… 

“உங்களுக்கு அவரை பழக்கமா..?” 

“இல்லையில்லை… ஜஸ்ட் பார்த்திருக்கேன்…”

“பட்.. அவருக்கு உங்க வீட்டைப் பத்தி எல்லாமே தெரிஞ்சிருக்கு…” 

“அப்படியா…?” 

குணசீலன் அதற்கு மேல் பேச விருப்பப் படவில்லை.. அவன் வேலையிருப்பதைப் போல எழுந்து மேனேஜரின் கண்ணாடி அறைக்குள் சென்று விட்டான்… 

திரும்பி வந்தவனிடம்.. லிஸி மீண்டும் பேச்சை ஆரம்பிக்க… அவளை நேருக்கு நேராய் பார்த்தான் அவன்.. 

“நீங்க லேடிஸ் ஹாஸ்டலில் சேருகிறதைப் பத்தி அவங்ககிட்டப் பேசலாமே…” 

பூர்ணிமாவின் பக்கம் அவன் கைகாட்ட.. இவனுக்கு என்மேல் என்ன கோபம் என்று யோசித்தாள் பூர்ணிமா… 

திரும்பவும் அவளிடம் இவளைக் கைகாட்டி வைக்கிறானே.. என்ற கோபத்தில் அவள் பல்லைக் கடிக்க ஆரம்பிக்க லிஸியோ.. பூர்ணிமாவின் பக்கமே திரும்பவில்லை… 

“இல்லை சார்… நான் லேடிஸ் ஹாஸ்டலில் சேருகிறதாக இல்லை…” 

“நீங்க தானேம்மா.. தங்க இடம் வேணும்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்க… ?” 

“அதுக்காக ஹாஸ்டலிலா இடம் பிடித்துக் கொடுப்பீங்க..?” 

“வேற என்ன செய்ய..? என் வீட்டில் இடம் கொடுக்கச் சொல்கிறீங்களா..?” 

குணசீலன் சுள்ளென்று கேட்டுவிட்டான்…

– தொடரும்…

– ஆசையா.. கோபமா… (நாவல்), முதற் பதிப்பு: நவம்பர் 2012, லட்சுமி பாலாஜி பதிப்பகம், திண்டுக்கல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *