கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 24, 2025
பார்வையிட்டோர்: 3,517 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஈரோட்டிலிருந்து மொத்தமாக சாமான்கள் வாங்க வந்திருந்த கஸ்டமரை கண்ட முதலாளி வரவேற்றார். “சரி ராஜு நான் கிளம்பட்டுமா?” என்று பால்ய நண்பன் கிளம்பு முற்பட, “கொஞ்சம் இரு கிருஷ்ணா, இவர்களுக்கு வியாபாரம் பண்ணி விட்டு வருகிறேன்” கிளம்பினார் ராஜு.

“என்ன சார் வேணும்”

“கார் டிக்கி இருக்கா சார்?” என்று கேட்டார் வந்திருந்தவர்.

“ஏது சார்? அம்பாஸிடரா? பியட்டா ? மாருதியா?”

“அம்பாஸிடர் சார்”

கடைப் பையனைக் கூப்பிட்டு, “அம்பாஸிடர் டிக்கி எடுத்துண்டு வாடா” என்று கொண்டு வந்த டிக்கி பார்ட்ஸை எடுத்து “இது போதுமா சார்” என்றார்.

டிக்கியின் அழுக்கு அவர் உடுத்திருந்த வெள்ளை வேட்டியை அழுக்குப் படுத்தியதைப் பற்றி கவலைப் படாமல் “வேறு என்ன வேண்டும் சார்” என்று கேட்டார்.

வந்திருந்தவருக்கு எல்லாம் எடுத்துக் காட்டி ஆர்டர் எடுத்து பணம் வாங்கி “நாளைக்கு உங்கள் கடைக்கு வந்து சேருகிற மாதிரி அனுப்பி வைக்கிறோம் சார்” என்றார் ராஜு.

“சரி’ என்று கஸ்டமர் கிளம்ப, “ஏன் ராஜு நீ இவ்வளவு கஷ்டப்பட்டு பொருளையெல்லாம் எடுத்து வந்து வந்திருந்த கஸ்டமருக்கிட்டே காட்டணுமா? உன் கடைப் பையன் கிட்டே சொல்லி யிருந்தா செய்திருக்க மாட்டானா?” என்று கேட்டான் கிருஷ்ணா.

“ஏன் கேட்கிறாய் கிருஷ்ணா” – ராஜு.

“பார் உன் வேட்டி சட்டை எல்லாம் அழுக்காகி விட்டது. தும்பைப் பூ மாதிரி உடுத்திருந்த வேட்டி காவியாகி விட்டது பார்” என்றான் கிருஷ்ணா.

“ராஜு நான் எழுந்து அவருக்குப் பொருளையெல்லாம் எடுத்துக் காட்டியதால் தான் அவர் ஒரு லட்சத்துக்கு ஆர்டர் கொடுத்து விட்டு போனார். எனக்கு அதில் மொத்த லாபம் இருபதாயிரம் ரூபாய். இந்த துணிகளை வெளுக்கப் போட்டு வாங்கினால் பத்து ரூபாய் தான் செலவழியும். ஆனால் எனக்கு எளிதில் வியாபாரம் நடந்ததே” என்றார் ராஜு.

GeorgeChandran பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *