அறிவு அற்றங் காக்கும் கருவி!
கதையாசிரியர்: வளர்கவி
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 31, 2026
பார்வையிட்டோர்: 110
(சிறாருக்கான கதைப்பாடல்)

அடர்ந்த வனத்தின் ஓரத்தில்
அறிவு மிக்க கழுதையாம்
இடர்கள் நீக்கி அறிவினால்
இன்ப மாக வாழ்ந்தது!
எந்தத் துன்பம் நேரினும்
யார் பகைத்து மோதினும்
அந்த இடரை கழுதைதன்
அறிவால் நீக்கி வந்தது!
மேயும் அந்தி வேளையில்
மேயும் தன்னைத் தின்னவோர்
ஓநாய் ஒன்று நெருங்கியே
ஒளிந்து பதுங்கி வந்ததை
கழுதை கண்டு கொண்டது
கருத்தை உணர்ந்து கொண்டது
பழுது இன்றித் தன்னையே
பாது காக்கும் எண்ணத்தில்
ஓநாய் அருகில் வந்ததும்
ஓடிடாது மெல்லப் போய்
“ஓடும் கால்கள் ஒன்றிலே
ஒடிந்த முள்ளும் உள்ளது!
முள்புகுந்த காலைநீ
முழுங்குகின்ற போதுதது
உள்புகுந்து தொண்டைக்கு
ஊறுசெய்யக் கூடுமே…?
எந்தக் காலில் எனக்குமே
அந்த முள்ளும் உள்ளது?
வந்து பார்நீ அருகிலே
என்று சொல்லிக் காட்டிட
உண்மை என்று நம்பிய
ஓநாய் கழுதைக் கால்களைப்
பின்னிருந்து பார்க்கையில்
பிடரி தன்னில் உதைத்தது!
தலைதெ றிக்கும் வலியினால்
தவித்த தந்த ஓநாயும்
கழுதை தனது அறிவினால்
கவலை நீங்கிப் பிழைத்தது!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
திருடாதே! பாப்பா திருடாதே!
வளர்கவி
May 25, 2026
வாக்கும் போக்கும்..!
வளர்கவி
May 13, 2026
அன்புமிக்க அரசன்!
வளர்கவி
May 10, 2026
