அரை வேக்காடு
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: January 8, 2026
பார்வையிட்டோர்: 3,330
(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பக்தியைச் சோதிக்க ஒரு பலப் பரீட்சை நடத்தினார் ஒரு பக்தர்.
உள்ளுர் கிணற்றில் ஒரு அறிவிப்புப் பலகையை வைத்தார்.
“நீங்கள் இந்தக் கிணற்றினுள் பத்துக் காசு போட்டால் நூறு காசு கிடைக்கும்.”
முதலில் ஒரு பக்காத் திருடன் வந்தான். அறிவிப்பைத் படித்தான். ஒரு பணத்தை எடுத்துக் கிணற்றினுள் வீசி ஒரு கும்பிடும் போட்டுச் சென்றான். அவனுக்குப் பத்து மடங்கு திருட்டுத் தொழில் பலிக்கும் என்ற நம்பிக்கை,
அடுத்து ஒரு மூட பக்திமான் வந்தான். ஐம்பது காசைக் கிணற்றினுள் போட்டுவிட்டு சிறிது நேரம் எட்டிப் பார்த்தவாறு நின்றான். பின்பு “கடவுளுக்குத்தானே, சவம் போனாப்போகுது” என்று சொல்லிச் சென்றுவிட்டான்.
அடுத்து ஒரு அரை வேக்காட்டுப் பகுத்தறிவுவாதி வந்தான்,
“இதெப்படி சாத்தியம்?” என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டான். எனினும் ஆசை யாரைவிட்டது. ஒரு நப்பாசை எழுந்தது.
ஒரு பத்துப் பைசாவை ஏதோ ஒரு வேலை செய்து கிணற்றினுள் போட்டான்.
கொஞ்சநேரம் காத்திருந்தான். ஒன்றும் கிடைக்க வில்லை.
பிறகு சொன்னான்:
“இது ஏமாத்துன்னு எனக்கு தெரியும்; எனவேதான் பத்துக் காசில் ஒரு கயிரைகட்டித் தொங்கவிட்டேன்” என்றான்.
ஆசை அவனது அறிவை மழுங்கடித்தது-
தேவைமீதுள்ள பேராசை அவனை முடமாக்கியது=
உனது புத்தித் தெளிவு எத்தகையது?
“நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்” [1 யோவான் 3:7]
– எழுச்சியூட்டும் எழுபது கதைகள், சிரிப்புக் கதைகள், முதற் பதிப்பு: ஜூலை 1989, ஜெயா பப்பிளிகேஷன்ஸ், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
