அம்மாத்தாவின் பொரிவிலங்கா





எண்ணைச் சட்டியில் அச்சு முருக்கை சுட்டுத் தள்ளிக்கொண்டிருந்தாள் பூங்கோதை. எனக்கும் கொஞ்சம் அச்சு முருக்கை வை; கறுக்கித் தள்ளவேண்டும் என்று சட்டியில் இருந்த கொதியெண்ணெய் சத்தம் போட்டுக்கொண்டிருந்தது. விடுவாளா பூங்கோதை?

“யம்மா, இன்னும் எவ்வளோ நேரமாகும்?” அழகப்பன் சமையற்கட்டுக்கே வராமல் குரலை மட்டும் அனுப்பி வைத்தார். “முடிஞ்சிரும், முடிஞ்சிரும்னு பாத்தா மாவு இருந்துக்கிட்டேதான் இருக்கு. இன்னும் அறைமணி நேரம் பொருத்துக்கோங்க மாமா,” பூங்கோதைக்குக் குரல் சமையற்கட்டிலிருந்து பதிலளித்துவிட்டுப் போனது.
“உம்பையன சமாளிக்க முடியலைம்மா. சீக்கிரம் முடிச்சிட்டு வா…”
உள்ளிருந்து எழுந்து வந்து ஏற்கனவே சுட்டு வைத்திருந்த முறுக்கை எடுத்து அழகப்பனின் அணைப்பில் திமிரிக்கொண்டிருந்தவனிடம் கொடுத்துவிட்டு, “இருய்யா, அம்மா முறுக்கு தானே சுட்டுக்கிட்டு இருக்கேன்,” என்று தாஜா பன்ன தவடையில் கைவைக்க அதைத் தட்டிவிட்டான் அவன். “நானும் வந்து உங்களோட முறுக்கு சுடப்போறேன். தாத்தாவ விடச்சொல்லுங்கம்மா!” அழகப்பனின் கைப்பிடியைத் தளர்த்தப் போராடிக்கொண்டிருந்தான் பாரதி.
பூங்கோதை இல்லாத நேரமாகப் பார்த்து கொதியெண்ணெய் அச்சு முறுக்குகளை கறுக்கும் வேலையில் தீவிரம் செலுத்தியிருந்தன. அச்சு முறுக்குகளில் அலரலில் கருகும் வாசம் வரவேற்பறைவரை வந்து பூங்கோதையை அழைத்திருந்தது. பூங்கோதை மீண்டும் சமையலறைக்குள் ஓடி ஐக்கியமானாள்.
அவள் தந்துவிட்டுப்போன முறுக்கைக் காட்டி பாரதியைச் சமாதானம் செய்து அலுத்துப்போய்விட்டார் அழகப்பன். “ஹ்ம்ம்ம்… இந்த முறுக்கும் அச்சு முறுக்கும் சுடுறதுக்கே இத்தனைப் பாடுன்னா… இன்னும் எங்காத்தா மாதிரி அம்மாத்தா மாதிரி தீவாளி பலகாரம் செஞ்º¢ðடா இந்த வீடு கொள்ளாது போலருக்கே!” அழகப்பனுக்குக் கொஞ்சும் பொருமை போய்விட்டது. சப்சôபென கன்னத்தில் குட்டிக் குட்டி அறைகளைக் கொடுத்து பாரதியின் திணவை பலவீனப்படுத்த முற்பட்டுவிட்டார்.
பூங்கோதை வேலையை முடித்துவிட்டாû போல. கையை அலம்பிவிட்டு வேகமாக வந்து பாரதியைத் தூக்கிக் கொண்டாள். “அம்மு செல்லம், அம்மு குட்டி…” தாஜாக்கள் வலுத்தன.
பூங்கோதை எப்போது அவனைச் சாந்தப்படுத்தி, அழகப்பன் எப்போது அவளிடம் பேசி… அதற்கெல்லாம் பொருமையில்லை. “அம்மாடி, இந்தத் தீவாளிக்காவது பொரிவிலங்கா செய்வியாம்மா? ரொம்ப ஆசையா இருக்கு…” பாரதியின் அழுகைச் சத்தத்தில் பாதி விளங்கியது, பாதி விளங்கவில்லை பூங்கோதைக்கு.
“என்னா பொரியல் சொன்னீங்க?”
“பொரியல் இல்ல. பொரிவிலங்கா.”
“அப்படின்னா?”
“அதாம்மா நல்லா கெட்டியா இறுக்கமா இருக்குமே. சொக்கலேட் கலருலே…” அழகப்பன் வருணனை செய்துகொண்டிருந்தார். சிற்றுருண்டை, சின்னபாக்கலு, என்று பட்டியலில் பல பலகாரங்கள் வந்து விழ, அழகப்பர் கல்லுருண்டை என்பதைக் கடைசியாகக் கைக்காட்டினார்.
“கல்லுருண்டையக் கல்லுருண்டைன்னு சொல்லவேண்டியத்தானே மாமா. அதென்னா பொரிவிலங்கா?” பாரதியின் கூச்சல் புதுசாய்ச் சுட்ட அச்சு முறுக்கு கைக்கு வந்ததும் காணாமல் போயிருந்தது. அவனது கவனம் பூராவும் அச்சு முறுக்கின் அச்சின் ரகசியத்தை உடைப்பதில் குவிந்திருந்தது.
பூங்கோதையிý கேள்வி அழகப்பனுக்குக் கொஞ்சம் கடுப்பைக் கிளப்பியது என்னவோ உண்மைதான். சில தீபாவளிகளாக அவர் அதற்கு விளக்கம் கொடுக்க, பூங்கோதை மறுபடியும் “அப்படின்னா என்ன?” என்று கேட்க மனுஷனுக்குக் கோவம் வருமா வராதா?
“அந்த காலத்துல அதுக்குப் பேரு பொரிவிலங்காதாம்மா. இப்பதான் அந்தப்பேரு கூட எல்லாருக்கும் மறந்து போச்சு. சரி, கல்லுருண்டைன்னே வச்சிக்கியேன். இந்த தடவயாச்சும் அதச் செஞ்சி வையி…” என்றபடி மாட்டியிருந்த மூக்குக் கண்ணாடியைக் கழற்றி கைலியின் அடிப்பகுதியைக் கொஞ்சமாய் ஒதுக்கி அதில் துடைத்துக்கொண்டார்.
“அந்த உருண்டையெல்லாம் எனக்கு வராது மாமா. முறுக்கும் அச்சு முறுக்கும் தான் கடையில் வாங்¸¢É¡ கட்டுப்படியாகாதுன்னு உக்காந்து மெனக்கெட்டு சுட்டேன். மத்ததெல்லாமே வாங்குனது தானே? வேணும்னா அவர்கிட்டச் சொல்லி கடையில இருந்து வாங்கியாரச் சொல்றேன்,” என்று சொல்லிவிட்டு பாரதியைக் கீழே இறக்கி விட்டாள். இப்போதெல்லாம் பாரதியை அதிக நேரம் தூக்க முடிவதில்லை. வளர்ந்துகொண்டிருக்கிறான்.
அழகப்பனுக்குப் பேச வேறொன்றும் இல்லை. மெதுவிருக்கையில் மௌனமாகச் சாய்ந்துகொண்டார். கடையில் வாங்கி வருகிற பலகாரம் பூராவும் எண்ணெய் சிக்கெடுத்துக் கிடக்கிறது. எதிலுமே சுத்தமும் இல்லை, ருசியும் இல்லை… அழகப்பனின் ஆதங்கம் மகனுக்கும் விளங்கப்போவதில்லை, மறுமகளுக்கும் புரியப்போவதில்லை!
அழகப்பன் சின்ன வயதில் அம்மாத்தாவுடனேயே வளர்ந்தவர். அம்மாத்தாவின் பலகாரம் எல்லாம் என்ன சுத்தம், என்ன ருசி… அதற்கு ஈடு வருமா? அம்மாத்தா சுட்ட பல பலகாரங்களை அம்மாவும் அழகப்பனுக்கு வாக்கப்பட்ட வள்ளியம்மையும் நாக்கைத் தட்டிக்கொண்டுச் சாப்பிடுவதில் ஆர்வம் காட்டினார்களே ஒழிய அம்மாத்தாவின் கைப்பக்குவத்தைப் பற்றி என்றாவது கவலைப்பட்டதுண்டா? அதற்காகக் கவலைப்பட்டவர் அழகப்பன் மட்டும்தான். அதுவும் இந்தத் தீபாவளிக்கு அதுதான் அழகப்பனின் அதிகப்பட்சக் கவலை.
அழகப்பனுக்கு இப்போது பொரிவிலங்கா வேண்டும்!
பூங்கோதையை நம்பியோ மற்ற மகள்களை நம்பியோ ஆகப்போவது ஒன்றுமில்லை. வள்ளியம்மை இருந்தாலாவது குறைந்தபட்சம் பொரிவிலங்காவின் பெயரில் எதையாவது செய்துவைப்பாள்.
அம்மாத்தாவின் பொரிவிலங்காவை வாயில் போட்டு எப்படியும் அறுபது ஆண்டுகள் இருக்கும். அழகப்பன் அம்மாத்தாவின் கைப்பக்குவத்தைப் பத்து வயது வரைதான் ருசிபார்க்க முடிந்திருந்தது.
அதுவும் இந்தப் பொரிவிலங்கா இருக்கிறதே… தோற்றம்தான் அதற்குக் கடுமை. அதைக் கடிக்க வேண்டிய விதத்தில் கடித்தால் அதுதானே சுவை! அம்மாத்தா என்னத்தைப் போட்டுச் செய்தாளோ… அவளது செய்முறையினாலோ அல்லது கைப்பட்டதனாலோ அம்மாத்தாவின் பொரிவிலங்கா பொரிவிலங்காதான்!
சாதாரணமாய்க் கடித்துவிட முடியாது அம்மாத்தாவின் பொரிவிலங்காவை. அழகப்பன் அதைப் பல்லால் உடைத்தது கிடையாது. பையில் போட்டு சுற்றில் அடித்து நொறுகுவதுண்டு. அம்மாத்தாவையே கடித்துக் கொடுக்க வைத்ததுண்டு. சுத்தியலைக் கொண்டும் உடைத்ததுண்டு.
அழகப்பன் தனது இடது கைக் கட்டை விரலை கண் முன் நிறுத்திப் பார்த்துக்கொண்டார். அந்த வடு இன்னமும் மறையாமல் அப்படியேதான் இருக்கிறது. அந்த வடுவுக்கும் பொரிவிலங்காவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது அழகப்பனுக்கும் அம்மாத்தாவுக்கும் மட்டும்தான் தெரியும்.
அம்மாத்தாவின் பொரிவிலங்காவை ஆகக் கடைசியாக சாப்பிட்டது அப்போதுதான். பத்து வயது இருக்கும் அழகப்பனுக்கு. அம்மாத்தா மற்ற பலகாரங்களைச் சுட்டு வைப்பதில் காட்டிய நாட்டம் அழகப்பனுக்காக பொரிவிலங்காவைக் கடித்துக் கொடுப்பதில் தற்காலிகமாக இல்லாமல் இருந்தது. அம்மாத்தான் இல்லையென்றால் என்ன; சுத்தியல் உண்டே என்று பொரிவிலங்காவைக் கீழே வைத்து சுத்தியலோடு உட்கார்ந்த அழகப்பனுக்கு அப்போது மிகப்பெரிய சவாலாக இருந்தது, சுத்தியலால் நொருக்க பொரிவிலங்கா அங்கும் இங்கும் உருண்டு போகாமல் ஒரே இடத்தில் இருத்தி வைப்பதுதான்.
இடது கைக் கட்டை விரலாலும் ஆள்காட்டி விரலாலும் தரையில் அழுத்திப் பிடித்து மற்றொரு கையால் சுத்தியலைக் கொண்டு ஓங்கி அடித்ததில் உடைந்து போனது அழகப்பனின் கட்டை விரல்தான். பொரிவிலங்கா அன்று தப்பித்திருந்தது. அதற்குப்பிறகு அம்மாத்தாவே அழகப்பனுக்குப் பொரிவிலங்காவைக் கடித்துக் கடித்து உடைத்துக் கொடுத்துவிட்டுத்தான் அடுத்த வேலையைக் கவனிப்பாள்.
அடுத்த ஆண்டெல்லாம் பொரிவிலங்காவைச் செய்து கொடுக்க அம்மாத்தா இல்லாமல் போயிருந்தாள். அம்மாத்தாவின் கைப்பக்குவம் ஆத்தாவுக்கும் வரவில்லை; வள்ளியம்மைக்கும் வரவில்லை.
அழகப்பனுக்குச் சாவதற்குள் இன்னொரு முறை அம்மாத்தா பொரிவிலங்கா மாதிரியே ஒன்றை வாயில் போட்டுக் கொண்டால்தான் செத்தபின்பு அவரது ஆத்மா நிம்மதியடையும்.
அம்மாத்தா மாதிரியே பொரிவிலங்கா கேட்டுப் பயனில்லை. அழகப்பன் காலம் தாழ்ந்து போனாலும் கடைசியில் உணர்ந்துவிட்டபடியால் ஒரு முடிவுக்கு அவர் வந்தாக வேண்டிய நிலையில் இருந்தார்.
“நானே பொரிவிலங்காவைச் செய்து காட்டுகிறேன்!”
தீபாவளிக்குப் புது உடுப்புகளை எடுக்க வீட்டிலிருந்த அத்தனைப் பேரும் கிளம்பியிருந்தனர்; அழகப்பனைத் தவிற. அழகப்பன் மிக ரகசியமாகப் பொரிவிலங்கா செய்ய அதுதான் உகந்த நேரம். பூங்கோதைக்குத் தெரிந்தால் “உங்களுக்கு எதுக்கு மாமா இந்த வேலை,” என்று அழகப்பனை சமையலறையிலிருந்து மரியாதையோடு விரட்டிவிடுவாள்.
நினைவுக்கு எட்டினதை வைத்தும் அக்கம்பக்கத்துச் சமவயதுக் கிழவிகளிடம் விசாரித்தும் பாசிப்பெயர் மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை, §Å÷츼¨Ä, கறுப்புச் சீனி பாகு என்று சமையலற்கட்டைக் கலக்கியெடுத்துக் கொண்டிருந்தார் அழகப்பன். ஒருமணி நேர வேலையை மூன்று மணி நேரத்துக்கு நீட்டியடித்து ஒருவழியாக மக்கள் திரும்புவதற்குள் பொரிவிலங்காவை உருண்டை பிடித்துத் தட்டில் வைத்து அறையில் வைத்துக்கொண்டார்.
“யாருக்கும் நான் பொரிவிலங்கா உருண்டையைத் தரமாட்டேன்! இது அம்மாத்தாவின் பொரிவிலங்கா”.
அழகப்பன் யாருக்கும் தெரியாமல் தான் செய்த பொரிவிலங்காவை அறைக்கதவைப் பூட்டிக்கொண்டு சாப்பிட்டு மகிழ்ந்தார். சுவை ஒன்றும் பிரமாதமாக இல்லாவிட்டாலும் அம்மாத்தாவின் கைப்பக்குவத்தைî சிந்தையில் நிறுத்திச் செய்த பொரிவிலங்கா அழகப்பனுக்கு அதே ருசையைத்தான் தந்தது. இருக்கிற மிச்சசொச்சப் பல்லைக் கொண்டு உருண்டைகளை உடைக்கமுடியவில்லை. அம்மாத்தாவின் பற்கள் மட்டும் எப்படித்தான் என்பது வயது வரை உறுதியாக இருந்ததோ? பழைய வழிதான் ஒன்று இருக்கிறதே?
அடிக்கடி ஸ்டோர் ரூமில் இருந்து சுத்தியல் காணாமல் போய்க்கொண்டிருந்தது.
பூங்கோதை நேற்றையிலிருந்து சன்னலுக்குத் திரையைப் போடச் சொல்லி தமிழவேளை நச்சரித்துக்கொண்டிருந்தாள். சரி கொண்டுவா என்று திரைச்சீலையை வரவேற்பறையில் போட்டுவிட்டு கம்பி அடிக்க சுத்தியலைத் தேடித் திரிந்துகொண்டிருந்தான்.
“பூங்கோத, சுத்தியல் எங்க? ஸ்டோர்ல காணம்?”
மெதுவிருக்கையில் லாவகமாகப் படுத்திருந்த பாரதி, “அப்பா, தாத்தாத்தான் சுத்தியல எடுத்துப் போனாரு. நான் பாத்தேனே,” என்று சாட்சி சொன்னான் தமிழவேளிடம்.
அழகப்பனின் அறையில் நுழைந்துத் தேடிப்பார்த்ததில் கட்டிலுக்கடியில் ஒளிந்து கிடந்தது சுத்தியல். அதோடு உபரியாக அழகப்பனின் அம்மாத்தா நினைவுப் பொரிவிலங்கா உருண்டைகளும் தமிழவேளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தன.
– மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் 2012ஆம் ஆண்டின் பேரவைக் கதைகள் சிறுகதைப் போட்டியில் தேர்வு பெற்றது.