அமைதி – ஒரு பக்க கதை





‘’உங்களைப் பார்த்திட்டுப் போகணும்னு சுந்தரம் வந்தாரு, இதோ இப்பதான் போறாரு’’, வாசற்படியை மிதித்தபோது பக்கத்து வீட்டம்மா இராமநாதனிடம் கூறினாள்.
அதற்குள் வெடுக்கென அமுதா சொன்னாள். ‘இதப் பாருங்க, உங்க நண்பர் வர்றப்ப எல்லாம் ஆயிரம், ஐநூறு வாங்கிட்டுப் போறார். இதுவரைக்கும் நீங்க செய்தது போதும். இப்ப வந்தார்னா . ‘எங்கிட்ட சல்லிக்காசு இல்லை. என்னைத் தேடி வராதே’னு சொல்லிடுங்க’’
‘’பாவம்டி, சம்சாரத்தை இழந்திட்டு தனி ஆளா நிறகிறான். எதோ நம்மால முடிஞ்து’ என அவர் சொல்லி முடிக்கவிலிலை. அதற்குள் அவள் மறுபடியும் வெடித்தாள்.
அன்று சாயந்திரமே மீண்டும் சுந்தரம் வந்தார். இருவரையும் கூப்பிட்டார்.
‘என் மனைவியோட எல்.ஐ.சி. பணம் இன்னிக்குத்தான் கிடைத்தது. இதுல ஒரு லட்ச ரூபா இருக்கு. நாளைக்கு உங்க பெண்ணோட கல்யாணத்திற்கு ஏதோ என்னால முடிஞ்ச உதவியா இருக்கட்டுமே’ என்றார்
அமுதாவோ உறைந்து போய் நின்றாள்.
– வி.அங்கப்பன் (26-11-2008)