அபஸ்வரம்

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இருவருமாக நீராவிப் படகில் ஏறினார்கள். அவன் அவளின் கையைப் பிடித்து மிகச் சாவதானமாகப் படகில் ஏற்றினான். நீராவிப் படகு தளும்பி ஆடுகையில் குறுக்கே இடப்பட்டிருந்த மிதி பலகையில், சேலையை முழங்கால் வரையிலே தூக்கியபடி மெதுவாக அவள் நடந்து படகிற்குள்ளே காலை வைத்ததைப் பார்க்க அவனுக்கு வேடிக்கையாய் இருந்தது. “இந்த வயதிலும் இத்தனை பயமா?” என்று கேட்க நினைத்தவன் சொற் களைப் பலவந்தமாக உதட்டினுள் விழுங்கியபடி அலட்சிய மாக மிதி பலகையிற் கால் வைத்துப் படகினுள் இறங்கினான்.
அவள் அவனைப் பதற்றத்தோடு நோக்கி, “கவனம், மெல்ல, மெல்ல,” என்று ஜாக்கிரதைப் படுத்தினாள். அது அவனுக்கு எரிச்சலாய் இருந்தது. பிரயாணிகள் தன்னையும், அவளையுமே வேடிக்கையாகப் பார்ப்பதாய் எண்ணிய கூச்சத்திலே அவன் தலையைக் குனிந்தபடி நடந்து சென்று, ஆண்கள் பக்கத்து ஆசனத்திலே அமர்ந்து கொண்டான்.
மறு பக்கத்தில் இருந்த ஆசனத்தில் அவனுக்கும் இடத்தை ஒதுக்கிவிட்டு, அவன் தன் பக்கத்திலே வந் திருப்பான் என்று எதிர்பார்த்திருந்த அவளுக்கு ஏமாற்ற மாகி விட்டது. கருகிய முகத்தை நிமிர்த்தி அவள்அவனை நோக்கினாள். தனக்குப் பக் கத்திலே இருந்த ஆசனத்தை அவ னுக்குக் காட்டி வந்திருக்குமாறு கண்களால் சைகை காட்டினாள்.
அவன் பலவந்தமாகத் தலையை அசைத்து விட்டு மறுபக்கம் திரும்பிக் கடலையே நோக்கினான். தனது பிடரியினுள்ளே அவளின் கூரிய பார்வை புகுந்து துளைத் துத் துளைத்து மேலே மேலே செல்வது போன்ற உணர்வு ஏற்படுகையில், அவன் அருவருப்போடு கடலுக்கப்பால் உள்ள தொடுவானத்தில் தனது பார்வையோடு சிந்தனை யையும் மேயவிட்டான்.
படகினுள்ளே ஏறுபவரதும், இடந்தேடுபவரதும் இரைச்சல்கள், குழந்தைகளின் கதறல்கள், கூச்சல்கள் என்ற ஒன்றிலும் கவனத்தைச் செலுத்தாது, அவன் அமர்ந்திருக்கும் கோலத்தைக் கனிவோடு அவள் பார்த் துப் பார்த்துப் பூரித்து ஏங்கினாள், ஏங்கிப் பூரித்தாள்.
அலையலையாக நெளிந்த கிராப்பு” மயிரும், கம் பீரமான நாசியும், செக்கச் செவேலென்று சிவந்த மேனியும், திரணை திரணையான சதைபொலிந்த உடலும் அவளின் உள்ளத்தையே கிறங்க வைத்தன. ” இத்தனை யும் எனக்கே சொந்தம்” என்று பூரித்தாள் அவள்…
அவளின் கண்கள் கலங்கின. உள்ளம் பொரும் உதடு துடித்தது. ஆனால், அடங்கிக் குமுறும் ஆறாக அவள் தன்னுள்ளே ஓடுங்கி ஆழ்ந்து போனாள். எத் தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு தனது வாழ்க்கையில் ஏற்பட்ட ஏதோ ஒரு தவறை நோக்கி அவளின் மனம் கசிந்து உருகியிருக்க வேண்டும்.
நீராவிப் படகு கட முட சப்தத்தோடு புறப்பட்டுக் குலுங்கி ஆடியபடி சென்றது. சுழிநிறைந்த சமுத்திரத் தில் புயலினிடையே வாழ்க்கைப் படகினைச் செலுத்திச் செல்கையில் ளமைக் கனவுகள் எட்டிச் சென்று மறைந்து விடுவது போல, நயினாதீவு நாகம்மாளின் கோபுரம் சிறிது சிறிதாக மறைந்து கொண்டிருந்தது. அவளின் கைகள் தம்மை அறியாமலே சிரசில் குவிந்தன. ‘அம்மாளாச்சி ! பிள்ளையில்லாக் குறையைத் தீர்ப்பாய் என்று மாத்திரம் நான் நாகப்பிரதிஷ்டை செய்யவில்லை. வயதிற்கிடையில் உள்ளத்திற்குக் காஷாயம் கொடுத்து உடலாலே இல்வாழ்வு வாழ்ந்து…தூ…!
அவனுடைய மேனி தீயாய் எரிகிறது. நெஞ்சு பட படவென்று அடித்துக் கொள்கிறது. நெஞ்சினுள்ளே ஒளித்திருந்த அந்தராத்மா குருதிக் கண்ணீர் வடிக்கிறது…
இருவரும் மிகவும் நெருங்கிய அத்தியந்த நண்பர் கள். ஒருவருக்கு மற்றவரின் இரகசியங்கள் என்றுமே மறைக்கப்பட்டதில்லை. சாவிற் செத்து, நோவில் நொந்து வாழும் அகநக நட்பு அது.
இருவரும் – புத்தளம் காரைத்தீவின் சூனியம் படிந்த, வெங்கிறான் வெளிக்கூடாக நடந்து கொண்டி ருக்கிறார்கள். மாலை மங்கி மடிகின்ற வேளை.
“ராஜா! இந்த விஷயத்தில் நீ ஒன்றும் தடை யாக வராதே. நான் தீர்மானித்துவிட்டேன். உண்மை யான காதல், வயதை, சமூக அந்தஸ்தை, உயர்வு தாழ்வை எல்லாம் கடந்தது என்பது என் உறுதியான நம்பிக்கை. செல்வராணிக்கும் எனக்கும் ஒன்பது வயது வித்தியாசம் இருக்கலாம். ஷேக்ஸ்பியர், நெப்போலி யன், சாமுவேல் ஜோன்சன் வரலாறுகள் எல்லாம் உனக்குத் தெரிந்தவை தானே? தம்மிலும் மூத்த பெண் களை அவர்கள் மணந்து இன்பமாய் வாழவில்லையா? தயவுசெய்து தடை சொல்லாதே. செல்வராணி இல்லாமல் நான் வாழமுடியாது. கைகளை மேலே தூக்கி, உணர்ச்சியால் கழுத்து நரம்புகள் புடைத்து நிற்க, அவன் படபடக்கிறான்.
ராஜா அமைதியாகச் சிரிக்கிறான். “மடையா ! உனது குழந்தைத் தனமான உணர்ச்சிகளைத் தாம்பத் திய வாழ்க்கையிலுங் கொட்டி உன் எதிர்காலத்தைப் பாழடிக்காதே. உனது உணர்ச்சிகள் கவிதைகளாய் மலரலாம். கதைகளாக வடிவம் கொள்ளலாம். ஆனால், அவை வாழ்க்கையாக உருக்கொள்வது நடவாத காரியம்”
நீ என்னடா சொல்கிறாய்? உணர்ச்சிகள் தாம் உயர்ந்த இலட்சியங்களாய் உருவங்கொண்டு வாழ்க் கையை அர்த்தமுள்ளதாய் ஆக்குகின்றன. வெறும் உடலல். அதன் இளமையால் மாத்திரந்தான் உண்மை யான காதல் உருக்கொள்ளும் என நான் நினைக்கவில்லை. முப்பத்தொரு வயதான செல்வராணியின் உடலையா நான் நேசிக்கிறேன்? அவளின் உள்ளத்தை, பண்பை, நீக்கமற நிறைந்துள்ள அன்பைத்தான் நான் நேசிக்கி றேன். உயிரெனப் போற்றுகிறேன். அவளின் இதயக் கோயிலிலே குடி கொண்ட காதற் தெய்வத்திற்கு என்னையே நான் அர்ப்பணித்து விட்டேன்.’ அவன் ஒரு பைத்தியக்காரனைப்போல் துடித்து அழுது உருகிப் போய்ப் பட படக்கையில் ராஜா அடங்கி அமைந்து போகாமல் என்ன செய்வது?
என்றாலும் ஈனஸ்வரத்தில் அவன் சொல்கிறான். “இனி உன் இஷ்டம். ஆனால், இன்னும் பத்துப் பதி னைந்து வருடங்களில் அவள் முதியவளாகி இன்றைய அழகுருவம் அழிந்து நிற்கும்போது, இளமையின் வாயி லிலே நிற்கும் நீ இழந்துவிட்ட உன் பெருநட்டத்தை நினைத்துக் கழிவிரக்கப்படாமல் இருப்பாயானால் அன்று… நல்லது… அந்த நாள் வருவதாக. உனக்கு என் வாழ்த்துக்கள்….
“எனக்கும் அவருக்கும் திருமணம் நடந்தது. ஒன் றாகப் படிப்பித்த சக ஆசிரியர்களாகிய நாம் வாழ்க் கைப் பாதையிலும் சக பிரயாணிகளானோம். எமது திருமணத்தைக் கண்டு மனப்பூர்வமாக வாழ்த்தியவர் களிலும், மனந்திறந்து சிரித்தவர்களே அநேகர். ‘அடி, பைத்தியக்காரி! உன் தம்பிக்குச் சரியான ஒருவரை நீ விவாகஞ் செய்து எப்படித்தான் வாழ்க்கையை ஓட்டப் போகிறாயோ? “பெண்கள் செடிகள் போன்றவர் கள், விரைவில் வளர்ந்து முதிர்ந்து விடுவார்கள். ஆண்களோ மரங்களைப்போலப் படிப்படியாக வளர்ந்து முதிர்கிறார்கள்” என்று மகாகவி தாகூர் கூறியதை உனக்கு ஞாபகப்படுத்துகிறேன். நீ வாழ்க்கையின் பிற் பகலில் நிற்கும்போது உன் கணவர், வாழ்க்கையின் மத்தியான வேளையில் நின்று ஏங்குவார். அப்போது தான் உன் பிழை உனக்கு விளங்கும்” என்று என் நெருங்கிய தோழி கமலா என் திருமணத்தன்று இடித்துரைத்தாள்.
“அடி பாவி ! வாழ்த்த வேண்டிய இந்த வேளையில் இப்படிச் சாபம் போடுகிறாயே” என்று அவள் மீது சீறி விழுந்தேன். ஆனால், இன்று……..”
அவரின் ஆசை சில வருடங்களிலேயே தீர்ந்து விட் டது. அவரின் இளமை வெறிக்கு, வேகத்திற்கு என் னால் ஈடுகொடுக்க முடியாது போய்விட்டது.
“ஆமை – முயல் ஓட்டப் பந்தயமாகிவிட்டது எங் கள் கதை. ஆனால், ஒரு திருத்தம். முயல் என் கதை யிலே முயலாகவே இருந்தது. ஆமையால் நகரத்தான் முடிந்தது!'”
“நான்கு முறை கருப்பமுண்டாகி நான்கு முறை யும் சிதைவு ஏற்பட்டு நான் நோயின் வடிவமாகி விட் டேன். காலம் என்மீது முதுமையாய்ப் படர்ந்து செல் கையில் அவர் என்னை விட்டு விலகி விலகி எங்கோ செல்லத் தொடங்கினார்.”
“அவருக்குச் சமமாசு இளமை பொருந்தியவளாய்ச் சிறுமி போல நடந்தால் அது அவருக்குக் கேலியாகி விடும். “என்ன ? பதினெட்டு வயதுச் சிறு பெண் என்ற எண்ணமோ?” என்று குத்திக் காட்டுவார். வயதிற் சூரிய பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொண்டால் “ஏது நீ கிழவியாகிவிட்டால் நானும் உன்னைப்போல் கிழட்டு வேடம் பூண வேண்டுமோ?” என்று சீறுவார். “ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்” என்ற கதைதான்.”
“எங்கள் வாழ்க்கை நரகமாகி விட்டது. அவரைத் திருப்திப்படுத்த எனது எல்லாமே அர்ப்பணிக்கப்பட்டும் போதாது என்ற நிலையில் கடவுளிலே பாரத்தைப் போட்டேன். என் வயிறு வாய்த்து ஒரு குழந்தை பிறந் தால்…..
“சோதிடர்கள் நாக தோஷம் என்று கூறி நாகம் மாளுக்கு நாகப் பிரதிஷ்டை செய்யச் சொன்னார்கள். அதை இவரிடம் சொன்னதும் அவர் செல்வராE ! எனக்குக் குழந்தை பிறக்கும். ஆனால், எங்களுக்குக் குழந்தை பிறக்கும் என்று இன்னமும் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?” என்று சொல்லிக் கலகலவென்று சிரித் தார்.”
‘”அந்தச் சிரிப்பில் நான் எரிந்து போயிருப்பேன். ஆனால், இந்தக் கட்டைக்கு உயிர் கெட்டி. ரோசத்தை விடுத்துக் கெஞ்சி மன்றாடி இவரை இன்று அழைத்து- வந்து நாகப் பிரதிஷ்டை செய்து திரும்புகின்றேன்.”
அவளின் சிந்தனை கண்ணில் உருகி வழிய முயல்கை யில் மீண்டும் இருவரின் கண்களும் சந்திக்கின்றன.
பழைய ஏக்கம்…… பழைய வெறுப்பு
பழைய எதிர்பார்ப்பு…… பழைய குரூரம்!
பழைய அன்பு…… பழைய அலட்சியம்!
புங்குடுதீவுத் துறை வந்து விடுகிறது. அவன் துள் ளிப் பாய்ந்து இறங்கி அவளுக்குக் கை கொடுக்கிறான். அவள் தனது மாமிச மலையை மிதிபலகையில் ஏற்றித் தரையில் இறக்குகிறாள்.
அவன் கம்பீரமாக விரைந்து நடக்க, அவள் இரைக்க இரைக்க ஓட்டமும் நடையுமாக அவனைத் தொடர்கிறாள் இன்னும் எத்தனை காலமோ?
– ஜோதி, 1968-03-05.
– கடல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1972-6-27, நண்பர் வெளியீடு, யாழ்ப்பாணம்.