அந்த ஒரு சொல்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 11, 2026
பார்வையிட்டோர்: 9 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஜன்னற் கம்பியை வளைத்துப் பிடுங்கிவிட்டு அறைக்குள் ஓசைப்படாமல் குதித்துக் கதவை நோக்கி, அந்தக் கும்மிருட்டில், நகர்ந்து கொண்டிருந்த அந்த மலைபோன்ற பாய்ச்சலாகப் உருவத்தை, கட்டிலிற் கிடந்தபடி ஒரே பாய்ந்து சாய்த்துக் கட்டிலோடு நசித்துப் பிடித்துக் கொண்டார் மரியதாஸ்.

அந்த உருவம் பலங்கொண்ட மட்டும் பிடி திமிறிப்பார்த்துவிட்டு மதயானை போன்ற மரியதாஸின் கையில் சோர்ந்து அடங்கிவிட்ட சமயம். எதிரே சுவரில் கிடந்த மின்விளக்குப் பொத்தானை சட்டென்று ஒருகையால் அமுக்கி விட்டு மீண்டும் ஆளைப்பற்றிக்கொண்டார் அவர்.

ஒருவர் பார்த்துக் முகத்தை ஒருவர் மின் விளக்கு வெளிச்சத்தில் கொண்டனர். தவிப்பும் வெட்கமுமாகப்பதறி விழித்த அந்த மூகத்தைக் கனிவோடுபார்த்தார் மரியதாஸ். மறுகணம் தள்ளி நின்று திடீரென்று கையைவிட்டெழுந்து சற்றுப் பின் கொண்டவர், ”மாணிக்கம்! எழுந்து அமருங்கள்” என்று நண்பனைப்போல் அன்பு பொங்க வேண்டினார்.

மாணிக்கத்துக்கு அதிர்ச்சி தாங்கவில்லை. “அடே மாணிக்கம் போடா, வாடா” என்ற அவமதிப்பு அழைப்புக்களையே வாழ்நாளெல்லாம் கேட்டுப் பழகிய மாணிக்கத்துக்கு அவன் வாழ்வில் முதல் முறையாக மதிப்புக் கொடுத்து, அதுவும் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு திருட்டுத் தனமாக வீடு புகுந்த சந்தர்ப்பத்தில் “எழுந்து அமருங்கள் ” என்று வீட்டுக் காரனே அன்போடு சொல்வதென்றால்……?

எழுந்த மாணிக்கம் மறுகணம் மரியதாஸின் காலடியில் நடுமரமாக வீழ்ந்து அவர் கால்களைக் கட்டிக் கொண்டு விம்மினான். மரியதாஸ் அன்போடு அவனை எடுத்து நிறுத்தி மார்புறத் தழுக்கொண்டார். மரியதாஸின் முதுகுப் புறத்தில் மாணிக் கத்தின் கண்ணீரும், அவர் மார்புப் புறத்தில் அவன் பற்றிய கடந்தகால ஞாபகங்களும் ஓடலாயின. 

ஒரு வருடத்துக்கு முன்னர் மரம் அரியும் ஆலையொன் றில் வேலை செய்தவன் மாணிக்கம். ஒருநாள் ஏதோ தகராறில் ஆலை முதலாளி அவனைத் தாக்கப் புகுந்தபோது மாணிக்கம் அவனை நையப் புடைத்து விட்டான். அதனால் 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேர்ந்து, விடுதலை யானதும் வேலை தேடித் தெருத் தெருவாகத் திரிந்தான் அவன். யாரும் துணிந்து அவனுக்கு வேலை கொடுக்க வில்லை. சமூகத்தின் அச்சமும், அலட்சியமும், வயிற்றுக் கொடுமையும் சமூகவிரோதிகளின் பட்டியலில் அவனையும் சேர்த்து விட்டது. ஆம் அவன் திருடத் தொடங்கிவிட்டான். 

”மாணிக்கம் நான் பயிரிடும் ஐயாயிரம், கன்று தோட்ட நிலத்தில் ஓராயிரம் கன்று நிலத்தைக் குத்தகைக்கும் 500ரூபா கைமுதலைக் கடனாகவும் தருகிறேன்” என்று மரியதாஸ் சொல்லி முடித்த போது மாணிக்கம் மீண்டும் அவர் கால்களில் விழ முயன்று கொண்டிருந்தான். 

– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *