அக்கரைக் கைமணம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 23, 2024
பார்வையிட்டோர்: 1,072 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புவனா, தான் அரைத்தெடுத்த சட்னியைத் தொட்டு நாவில் வைத்துப் பார்க்க, உப்பும் உறைப்புமாய் சுவை நன்றாகவேயிருந்தது. எத்தனைதான் கவனமாய்ச் சமைத்தாலும் கணவன் ரமேஷ் குறை சொல்வது வழக்கமாகி விட்டது. 

திருமணமான புதிதில் ஒவ்வொருத்தர் மனைவி கழனிநீரை வார்த்தாலும் ‘அமிர்தம்’ என்று கொண்டாடுவார்களாமே! இவர்களுக்கும் மணமாகி மூன்று மாதங்கள் ஆகியிருக்க, அவ்வப்போது ரமேஷ் அவளை மட்டந்தட்டுவது புவனாவிற்கு ஒருகுறைதான். 

குறை சொல்ல முடியாத பெண்ணுதான் அவள் – அன்பு, பரிவான புள்னகை, சுறுசுறுப்பு, சுத்தம் என்று எதிலும் குறையில்லை. வீட்டை நறுவிசாக வைத்திருப்பாள். தையல், பின்னல் என்று ஆர்வமிருந்ததால் அவளது பல படங்கள், கூடத்தை அலங்கரித்தன. திருமணத்திற்குப்பின் கணவன், ‘இது கொஞ்சம் காரம் ஜாஸ்தி. உப்புப் போட மறந்தாச்சா? சப்புன்னு இருக்கு…’ என குற்றஞ்சாட்டுவதற்குப் பயந்து அவள் சதா சமையலறையிலேயே கழிக்க, கைவேலைக்கு நேரம் இல்லை. 

தோசைமாவு இருக்க, ரமேஷ் வந்ததும் வார்த்து சூடாகப் பரிமாறலாம் என்று நினைத்தவள், குளிக்க ஆயத்தமானாள். உடம்புக்கு ஊற்றி, உடை மாற்றி வீட்டின் பின்புறம் பூத்திருந்த பிச்சிமொட்டுகளைப் பறித்துத் தொடுத்து வைத்தவள், ‘பளிச்’சென்று நின்றாள். 

அவனுக்கு டீ தயாரிக்கும்போதுகூட அவள் மனம் படபடக்கும். 

‘மனைவியை ஒரேயடியாய் மெச்சினால், தலையில் ஏறி உட்கார்ந்திடுவாள் என்ற பெருவாரியான கணவன்மாரின் அறியாமையா…இல்லை இவர் சுபாவமே அப்படித்தானா…?? என எண்ணியபடி நின்றாள். 

ரமேஷ் உற்சாகமாய் வந்து சேர்ந்தான். தேநீரைக் குறை சொல்லாது குடிந்து முடித்தவன், சொன்னான்: ”இன்னிக்கு மிஸ்டர் தாஸ் வீட்டில் நமக்கு டின்னர்'” தாஸ் அவனுக்கு மிகப் பிடித்த மேலதிகாரி, 

“தோசைக்கல் போட்டிருக்கேன்.” 

“அதெல்லாம் வேண்டாம். நீ ஜோரா டிரஸ் பண்ணிட்டுக் கிளம்பு” 

ரோஜா நிற பனாரசும், முத்துச் சரமுமாகக் கிளம்பினாள் புவனா. வழியில் சில பழங்களும் வாங்கி தாஸின் வீடு போய் சேர்ந்தனர். வரவேற்றுப் பேரிய தாஸ் தம்பதியரை புவனாவிற்கு மிகவும் பிடித்துப் போயிற்று. பல வருடங்களாகத் தமிழ்நாட்டிலேயே இருந்ததில் கொச்சையும் கொஞ்சலுமாக, ஆனால் சரளமாகத் தமிழ் பேசியதாஸின்மனைவியுடன் வீட்டைச் சுற்றிப் பார்த்தாள் புவனா. 

“இந்தப் புத்தகம் படிச்சிட்டு இரு பாப்பா. தா ஏதாச்சும் ஸ்வீட் செய்துர்ரேன்.” 

“நானும் ஒத்தாசை பண்ணட்டுமாம்மா? என்ன ஸ்வீட்?” 

“எம்மக மூணு மாசம்… உண்டாயிருக்கு. பூனா போய் பார்த்திட்டு நேத்துத்தான் இங்க வந்தோம். வீட்ல ஜாஸ்தி சாமான் இல்லே. சேமியா வாங்கச் சொன்னேன்… இவரு மறந்தாச்சு…” “கொஞ்சம் ரவை இருந்தாப் பாயாசம் வைக்கட்டுமாம்மா?” “உனக்குச் சிரமம் வேணாம்மா…” 

“பத்தே நிமிஷம்தாம்மா…? 

“தாங்க்ஸ் கண்ணு. நான் டேபிள் செட் பண்றேன்!”. 

ரவையை நெய்யிட்டு வறுத்து, பாலில் வேகவிட்டு 2 சொட்டு பாதாம் எஸன்ஸ், முந்திரிப் பருப்பு, சீனி சேர்த்து பத்தே திமிடத்தில் இறக்கினாள். 

“நல்ல வாசனை. ஜோரா இருக்கு” என்ற அம்மா. அனைவரையும் சாப்பிடவும் அழைத்தாள். 

பேச்சு,சிரிப்பு என்று ரசித்துச் சாப்பிட்டு, கடைசியாய்ப் பாயசம் பரிமாறப்பட்டது. கைமணம் வேறாய் இருந்ததாலே தாஸ் “ம்… ரொம்ப நல்லாயிருக்கு…” என்று ரசித்து உறிஞ்சினார். 

”அம்மா… கைமணங்கறது இதுதான். பிரமாதம்… ” என்று சொன்னதோடு ரமேஷ் நிறுத்தியிருந்தால் தேவலை.. தன் மனைவி ஒருமாதிரியாக அதிகாரியின் மனைவியைப் பார்த்து விழிப்பதைப் பார்த்தவன் தொடர்ந்தான்: 

‘புவனா இன்னும் சமையலில் சுமார் ரகந்தான். அம்மாகிட்ட கேட்டுப் படிச்சிக்க புவன்… நல்லநாள் கிழமையில் செய்யலாம்…” என்க, தாஸின் மனைவி சிரித்து விட்டார். 

“என்ன ஜோக்?” எப்பத்துடன் எழுந்த தாஸ் கேட்டார்.

“பாயசம் புவனு பாப்பா வெச்சது..” பேசுகையிலேயே அம்மாலின் சரீரம் சிரிப்பில் குலுங்கியது. 

அதுவரை புன்னகையோடு இருக்க முடிந்த புவனாவினால், கணவன் முகம்போன போக்கைப் பார்த்ததும் சிரிப்பு வந்து விட்டது. 

“நிஜமாவா?” 

அசடு வழிய ரமேஷ் கேட்க – 

”இன்னுங் கொஞ்சம் போட்டுக்கோங்க” என்று விஷமத்துடன் உபசரித்தான் அவள்! 

மறுநாள் மனைவி தோசையுடன் பரிமாறிய மல்லிச்சட்னியை சாப்பிட்டு, மன்னிப்புக் கேட்கும் புன்னகையுடன் “ரொம்ப நல்லாயிருக்கு புவனி” என்றான் ரமேஷ்! 

– உயிர்நாடி, ஜூன் 1992.

– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *