ஹவுஸ் வொய்ஃப்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 6, 2021
பார்வையிட்டோர்: 3,103 
 

மளிகைக் கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது.. லிஸ்ட்டை கொடுத்துவிட்டு இருக்கையில் அமர்ந்த பிரபு அப்போதுதான் கவனித்தான், பக்கத்து இருக்கையில் காத்திருப்பவரைப் பார்த்தால் அவன் நண்பன் ராஜேஷ் போலவே தோன்றியது..

“ஹலோ சார்! நீங்க ராஜேஷ் தான?”

குரல் கேட்டு திரும்பியவன்,

“டேய்! பிரபு!! நான் தான்டா.. நீ எங்க இங்க?”

“பக்கத்துலதான்டா வீடு.. இந்த ஏரியாவுக்கு வந்து மூணு மாசம் ஆச்சு”

“அப்படியா நான் இந்த ஏரியாவுல தான் ஆறு வருஷமா இருக்கேன்.. இவ்ளோ நாளா உன்ன பாக்கவே இல்லையே!!”

“ஆச்சரியமா தான் இருக்கு!! அப்புறம் சொல்லு எப்படி இருக்க? எவ்வளவு நாளாச்சு உன்னை பார்த்து!!”

“நான் ரொம்ப நல்லா இருக்கேன் டா.. நீ எப்படி இருக்க? ஃபேமலியில எல்லாரும் எப்படி இருக்காங்க?”

“ம்ம்.. எனக்கென்னடா நல்லா இருக்கேன்.. வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்க.. வொய்ஃப் பக்கத்து ஸ்கூல்ல டீச்சரா வொர்க் பண்றாங்க.. ஒரு பையன், ஒரு பொண்ணு.. ரெண்டு பேரும் அதே ஸ்கூல்லதான் படிக்கிறாங்க..”

“சூப்பர்.. எனக்கு ஒரே பொண்ணு தான் செவன்த் படிக்கிறா..”

“வைஃப் என்ன பண்றாங்க?”

“மேரேஜுக்கு முன்னாடி பேங்க்ல ஒர்க் பண்ணிக்கிட்டு இருந்தா.. மேரேஜுக்கு அப்புறம் ரிசைன் பண்ண சொல்லிட்டேன்.. அவ வேலைக்கு போறதில எனக்கு விருப்பம் இல்லடா.. வீட்ல இருந்து

ஃபேமிலிய பார்த்துக்கட்டும்..”

“ஓஹோ உன் வொய்ஃப் இதுக்கு ஒத்துகிட்டாங்களா?”

“அப்பப்ப சண்டை போடுவா.. ஆனா நான் ஸ்ட்ராங்கா சொல்லிட்டேன்.. வேலைக்கு போயி என்ன ஆகப்போகுது?! வீட்ல ஃப்ரீயா இருக்கலாம் இல்ல..”

“அது சரி! அப்புறம் பாப்பா எப்படி படிக்கிறா?”

“பாப்பா பயங்கர பிரில்லியன்ட்.. கிளாஸ் டாப்பர் வேற!”

“அப்படியா!! வெரி குட்!!”

“அடுத்த வருஷத்துல இருந்து ‘ஐஐடி’, ‘நீட்’ இரண்டுக்கும் கோச்சிங் அனுப்பலாம்னு இருக்கேன்..”

“அதுக்குள்ளயேவா!!”

“அவன் அவன் இதுவே லேட்டுங்கறான்

“பிரபு.. என் பொண்ண நல்லா படிக்க வச்சி பெரிய்ய ஆளாக்கணும். அதான் என்னோட லட்சியம்..”

“ஃப்ரீயா வீட்ல இருந்து ஃபேமிலிய பார்த்துக்கப்போற பொம்பள பிள்ளைக்கு எதுக்குடா இவ்வளவு மெனக்கெடற?”

அடிபட்ட பார்வை பார்த்தான் ராஜேஷ்.

“சாரிடா.. உன்ன ஹர்ட் பண்றதுக்காக நான் இத சொல்லல.. உன்ன மாதிரி தானே உன் வொய்ஃபோட அப்பாவும் அவர் பொண்ண படிக்க வச்சிருப்பார்.. உன் பொண்ண நல்லா படிக்க வச்சு பெரிய ஆளா ஆக்கணும்னு நினைக்கிற நீ, உன் வொய்ஃபும் ஒரு அப்பாவுடைய பொண்ணுதாங்கறத மறந்துட்டியே!?”

“தேங்க்ஸ்டா பிரபு!!” புதிய தெளிவான மனதோடு வீட்டுக்குக் கிளம்பினான் ராஜேஷ்..

– 12/04/2021 ‘மக்கள் குரல்’ நாளேட்டில் வெளியானது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *