ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 9, 2021
பார்வையிட்டோர்: 3,202 
 

அத்தியாயம்-17 | அத்தியாயம்-18

டாக்டர் சொன்னதைக் கேட்டா ராமநாதனுக்கும், மங்களத்துக்கும் உலகமே இருண்டு விட்டது போல இருந்தது.அவர்கள் இருவரும் ஆடிப் போய் விட்டார்கள். .
ராமநாதன் உடனே அம்மாவை ‘போனி’ல் கூப்பிட்டு “அம்மா I.C.U.டாக்டர் ‘அப்பா நிலை மை இன்னும் மோசமாத் தான் இருக்கு.நாங்க அவருக்கு ‘ஆக்சிஜன்’ வச்சு இருக்கோம்.அவர் B.P., ECG ரெண்டையும் நாங்க ‘மானிட்டர்’ பண்ணி வரோம்.இப்ப நாங்க ஒன்னும் சொல்ல முடியாது இன் னும் மூனு மணி நேரம் கழிச்சு அவர் நாடித் துடிப்பு கொஞ்சம் அதிகம் ஆனாத் தான் நாங்க உங்க ளுக்கு சொல்ல முடியும்.அவர் இப்போ ரொம்ப ‘க்ரிடிகல்லா’த் தான் இருக்கார்’ ன்னு சொல்லி விட்டுப் போய் இருக்கார்.இங்கே நானும் மங்களமும் ரொம்ப கவலைப் பட்டுக் கொண்டு இருக்கோம்.நீங்கோ சுவாமியை வேண்டிண்டு வாங்கோ.ஏதாவது ‘டெவலப்மென்ட்’இருந்தா நான் உங்களுக்கு உடனே ‘போன்’ பண்றேன்ம்மா” என்று சொன்னதும் விமலா ”என்ன சொல்றே ராமநாதா.எனக்கு அப்பா உட ம்பை நினைச்சா ரொம்ப கவலையா இருக்கு” என்று அழமாட்டாத குரலில் சொன்னாள்.

”பார்க்கலாம்ம்மா.நீங்கோ அங்கே தைரியமா இருந்து வாங்கோ.நான் நிச்சியமா உங்களுக்கு அடிக்கடி ‘போன்’ பண்ணி அப்பா ‘கண்டிஷனை’ உங்க கிட்டே சொல்றேன்மா” என்று சொல்லி ‘போனை’ ‘கட்’ பண்ணினார் ராமநாதன்.

ரெண்டு மணி நேரம் ஆனதும் ராமநாதனுக்கு கவலை வந்து விட்டது.

உடனே ராமநாதன் அருகில் இருந்த ஒரு பெரியவரிடம்”சார் I.C.U.லே இருக்கிற டாக்டர் வெ ளியே வராமலேயே இருக்காரே” என்று விசாரித்தார்.

“அவங்க எங்கே வெளியே வாராங்க.என் பொண்டாட்டியும் உள்ளே உயிருக்குப் போராடிக் கிட்டு இருக்கா.அவங்க வெளியே வந்து ஏதாவது சொன்னாத் தானே நமக்குத் தெரியும்.அவங்களும் வெளியே வர மாட்டாங்க..நாமும் உள்ளே போய் பாக்கக் கூடாது.எப்போ போய் கேட்டாலும் இப்போ ஒன்னும் சொல்ல முடியாதுன்னு சொல்லி திருப்பி அனுப்பிடறாங்க.அவ எப்படி இருக்காளோ.எனக்கு ரொம்ப கவலையாய் இருக்கு.பகவான் அனுகிரஹத்தால் அவள் உயிர் பிழைக்கணும்.என்ன ஆகுமோ அந்த பகவானுக்குத் தான் வெளிச்சம்” என்று சொல்லி கண்ணில் நீர் விட்டார் அந்த பெரியவர்.

ராமநாதனுக்கு ‘ஏண்டா இவர் கிட்டே போய் நாம் கேட்டோம்’ என்று இருந்தது.

ராமநாதன் வேறே யாரையும் ஒன்றும் கேட்காமல் மங்களத்துடன் சோ¢ல் உட்கார்ந்துக் கொண்டு சுவாமியை வேண்டிக் கொண்டு இருந்தான்.’அப்பாவுக்கு உடம்பு சீக்கிரமா குணம் ஆகணுமே’ என்று கவலைப் பட்டு வந்தார்.

மூனு மணி நெரம் ஆனதும் I.C.U. வில் இருந்து வெளியே வந்த டாக்டர் “சாரி சார், வொ¢ சாரி சார், உங்க அப்பாவை நாங்க இத்தனை நேரம் முயற்சி பண்ணியும்,அவரை நாங்க காப்பாத்த முடிய லே.அவர் நாடித் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு இப்ப முழுக்க நின்னு விட்டது. அவரை நீங்க கொஞ்சம் ‘லேட்டா’ இங்கே அழைச்சிகிட்டு வந்து இருக்கீங்க.அவருக்கு ‘ஹார்ட் அட்டாக்’ ரொ ம்ப ‘சிவியராக’ வந்து இருக்கு.இன்னும் ஒரு மணி நேரம் முன்னால் நீங்க அவரை இங்கே அழைச்சுக் கிட்டு வந்து இருந்தா நாங்க அவரை எப்பாடு பட்டாவது காப்பாத்தி இருப்போம்.வொ¢ சாரி சார்” என் று ஆங்கிலத்தில் சொல்லி விட்டு I.C.U க்குள்ளே போய் விட்டார்.

டாக்டர் சொன்ன இந்த சமாசாரத்தை கேட்ட ராமநாதனுக்கும்,மங்களத்துக்கும் பூமியே பிளந்து,அதள பாதாளத்துக்கு போய் விழுவது போல் இருந்தது.

அப்படியே அங்கே இருந்த ஒரு சோ¢ல் ‘பொத்’ தென்று உட்கார்ந்து விட்டார்கள் இருவரும்.

ஒரு பத்து நிமிஷம் ஆனதும் ராமநாதன் தன்னை சுதாரித்துக் கொண்டு அம்மாவை ‘போனில்’ கூப்பிட்டு “அம்மா,அப்பா நம் எல்லாரையும் ஏமாத்தி விட்டு கண்ணை மூடிட்டார். ICU டாக்டர் ‘சாரி சார்,உங்கஅப்பாவை நாங்க இத்தனை நேரம் முயற்சி பண்ணியும்,அவரை நாங்க காப்பாத்த முடிய லே.அவர் நாடித் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு இப்ப முழுக்க நின்னுடுத்து.அவரை நீங்க கொஞ்சம் ‘லேட்டா’ இங்கே அழைச்சிகிட்டு வந்து இருக்கேள்.அவருக்கு ‘ஹார்ட் அட்டாக்’ ரொம்ப ‘சிவியராக’ வந்து இருக்கு.இன்னும் ஒரு மணி நேரம் முன்னால் நீங்க அவரை இங்கே அழைச்சுண்டு வந்து இருந்தா நாங்க அவரை எப்பாடு பட்டாவது காப்பாத்தி இருப்போம்ன்னு சொல்லி விட்டுப் போ யிட்டார்ம்மா” என்று சொல்லி முடிக்கவில்லை உடனே விமலா ”என்ன சொல்றே ராமநாதா.அப்பா நம் மை எல்லாரையும் தனியா தவிக்க விட்டு விட்டு போயிட்டாரா.இப்போ நாம என்ன பண்ணுவோம். எனக்கு உலகமே இருண்டுட்டது போல இருக்கே ராமநாதா” என்று சொல்லி அழ ஆரம்பித்தாள்.

கொஞ்ச நேரம் ஆனதும் ராமநாதன் ஹாஸ்பிடல் ‘ரிஸப்ஷனுக்கு’ப் போய் அப்பா வைத்திய செ லவு ஆயிற்று என்று கேட்டு அதை கட்டி விட்டு ‘மார்ச்சுவரியில்’ இருந்து அப்பாவின் ‘பாடி’யை வெளி யே கொண்டு வந்தார்.

ஒரு பெரிய ‘வேனை’ ஏற்பாடு பண்ணி அப்பாவின் ‘பாடி’யை’ அதில் ஏற்றிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள் ராமநாதனும் மங்களமும்.

விமலா வாசலிலேயே காத்துக் கொண்டு இருந்தாள்.

ராமநாதன் அப்பா ‘பாடியை’ வீட்டிற்குள் கொண்டு வந்தார்.

விமலா தன் கணவன் தலை மாட்டில் உட்கார்ந்துக் கொண்டு “என்னை இப்படி தனியா தவிக்க விட்டுட்டுப் போக உங்களுக்கு எப்படி மனசு வந்தது.நான் தனியா இந்தாத்லே எப்படி இருந்து வரப் போறேன்ன்னு கொஞ்சமாவது யோசிச்சேளா.எனக்கு இந்த லோகதலே யார் இருக்கா. நானும் உங்க கூடவே வந்துடறேன்”என்று தன் தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.

மங்களமும் தன் மாமியார் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு அழுதுக் கொண்டு இருந்தாள்.

அப்பா இறந்துப் போன சமாசாரத்தை தன் தங்கை மரகதத்துக்கு சொல்லி நினைத்து ராமநா தன் திருவண்ணாமாலைக்குப் ‘போன்’ பண்ணினார்.

அடுத்த பக்கத்தில் இருந்து அந்த ‘போனில்’ யாரோ முன் பின் தெரியாத ஒருவர் பேசி “சார், நீங்க கேக்கற அம்மா இந்த வீட்லே இல்லே.அவங்க காலி பண்ணிட்டு வேறே இடம் போய் இருப்பா ங்க போல இருக்கு” என்று சொல்லி ‘போனை’ ‘கட்’ பண்ணி விட்டார்.

ராமநாதனுக்கு மிகவும் ஏமாற்றமாய் போய் விட்டது.உடனே அவர் இந்த சமாசாரத்தை மணை வி மங்களத்திடமும்,அம்மாவிடமும் சொல்லி வருத்தப் பட்டார்.

பிள்ளை சொன்னதைக் கேட்டு விமலா மிகவும் வருத்தப் பட்டாள்.

‘பாவம்,அப்பா இப்படி அகாலாமா செத்துப் போன பிறகு அம்மாவும், ரகுராமனும் அவா இருந்த ஆத்தே காலி பண்ணீட்டு,வேறே எங்கோ போயிட்டு இருக்காளே.இப்போ அவா ரெண்டு பேரும் எங் கே இருக்காளோ.என்ன பண்றாளோ.ராகுராமன் ‘மெஸ்’ நன்னா போயிண்டு இருக்கணுமே.அவா ரெ ண்டு பேரும் சௌக்கியமா இருந்து வரணுமே’ என்று நினைத்து மிகவும் கவலைப் பட்டாள் மங்களம்.

ரமாவும் தாத்தா இறந்துப் போன துக்கம் தாங்காமல் அழுதுக் கொண்டு இருந்தாள்.

எல்லா ஏற்பாடுகளும் பண்ணி முடித்த பிறகு ராமநாதன் அப்பாவின் ‘பாடி’யை மயானத்துக்கு எடுத்துக் கொண்டு போய் எல்லா ‘ஈமக் காரியங்களும்’ பண்ணி விட்டு வந்தார்.
ராமநாதன் வாத்தியாரை வைத்துக் கொண்டு அப்பாவுக்கு ‘பன்னண்டு நாள்’ காரியங்களை ரொம்ப சிரத்தையாக செய்து விட்டு,பதி மூன்றாம் நாள் வீட்டை ‘புண்யாவசனம்’ செய்தார்.

கணவன் இறந்துப் போன துக்கத்தில் இருந்து விமலா வெளியே வரவே இல்லை.அவள் சதா அழுதுக் கொண்டே இருந்தாள்.ராமநாதனும்,மங்களமும்,பேத்தி ரமாவும் விமலாவுக்கு ஆறுதல் சொல் லி வந்தார்கள்.விமலா சதா தன்னை தனியா தவிக்க விட்டு விட்டு போன கணவனையே நினைத்துக் கொண்டு வேதனைப் பட்டுக் கொண்டு இருந்தாள்.
ரெண்டு வருஷம் ஓடி விட்டது.

அன்று ஆபிஸ்க்கு வந்த ராமநாதனுக்கு அவருடன் வேலைப் பார்த்து வந்த ரமணி போன் செய்தார்.செல் போன் அடித்ததும் போனை ஆன் பண்ணி ராமநாதன் பேசினார்.”ராமநாதன் என் ‘வைப்’ திடீர்ன்னு அவ வலது பக்கமே வேலே செய்யலேன்னு சொன்னா.நான் அவளை டாக்டர் கிட்டே அழைச்சுண்டு வந்து இருக்கேன்.நான் இன்னைக்கு ஆபீஸ்க்கு வர முடியாது.கொஞ்சம் சீப் மானேஜர் கிட்டே சொல்லிடுங்கோ.அவர் செல் போன் எப்பவும் ‘எங்கேஜ்ஜுடுன்னு’ பதில் வறது” என்று சொன்னதும் உடனே ராமநாதன் “நான் சொல்லிடறேன்.நீங்கோ உன் ‘வைப்’ உடம் பை கவனிச்சுண்டு வாங்கோ” என்று சொல்லி விட்டு சீப் மானேஜர் ரூமுக்குப் போய் ரமணி போன் பண்ணீன விஷயத்தை சொன்னார்.

மணி ஒன்று இருக்கும். மறுபடியும் ரமணி ராமநாதனுக்கு போன் பண்ணினார்.அவர் “ராம நாதன்,டாகடர் என் வைபை பரிசோதனைப் பண்ணி விட்டு,அவளுக்கு தலைலே ரத்த அடைப்பு இருக்கு.அதனால் அவளுக்கு இனிமே வலது கையால் அவளுக்கு ஒன்னும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டார்.அவ தலையை இந்த வயசிலே ஆபரேஷன் பண்றது நல்லது இல்லேன்னு சொல்லிட்டு, அந்த அடைப்பு கறைய மாத்திரை எழுதிக் குடுத்து இருக்கார்” என்று அழ மாட்டாத குரலில் சொன் னார்.உடனே ராமநாதன் “ரமணி சார்,எனக்குக் கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.நீங்கோ உங்க ‘வைபை’ ஜாக்கிதையா கவனிச்சுண்டு வாங்கோ” என்று சொல்லி விட்டு ‘போனை’ ‘ஆப்’ பண்ணிணார்.
வீட்டுக்கு வந்ததும் ராமநாதன் தன் நண்பன் ரமணி மணைவிக்கு ஆன விஷயத்தை மங்கள த்திடம் சொல்லி வருத்தப் பட்டார்,மங்களமும் மிகவும் வருத்தப் பட்டு “அவர் வைப்க்கு வலது கையா லே வேலை செய்ய முடியாதுன்னா ரொம்ப கஷ்டமாச்சே.அவ சமையல் பண்ண ரொம்ப சிரமப் பட வேண்டி இருக்குமே.அவா சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டப் படுவாளே” என்று சொன்னாள்.

ஒரு வாரம் போய் இருக்கும்.

அன்று ஞாயிற்றுக் கிழமை.

திருவண்ணாமலையில் இருந்து ரகுராமன் அக்கா மங்களத்துக்குப் போன் பண்ணினான். ‘போனை’ எடுத்து மங்களம் பேச ஆரம்பித்தாள்.”அக்கா,நான் ரகுராமன் பேச றேன்”என்று சொல்லி முடிக்கவில்லை மங்களம் உடனே ”ஏண்டா ரகுராமா,நான் உன் அக்கா ஒத்தி உசிரோடு இருக்கேன். நாங்க எல்லாம் அப்பா தவறிப் போனப்ப திருவண்ணாமலைக்கு வந்துட்டுப் போனோம். அப்புறமா, இந்த ஐஞ்சு வருஷமா நீ என் கிட்டே பேசவே இல்லே.என் மாமனார் தவறிப் போனப்ப அத்திம்பேர், நீ இருந்த ஆத்துக்கு ‘போன்’ பண்ணினா.அந்த ஆத்லே இருந்து வேறே யாரோ ஒருத்தர் தான் பேசி னார்.நீ அந்த ஆத்தை காலி பண்ணிட்டு போய் இருக்கேன்னு அவர் சொன்னார்.நீ ஏன் அந்த ஆத் தே காலி பண்ணினே.உன் ‘மெஸ்’ இப்ப எப்படி நடந்துண்டு இருக்கு.அம்மா சௌக்கியமா இருக்கா ளா” என்று ‘மள’’ மள’ என்று பல கேள்விகள் கேட்டாள்.

ரகுராமன் அழுதுக் கொண்டே” அக்கா என்னத்தே சொல்றது சொல்லு.என் ‘மெஸ்’ ரொம்ப சுமா ராத் தான் போயிண்டு இருந்தது.அப்பா தவறிப் போன துக்கம் அம்மாவை ரொம்ப வாட்டிண்டு வறது. ’மெஸ்’லே போட்ட அசலையே என்னால் எடுக்க முடியலே.அக்கம் பக்கத்லே நிறைய பெரிய ஹோட்ட ல்கள் எல்லாம் வந்துடுத்து.அதனால்லே நான் அந்த ‘மெஸ்’ஸே மூடி வந்த விலைக்கு வித்துட்டேன். ஒரு ஆறு மாசம் வேலை ஒன்னும் இல்லாம இருந்து வந்தேன்” என்று சொல்லி விட்டு அழுதான்.

கொஞ்ச நேரம் ஆனதும் “பகவான் புண்ணியத்லே எனக்கு அமொ¢க்காவிலே இருந்து திருவண் ணாமலையிலே ஒரு பெரிய பங்களா வாங்கிண்டு வந்த ஒரு பணக்காரா ஆத்லே ஒரு சமையல் வேலை கிடைச்சு மூனு மாசம் ஆறது.நானும் அம்மாவும் அந்த பணக்காரா ஆத்லே சமையல் வேலே பண்ணி ண்டு வறோம்.அவா எனக்கு கணிசமா மாசம் எட்டாயிரம் ரூபாய் மாச சம்பளம் தறா.நானும் அம்மா வும் அவா ஆத்லே மீற சாப்பாட்டை சாப்பிட்டுண்டு வறோம்.நான் ஒரு சின்ன வீடாப் பாத்துண்டு அம்மாவோட இருந்துண்டு வறேன்.நான் ஒரு கல்யாணம் பண்ணீண்டா வர பொண்ணுக்கும் அம்மா வுக்கும் ஒத்துப் போகுமோ ஒத்துப் போகாதோ தெரியாது.ஒத்துப் போகாம அவ தனிக் குடித்தனம் போகணும்ன்னு பிடிவாதம் பிடிச்சா நான் என்ன பண்ணுவேன் சொல்லு.அப்படிப் போனா நம்ம அம்மா வை யார் கவனிச்சுக்கறது.இதை எல்லாம் யோஜனைப் பண்ணி நான் கல்யாணமே பண்ணிக்காம அம்மாவை கடைசி காலம் வரை என் கூட வச்சிண்டு வரலாம்ன்னு முடிவு பண்ணீ இருக்கேன். என் பிடிவாதத்தாலே தான் அப்பா அவருடைய எல்லா நிலத்தையும் பிடிக்காம வித்தார்.இது அம்மாவுக்கு நன்னா தெரியும்.அம்மா அப்பா ஞாபகமாவே இருந்துண்டு வறா” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு மறுபடியும் அக்காவிடம் பேச ஆரம்பித்தான்.

“ஆனா அம்மா என்னேப் பாத்து அடிக்கடி ‘ரகுராமா நீ கல்யாணம் எல்லாம் பண்ணிக்க இருக்க கூடாதுடா.நம்ம ‘வம்சம் விருத்தி’ ஆகணும்டா.நீ ஒரு கல்யாணத்தே பண்ணீண்டு ஒரு புருஷ குழந் தையே பெத்துக்கோன்னு’ சொல்லிண்டு வறா.எனக்குத் தான் என்ன பண்றதுன்னு தெரியலே” என்று சொன்னான்.

ரகுராமன் சொன்ன எல்லா விஷயங்களையும் கேட்ட மங்களம் உடனே அவனைப் பார்த்து ”ஏண்டா,நீ இத்த்னை கஷ்டங்கள் பட்டு வந்து இருக்கே.அக்கான்னு எனக்கு ஒரு ‘போன்’ பண்ணி சொல்லக் கூடாதாடா.நான் ஒத்தி இருக்கிறது உனக்கு மறந்துப் போச்சாடா.கொஞ்சம் ‘போனை’ அம்மா கிட்டே குடு.நான் அம்மாவை கேக்கறேன்” என்று சொன்னதும் ரகுராமன் ‘போனை’ அம்மா விடம் கொடுத்தான்.

அம்மா ‘போனி’ல் வந்ததும் மங்களம் அம்மாவைப் பார்த்து “ஏம்மா,நம்மாத்லே இவ்வளவு விஷ யங்கள் நடத்து இருக்கு.நீ பெத்த பொண்ணு நான் ஒத்தி உசிரோடு இருக்கேன்.ரகுராமன் சின்னவன். அவன் சொல்லலே.நீயாவது எனக்கு ‘போன்’ பண்ணி சொல்லக் கூடாதா.உங்க கஷ்ட நஷ்டத்லே நானும்,மாப்பிள்ளையும் உங்களுக்கு உதவியா இருந்து வந்து இருக்கலாமே.எனக்குக் கேக்க ரொம்ப் கஷ்டமா இருக்கு” என்று கோவத்துடன் கத்தினாள்.

மரகதம் ‘போனி’ல் “அம்மா மங்களம்,எனக்கும்,ரகுராமனுக்கும் உனக்கு சொல்லக் கூடாதுன் னு இல்லே.என்னவோ எங்க ரெண்டு பேருடைய கஷ்ட காலம் விடியலே.ரொம்பக் கஷ்டப் பட்டுண்டு வந்தோம்.வீணா உன் கிட்டே இதை எல்லாம் சொல்லி உன்னேயும்,மாப்பிள்ளையையும் கஷ்டப் பட வக்க வேணாமேன்னு தான் சொல்லலே.சந்தோஷமான விஷயமா இருந்தா சொல்லிக்கலாம்.வெறும னே மேலே,மேலே கஷ்டப் படற சமாசாரத்தே சொல்ல வேணாமேன்னு தான் சொல்லலே.அந்த அம் பாள் அனுக்கிரஹத்தாலே இப்ப ரகுரமனுக்கு ஒரு பணக்காரா ஆத்லே சமையல் வேலே கிடைச்சு இரு க்கு.நிலைமை கொஞ்சம் சுமாரா போயிண்டு இருக்கு”என்று சொல்லி விட்டு கொஞ்சம் இருமி விட்டு, மறுபடியும் பேச ஆரம்பித்தாள்.

“நான் அவனை ஒரு கல்யாணத்தே பண்ணீண்டு ஒரு புருஷக் குழந்தையே பெத்துக்கோ. உன் னோடு இந்த ‘வம்சம் அழிஞ்சு’ப் போகக் கூடாதுன்னு அடிக்கடி சொல்லிண்டு வறேன்.ஆனா அவன் எனக்குக் கல்யாணமே வேமாம்ன்னு பிடிவாதம் பிடிச்சுண்டு வறான்.நீ சித்தே அவன் கிட்டே சொல்லி அவனை ஒரு கல்யாணத்தே பண்ணீக்கச் சொல்லேன்.நீ சௌக்கியமா இருந்து வறயா. மாப்பிள்ளை சௌக்கியமா இருக்காறா.சுதா இன்னும் படிச்சுண்டு இருக்காளா.இல்லே அவளுக்கு கல்யாணம் ஆயி டுத்தா.ரமா என்ன படிக்கறா” என்று கேள்விக்கு மேல் கேள்விகள் கேட்டாள் மரகதம்.

“அம்மா,உன் ‘போன்’ நம்பர் எனக்கு தெரியாததாலே,என் குடும்பத்திலே நடந்த ஒரு சமாசார த்தையும் என்னாலே சொல்ல முடியலே.நீ மொள்ள,மொள்ள ரகுராமனை ஒரு கல்யாணத்தே பண்ணி க்கச் சொல்லு.நீ கட்டாயப் படுத்தினாத் தான் ரகுராமன் கல்யாணம் பண்ணிப்பான்.நான் சொன்னா அவன் எனக்கு சொன்ன பதிலையேத் தான் சொல்லுவான்.எதுக்கும் நான் அவனுக்கு சொல்லிப் பாக் கறேன்.’போனை’ கொஞ்சம் ரகுராமன் கிட்டே குடு” என்று சொன்னதும் மரகதம் ‘போனை’ ரகுராமன் கிட்டே கொடுத்தாள்.

மங்களம் ரகுராமன் ‘போனி’லே வந்தவுடன் “ரகுராமா,அம்மா சொல்றதேப் போல நீ ஒரு கல் யாணத்தே பண்ணிண்டு நம்ம ‘வம்ச விருத்தி’ யாக வழிப் பண்ணுடா”என்று சொல்லி முடிக்கவில் லை ரகுராமன் மங்களத்தைப் பார்த்து “அக்கா,நான் ஏற்கெனவே ஒரு பாடத்தே என் வாழகையிலே கத்துண்ட்டேன்.’மெஸ்’ வக்கணும்,’மெஸ்’ வக்கணும்ன்னு பிடிவதம் பிடிச்சு நான் அப்பாவை இழந்துட் டேன்.இப்போ ஒரு கல்யாணத்தே பண்ணீண்டு,எனக்கு பொண்டாட்டியா வரவ கல்யாணம் ஆன மறு மாசமே என்னேப் பாத்து,எனக்கு உங்க அம்மாவே சுத்தமா பிடிக்கலே.நாம இந்தக்ஷணம் தனிக் குடித் தனம் போகணும் பிடிவாதம் பிடிச்சா நான் என்ன பண்ணுவேன் சொல்லு.அவ சொல்றதே கேட்டு ண்டு நான் தனி குடித்தனம் போனா,இத்தனை வருஷமா என்னோடு இருந்து வந்த அம்மாவை இந்த வயசிலே எப்படி நான் தனியா தவிக்க விடறது சொல்லு.அம்மாவுக்கு அவ ஆத்துக்காரரும் இல்லே, நானும் இல்லேன்னு ஆயிடாதா.அம்மாவை இழக்க நான் தயார் இல்லே.வாழ்க்கையிலே ‘ஒன்னே இழந்தா தான் இன்னொன்னு கிடைக்கும்’என்கிறதே நான் நன்னா புரிஞ்சுண்டு இருக்கேன். அதனால்லே நான் கல்யாணமே பண்ணீக்காம இருந்துண்டு,அம்மாவை கடைசி காலம் வரைக்கும் பாத்துக்கலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கேன்.’என்னே கல்யாணம் பண்ணிக்கோ,கல்யாணம் பண்ணிக்கோ’ன் னு வற்புருத்தாதேக்கா.இந்த ஜென்மத்லே எனக்கு கல்யாணமே வேணாம்” என்று கண்களில் கண்ணீர் மல்க சொல்லி ‘போனை’ அம்மா கிட்டே கொடுத்தான்.

அம்மா ‘போனில்’ வந்ததும்,சுதா வீட்டை விட்டு ஓடிப் போனதில் இருந்து,மாமனார் தவறி போன சமாசாரத்தையும்,ரமா ரொம்ப நன்றாகப் படித்துக் கொண்டு வரும் சமாசாரத்தையும் சொல்லி விட்டு ‘போனை’ ‘கட்’ பண்ணீனாள்.

தன் கணவனிடம் மங்களம் தன் அம்மாவும்,ரகுராமனும் சொன்ன எல்லா விஷயங்களையும் சொல்லி வருத்தப் பட்டாள்.மங்களம் நெடு நேரம் வரை தன் தம்பி ரகுராமன் வாழ்க்கையிலே பண்ணீ இருக்கும் தியாகத்தை நினைத்து கண்ணில் கண்ணீருடன் அழுதுக் கொண்டு இருந்தாள்.இதை கவனித்த ராமநாதன் ஒன்று பேசாமல் சும்மா இருந்தார்.
ஒரு அரை மணி நேரம் ஆனது.

ராமநாதன் மங்களத்தைப் பார்த்து “மங்களம் இப்போ நீ கொஞ்சம் நார்மலா இருக்கியா.நீ உன் தம்பியை நினைச்சு அழுதுண்டு இருக்கறதே நான் பாத்தேன்.அதான் நான் ஒன்னும் பேசாம சும்மா இருந்தேன்.அவா ‘போன்’ நம்பர் நம்ம கிட்ட இருந்து இருந்தா,நாம எல்லா சமாசாரத்தையும் உடனே சொல்லிண்டு இருந்து இருக்கலாம்.அவாளுக்கு மேலே மேலே கஷ்டங்கள் வந்துண்டு இருந்ததாலே அவா நமக்கு ‘போனே’ பண்ணலே.கஷ்டங்கள் வந்தா என்ன.அப்பத் தான் உறவுக்காரா ஒருத்தரு க்கு ஒருத்தர் பேசிண்டு வரணும்.அவா ‘போன்’ நம்பர் நமக்குத் தெரியாததாலே,நாம நம்ம சமாசாரத் தே அவ கிட்ட சொல்ல முடியலே.கல்யாணம் பண்ணிண்டா வர பொண்ணு தனிக் குடித்தனம் போக பிடிவாதம் பிடிப்பானு பயந்துண்டு ரகுராமன் கல்யாணம் பண்ணிக்கம இருக்கறது சரி இல்லே தான். உங்க அம்மா சொல்றது போல உங்க ‘வம்சம் விருத்தி’ ஆக ரகுராமனுக்கு ஒரு பிள்ளை குழந்தை பொ றக்கணும்.என் அம்மாவும் அப்பாவும் இதேத் தான் ரொம்ப ஆசைப் பட்டா.ஆனா அது நடக்கமலே போயிடுத்து” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

“ஆமாம், நீங்க சொல்றது உண்மைத் தான்.என்ன பண்றது சொல்லுங்கோ.பொறக்கற குழந்தை ஒரு புருஷக் குழந்தையா இருக்கிறதும்,இல்லாததும் நம் கையிலே இல்லேயே.அவன் நமக்கு இந்த ஜென்மத்லே ரெண்டையும் பொண் குழந்தைகளாத் தான் குடுத்து இருக்கார்.முதல் பொண் குழந்தை யாவது கிரமமா ஒரு பிராமணப் பையனை கல்யாணம் பண்ணீண்டு இருக்கக் கூடாதா.ஒரு கிருஸ்த வப் பையன் கூட ஓடிப் போயிட்டா.காலத்துக்கும் இது நம்ம குடும்பத்துக்கு ஒரு மாறாத அவமானம் தானே” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

கொஞ்ச நேரம் கழித்து “சுதா ஒடிப் போன விஷயத்தே,நாம ரமாவை கல்யாணம் பண்ணீக்கற வறவா கிட்டே எப்படி சொல்லப் போறோம்.எனக்கு பயமா இருக்கு.கல்யாணம் பண்ணீண்டா வரவ தனிக் குடித்தனம் போகணும்ன்னு பிடிவாதம் பிடிச்சா பாவம் ரகுராமன் என்ன பண்ணுவான் சொல்லு ங்கோ.அவன் பிடிச்ச பிடிவாதத்தாலே தான் அப்பா பிடிக்காம அவர் நிலத்தை எல்லாம் விட்டார்.அந்த கஷ்டம் தாங்காமத் தான் அப்பா அவாளை தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டான்னு ரகுராமன் நம்பறான்.அவன் தனக்கு கல்யாணமே வேணாம்ன்னு சொல்றதிலும் ஒரு நியாயம் இருக்குன்னு என க்கு படறது.அவனுக்கு அம்மாவை தனியா தவிக்க விட மனசு இல்லே” என்று சொல்லி தன் கண்களி ல் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

“சரி,நாம இனிமே எல்லாத்தையும் மறந்துட்டு ரமா வாழக்கையை பத்தி யோஜனைப் பண்ணி ண்டு வரணும்”என்று சொல்லி மங்களத்துக்கு சமாதானம் சொன்னார்.உடனே மங்களம்” ஆமாம், நீங்க சொல்றது ரொம்ப சரி.இவ வாழக்கையாவது நன்னா போய் இவ சௌக்கியமா இருந்துண்டு வரணும்” என்று சொல்லி ராமநாதன் சொன்னத்தை ஆமோதித்தாள்.

மங்களம் சொன்ன எல்லா விஷயத்தையும் கேட்டு மரகதம் மிகவும் வருத்தப் பட்டாள்.பிறகு நிதானமாக மங்களம் சொன்ன எல்லா விஷயங்களையும் ரகுராமனுக்கு சொன்னாள்.சுதா வீட்டை விட்டு ஓடி போன சமாசாரத்தை நினைத்து மரகதமும் ரகுராமனும் மிகவும் வருத்தப் பட்டார்கள்.

ரகுராமன் மாசம் ஒரு தடவை அக்கா கிட்டே பேசி அக்கா அத்திம்பேர் சௌக்கியத்தை விசாரி த்துக் கொண்டு இருந்தான்.அவன் பேசும் போது மங்களம் அவன் சௌக்கியத்தையும், அம்மாவின் சௌக்கியத்தையும் விசாரித்துக் கொண்டு வந்தாள்.

ஒரு வாரம் லீவுக்கு பிறகு ரமணி ஆபீஸ்க்கு வந்தார்.

’லன்ச்’ நேரத்தில் அவர் ராமநாதனிடம் தன் மணைவி உடம்பைப் பற்றி சொல்லி விட்டு “ராம நாதன்,என் ‘வைபால்’ சமையல் எல்லாம் பண்ண முடியலே.எல்லாத்துக்கும் வலது கை தானே முக்கி யமா வேண்டி இருக்கு சொல்லுங்கோ.அதனால்லே எங்க ‘ப்லாட்’ பக்கத்திலே ஒரு ஐயங்கார் மாமி பண்ணிக் குடுக்கற சாப்பாட்டை ஏற்பாடு பண்ணீ சாப்பீடோம்.சாப்பாடு ஒரே காரம்.எங்க ரெண்டு பேருக்கும் ஒத்துக்கவே இல்லே.ரொம்ப கஷடப் பட்டோம்.வேறே வழி ஒன்னும் இல்லாம நான ஒரு சமையல் ‘கண்ட்ராக்டர் ‘ கிட்டே சொல்லி எங்களுக்குப் பிடிச்சா மாதிரி சமையல் பண்ண ஒரு சமைய ல் கார மாமாவை ஏற்பாடு பண்ணினோம்.அவர் எங்க ரெண்டு பேருக்கும் தகுந்த மாதிரி சமையல் பண்ணி வறார்.உங்களுக்குத் தான் தெரியுமே.நாங்க ரெண்டு பேரும் ‘ஹார்ட் பேஷண்ட்’ எங்களுக்கு காரமே கூடாதே.இல்லையா சொல்லுங்கோ” என்று தன் கதையை சொன்னார்.

உடனே ராமநாதன் “ஆமாம் ரமணி சார்.நீங்க சொல்றது ரொம்ப ‘கரெக்ட்’’ஹார்ட் பேஷண்டு’ கள் ரொம்ப காரமே சாப்பிடக் கூடாது.இதே ‘ப்ராப்லெம்’ தான் எனக்கும் என் ‘வைப்’க்கும்.நாங்க ரெண்டு பேரும் காரம் இல்லாத சாப்பாட்டைத் தான் சாப்பிடுண்டு வரோம்.என்ன பண்றது.நாக்குக்கு சுவையா இருக்கறது உடம்புக்கு ஒத்துக் கொள்ள மாட்டேங்கறதே.என்ன பண்றது சொல்லுங்கோ. சக்கரை கூடாது,காரம் கூடாது.அது எல்லாம் இல்லாம சாப்பிட்டுண்டு இந்த உடம்பை காத்திண்டு வரணும்.ஒரு சமயம் இல்லே,ஒரு சமயம் இதே நினைச்சுண்டா மனசு ரொம்ப சங்கடப் படறது.என்ன பண்றது சொல்லுங்கோ” என்று சொல்லி தன் கதையை சொல்லிக் கொண்டார்.
ரெண்டு வருடங்கள் ஓடி விட்டது.

ரமா ‘டெந்த்’ பரி¨க்ஷயிலே சென்னை மாநிலத்திலேயே இரண்டாவது ‘ராங்க்’ வாங்கி ‘பாஸ்’ பண்ணீனாள்.அம்மாவும், அப்பாவும், பாட்டியும் மிகவும் சந்தோஷப் பட்டு ரமாவை பாராட்டினார்கள் ரமாவுக்கு ரெண்டு பெரிய கல்லூரிகளில் இருந்து B.Com.சேர்ந்து படிக்க ஒரு சீட்டும்,முழு ‘ஸ்காலர் ஷிப்பும்’ தருவதாக ‘லெட்டர்’ அனுப்பி இருந்தார்கள்.
ரெண்டு ‘லெட்டர்’களையும் பார்த்து மிகவும் சந்தோஷப் பட்டார்கள் ராமநானும், மங்களமும், விமலாவும்.ரெண்டு கல்லூரிகளில் எது சிறந்த கல்லுரி என்று கண்டு பிடித்து ரமா அந்த கல்லுரியில் B.Com ‘கோர்ஸ்’ சேர்ந்து படித்து வந்தாள்.

அன்று ரகுராமன் அக்காவுக்கு ‘போன்’ பண்ணினான்.

அவன் மங்களத்திடம் பேசும் போது ”அக்கா,இப்ப கொஞ்ச நாளா அம்மா தனக்கு தூர இருக்கி ற கட்டிடம் எல்லாம் சரியா தெரியதில்லேன்னு சொல்லிண்டு இருந்தா.நான் அம்மாவை ஒரு கண் டாக்டர் கிட்டே அழைச்சுண்டு போய் கேட்டேன்.அவர் அம்மா கண்களே நன்னா ‘செக் அப்’ பண்ணி ட்டு அம்மாவுக்கு ரெண்டு கண்லேயும் ‘காட்ராக்ட்’ வந்து இருக்கு.உடனே ரெண்டு கண்ணையும் ‘ஆபரேஷன்’ பண்ணனும்ன்னு சொல்லிட்டாரு.நான் கொஞ்சம் பணம் சேத்து வச்சு இருக்கேன்.நான் சமையல் வேலே செய்யற ஆத்லே கொஞ்சம் ‘அடவான்ஸ்’ பணம் கேட்டு இருக்கேன்.அவர் தறேன்னு ஒத்துண்டு இருக்கார்.அவர் பணம் தந்ததும் நான் அம்மாவை கண் டாகடர் கிட்டே அழைச்சுண்டு போய் காட்டறேன்” என்று சொன்னதும் மங்களம் “ரகுராமா,நான் வேணும்ன்னா அத்திம்பேர் கிட்டே கேட்டு கொஞ்சம் பணம் அனுப்பட்டுமா” என்று கேட்டதும் ரகுராமன் “வேணாம்க்கா.நான் பாத்துக்க றேன்.என் கிட்டே பணம் இருக்கு.அம்மாவுக்கு கண் ‘ஆபரேஷன்’ ஆனதும்,நான் உனக்கு ‘போன்’ பண்றேன்.அம்மாவுக்கு கண் ரெண்டும் சரியா ஆயிடும்ன்னு நான் நினைக்கிறேன்.நீ நிம்மதியா இரு ந்துண்டு வா”என்று சொல்லி ‘போனை’’கட்’ பண்ணீனான்.

மங்களம் தன் கணவரிடம் ரகுராமன் சொன்ன விஷயத்தை சொன்னாள்.

உடனே ராமநாதன் “மங்களம் ரகுராமனுக்கு எவ்வளவு பணம் ‘ஷார்ட்டாம்.நாம அவனுக்கு அந்த பணத்தே அனுப்பி,உதவி பண்ணலாமே”என்று சொன்னதும் மங்களம்”நான் அவன் கிட்டே கேட்டேன்.அவன் வேணாம்.என் கிட்டே பணம் இருக்குன்னு சொல்லிட்டான்” என்று சொன்னதும் ராமநாதன் “அப்படின்னா சரி” என்று சொல்லி விட்டு தன் வேலையை கவனிக்கப் போய் விட்டார்.
மங்களம் ‘தன் அம்மா கணகள் ஆபரேஷன் ஆன பிறகு நன்றாகத் தெரிய வேண்டுமே’ என்று அம்பாளை வேண்டிக் கொண்டாள்.
மூன்று மாசம் ஓடி விட்டது.
வழக்கமாக காலை ஐஞ்சரை மணிக்கு எல்லாம் எழுந்துக் கொள்ளும் விமலா,அன்று ஏழு மணி அடித்தும்,எழுந்து இருக்காமல் இருக்கவே ராமநாதன் அம்மா படுத்து இருந்த ‘பெட் ரூமுக்கு’ போய் “அம்மா,அம்மா” என்று குரல் கொடுத்தான்.அம்மா அசையாமல் படுத்த படியா இருக்கவே பயந்துப் போய் அம்மாவின் கைகளைத் தொட்டுப் பார்த்த்தான்.
விமலா கைகள் ‘ஜில்’ என்று இருக்கவே பயந்துப் போய்,மங்களத்தைக் கூப்பிட்டு சொன்னான்.

சமையல் அறையில் இருந்து ஓடி வந்த மங்களம் தன் மாமியார் கையைத் தொட்டுப் பார்த்து விட்டு “அம்மா,கை ‘ஜில்’ன்னு இருக்கே,உடனே டாகடரைக் கூப்பிடுங்கோ”என்று அலறினாள்.

உடனே ராமநாதன் பக்கத்துக்கு ‘ப்லாட்டி’ல் இருந்த டாகடரை ஓடிப் போய் கூப்பிட்டு” சார், என் அம்மா காத்தாலே இருந்து இது வரைக்கும் இன்னும் எழுந்தா¢க்கலே.நான் அவளைக் கூப்பிட்டும் அவ எழுந்துக்காமல் இருக்கவே அவ கையைத் தொட்டுப் பாத்தேன்.அவ கை ‘ஜில்’ ன்னு இருக்கு. தயவு செஞ்சி கொஞ்ச வந்து பாக்க முடியுமா” என்று கேட்டதும்,அந்த டாகடர் உடனே தன் ‘ஸ்டெத ஸ்கோப்பை’ எடுத்துக் கொண்டு “வாங்க, சார் போகலாம்” என்று சொல்லி ராமநாதன் ‘ப்லாட்டு’க்கு வந்தார்.

டாக்டர் ‘ஸ்டெதஸ்கோப்பை’ வைத்து விமலவை பரிசோதனைப் பண்ணினார்.மீண்டும் மீண் டும் பரிசோதனை பண்ணி விட்டு “சாரி,சார்,அவங்க இறந்து விட்டு இருக்காங்க.‘மாஸிவ் ஹார்ட் அட்டாக்’ வந்து,அவங்க இறந்துப் போய் இருக்காங்க” என்று சொல்லி விட்டு தன் ‘ஸ்டெதஸ்கோப் பை’ எடுத்துக் கொண்டு தன் ‘ப்லாட்டு’க்குப் போய் விட்டார்.

அவர் போனதும் ராமநாதன் “அம்மா,அப்பா தான் எங்களே வீட்டுட்டு போயிட்டார்.நீங்களாவது எங்க கூட இன்னும் கொஞ்ச வருஷம் இருந்து இருக்கக் கூடாதா.இப்படி திடீர்ன்னு போயிட்டேளே. இப்போ எங்களுக்கு பெரியவான்னு யாரும் இல்லையே” என்று சொல்லி தன் தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.மங்களமும் “எங்களே இப்படி தனியா விட்டுட்டு போயிட்டேளேம்மா.ரமா கல்யா ணம் வரைக்குமாவது நீங்க இருந்து இருக்க கூடாதா.அவர் சொல்றா மாதிரி பெரியவான்னு எங்களு க்கு யாரும் இல்லையே” என்று சொல்லி மாமியார் தலை மாட்டில் உட்கார்ந்துக் கொண்டு அழுதாள்.

ராமநாதன் ஆத்து வாத்தியாரை வர வழைத்து அம்மாவை ‘தகனம்’ பண்ணி விட்டு வந்தார். ‘பன்னண்டு நாள் காரியங்கள்’ எல்லாம் பண்ணிவிட்டு,பதி மூன்றாம் நாள் வீட்டுக்கு ‘புன்யாவசனம்’ பண்ணினார்.ராமநாதன் அடுத்த நாள் முதல் தன் வேலைக்குப் போய் வந்துக் கொண்டு இருந்தார்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *