விவரங்கெட்ட கோனாரு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 9, 2026
பார்வையிட்டோர்: 50 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல – ஒரு கோனான் இருந்தா. அவ, நெறயா ஆடுக வச்சிருந்தா. ரொம்பப் பலசாலி. ஆனா அறிவிலி. எதச் செஞ்சாலும் முன்னால – பின்னால நெனச்சுப் பாக்குறதில்ல. அவனுக்கு வாச்ச பொண்டாட்டியும், ஆடுகள மேச்சு, நெறயப் பணஞ் சேத்து வச்சிருந்தா. 

ஒருநா, ஆடுகள மேய்க்கக் காட்டுக்குப் பத்திக்கிட்டுப் போனா. அதுல ஒரு நொண்டியாடு இருந்திச்சு. அதனால நடக்க முடியல. அதத் தூக்கித் தோள்ல போட்டுக்கிட்டு, ஆடுகள வீட்டுக்குப் பத்திக்கிட்டு வந்தா. வரயில, ஆடுகள் எனம் பாத்தா. எனம் பாக்கயில, ஒரு ஆடு கொறயுது. ரெண்டு மூணு தடவ எனம் பாத்தா. அப்பயும் ஒரு ஆடு கொறஞ்சுச்சு. நொண்டியாடு தோள்ல இருக்றத மறந்திட்டா. நடக்க முடியாத நொண்டியாடு தோள்ல இருக்குங்குறதேய மறந்திட்டு, எனம் பாத்துக்கிட்டுருந்தா. கணக்கு வரல, அதனால,

கூட வந்தவங்ககிட்ட ஆட்டப் பத்தி விட்டுட்டு, காணாமப் போன ஆட்டத் தேடிப் போறா. வெளியெல்லாம் அலஞ்சு திரிஞ்சு, ஆட்ட காங்க முடியல. ஆடுதான் இவ் தோள்ல இருக்கே. அங்க எப்டி ஆடு இருக்கும். கடுமயான வெயிலு, தண்ணித் தவி பொறுக்க முடியாம, ஒரு கெணத்துக்கு வந்தா. வந்து, கெணத்த உத்துப் பாத்தா. பொடனில இருக்ற ஆடு தண்ணிக்குள்ள தெரிஞ்சுச்சு. ஒக்காலோளி ஆடு, எங்க போயி இருக்குது, பாருண்ட்டு, கெணத்துக்குள்ள தவ்னா. 

தண்ணிக்குள்ள தவ்வவும், ஆடு, எடய பொடனிய விட்டு வெலகிருச்சு. தண்ணிக்குள்ள தவ்னா வெலகாது, வெலகவும், ஆட்டப் புடிச்சுக்கிட்டு வீட்டுக்கு வந்தா. 

எடயில், பாக்குறவங்ககிட்டெல்லாம், இந்த நொண்டியாடு கெணத்துக்குள்ள இருந்திச்சு. இப்பத்தா புடுச்சுட்டு வாரேண்டு பெருமையடிச்சுக்கிட்டே வீட்டுக்குப் போறா. வீட்டுக்குள்ள போகயில, ஆடு மேய்க்கிற கம்பயும் பொடனில் வச்சுக்கிட்டு, அதோட சேத்து ஆட்டயும் பொடனில போட்டுக்கிட்டு வீ ட்டுக்குள்ள போனா. வீட்டுக்குள்ள நொளயும்போது, வாசப்படில் கம்பு மாட்டிகிருச்சு. உள்ள போக முடியல. குறுக்கு வாக்குல போனால், எப்டிப் போக முடியும்? முடியல. 

பொண்டாட்டியக் கூப்பிட்டு, ஆசாரியக் கூட்டிக்கிட்டு வாடிண்டு சொன்னா. சொல்லவும், அவ போயி, ஆசாரியக் கூட்டிக்கிட்டு வந்தா. ஆசாரிக்கு வெசயம் புரிஞ்சு போச்சு. உளிய வச்சுக் கம்ப வெட்டி விட்டா. எடயன் உள்ள போனா. ஆசாரி தெறமயப் பாராட்டி, ஆசாரிக்கு ஒரு ஆடு குடுத்தா. 

இப்டி இருக்கயில, இங்கிட்டு ஆடுகளக் களவாண்டணும்ண்ட்டு, அஞ்சு களவாணிங்க, ரொம்ப நாளாத் திட்டம் போட்டுக்கிட்டிருந்தாங்க. 

ஒருநா, ஒரு மொதலாளி தோட்டத்ல கெட அமத்தியிருந்தா. இதான் சமயம்ண்டு, களவாணிக, களவாண்டப் போனாங்க. போயிப் பாக்கயில, நாடில கம்ப ஊண்டி நிண்டுகிட்டிருந்தா. நாடில் கம்ப ஊண்டிக் கெடயில நிண்டுகிட்டே ஒரங்குவர். நிண்டுகிட்டு இருக்றவன, முழுச்சுகிட்டுத்தா இருப்பாண்ட்டு களவாணிக போயிட்டாங்க. 

மறுநாளும் போயிப் பாத்தாங்க. அதே மாதிரி நிண்டுகிட்டிருந்தா. அதுக்கு மறுநாளும் போயிப் பாத்தாங்க. பாக்கயில, இதுல ஏதோ இருக்குண்ட்டு, இதக் கண்டுபிடிக்க, ஒரு திட்டம் போட்டாங்க. 

ஒருநா, கோனாரு வீட்டுக்குப் போனாங்க. கோனாரு பொண்டாட்டி வீட்ல இருந்தா. நேத்து ராத்ரி, ஒம் புருச், கெடயில, ஆட்டத் தூக்க விட்டுட்டானுல்லண்டு சொன்னாங்க. 

சொல்லவும், அந்தப் பயல, நிண்டுகிட்டு ஒரங்காதடா, நிண்டுகிட்டு ஒரங்காதடாண்டு எத்தன நாளக்கிச் சொல்றது. இண்ணக்கி ஆட்டத் தூக்க விட்டுட்டானா? வீட்டுக்கு வரட்டும் பேசிக்கிறேண்டு சொன்னா. 

சரி! நிண்டுகிட்டா மாப்பள ஒரங்கற, இண்ணக்கி இருண்டு மனசுல நெனச்சுக்கிட்டு போயிட்டாங்க. 

அண்ணக்கி ராத்ரில, களவாணிங்க கெடைக்குப் போனாங்க. கெடையில் கோனான் நிண்டுகிட்டு ஒரங்கிக்கிட்டிருந்தா. ஆளுக்கொரு ஆட்டப் புடுச்சுக்கிட்டுப் போயிட்டாங்க. கோனாரு ஆட்டக் காணம்ண்டு தேடிப் பாத்துட்டு விட்டுட்டா.

அண்ணக்கி மறுநாக் காலையில, கோனாரு ஆடு மேய்க்கிற எடத்துக்குப் போனாங்க. போயி, ஒம் பொண்டாட்டி, வீட்ல பணத்தப் பூராம், களவாண்ட விட்டுட்டாண்டு சொன்னாங்க. 

அந்த ஞோளிமகௗ! எத்தன நாளக்கிச் சொல்றது. அம்மிக் கடில வக்யாத- அம்மிக்கடில வக்யாதண்டு சொன்னா கேட்டாதான. களவாண்ட விட்டுட்டாளா? அவளப் போயிப் பேசிக்கிறேண்டு சொல்லிட்டு, ஆடு மேய்க்கப் போயிட்டா. 

சரி அம்மிக்கடிலயா வச்சிருக்கா, இன்னக்கி நல்ல வேட்டண்டு நெனச்சுக்கிட்டுப் போயிட்டாங்க.

அண்ணக்கி ராத்ரில போயி, அம்மியப் பெறட்டிக்கிட்டு, அடியில் இருந்த பணத்த எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. இதுக்குதா, ஆரு கிட்டயும் உத்தவாத்த சொல்லக் கூடாதுண்றது. 

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நகைசுவைக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசா பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *