வாணீபுர வணிகன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் நாடகம்
கதைப்பதிவு: February 16, 2026
பார்வையிட்டோர்: 1,392 
 
 

(1957ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாடக பாத்திரங்கள்

சரோஜினியை மணக்கவந்த மன்னர்கள்
-வாணீபுரத் தரசன்
-மார்த்தாண்ட சேதுபதி
-அருகபுரத் தரசன்
அநந்தநாதன் – வாணீபுர வணிகன்.
பானுசேனன் – அநந்தநாதனுடைய நண்பன்.
அருந்தநாதன் பானுசேனன் இருவருக்கும் நண்பர்கள்:
-சோமேசன்
-சாம்பநாதன்
-கிரிஜாநாதன்
லீலாதரன் – ஜலஜாவின் காதலன்.
ஷாம்லால் – ஒரு மாறுபாடி.
தூப்லால் – ஒரு மாறுபாடி, ஷாம்லால் நண்பன்.
லாவண்யகபீரன் – விதூஷகன், ஷாம்லால் வேலையாள்.
வயோதிக கபீரன் – லாவண்யன் தகப்பன்.
கேசரிநாதன் – பானு சேனனுடைய வேலையாள்.
சரோஜினியின் வேலையாட்கள்:
-பாலதாசன்
-ஸ்தாவிரன்
சரோஜீனி – ஒரு செல்வச் சீமாட்டி.
நீலகேசி – சரோஜினியின் தோழி.
ஜலஜா – ஷாம்லாலுடையபெண்.

வாணீபுரத் தரசனுடைய மந்திரிகள். காவற்காரன், வேலையாட்கள் முதலியோர்.

கதை நிகழிடம்:- சிலபாகம் வாணீபுரத்திலும், சிலபாகம், மணிபுரத்திலும்.

முதல் அங்கம் | இரண்டாம் அங்கம்

முதற் காட்சி 

இடம் – வாணீபுரம், ஒரு வீதி.

அநந்தநாதன், சாம்பநாதன், சோமேஸ்வரன் வருகின்றனர்.

அ. நான் ஒருவாறா யிருப்பதின் காரணம் நானே உண்மையில் அறிகிலேன். இது எனக்கே கஷ்டமா யிருக்கின்றது; உங் களுக்கும் கஷ்டத்தைத் தருவதாக உரைக்கின்றீர். இது என்னை எப்படிப் பீடித்தது, எவ்விதம் தொடர்ந்தது, எப் படி. இதற் காளானேன், எதனா லாயது, எப்படி உற்பவித் தது, இவையெல்லாம் இனியே நான் அறியவேண்டும். இந்த விசாரமானது என் அறிவை மழுங்கச்செய்வதினால், என்னை நானே அறிந்துகொள்ளல் கஷ்டமாயிருக்கிறது.

சா. அருகிற் பறந்தோடும் அற்ப தோணிகள் வணக்கத்துடன் மரியாதை செய்ய, அவைகளை யிகழ்வதுபோல் அகன்ற பாய்மரங்களோடு ஆர்கலியின் கனவான்களை நிகர்த்து பவனி வரும், உம்முடைய நாவாய்களின்மீது உம் மனம் நாடுகின் றதினால், இவ்வாறு தத்தளிக்கின்றது.

சோ. ஐயா, என் வார்த்தையை நம்பும். என்னுடைய சகல சரக்கு களும் சமுத்திரத்தின் மீதிருப்ப தானால், என்னுடைய மன முழுதும் அவைகளெல்லாம் குறைவின்றி வந்துசேரவேண்டுமென்று எந்நேரமும் கோரிக்கொண் டிருக்கும்; புல்லைப் பறித் தெறிந்து காற் றடிக்கும் திசையை எந் நேரமும் கவ னித்துக்கொண் டிருப்பேன். படங்களில் எந் நேரமும் பாதை களையும் துறைமுகங்களையும் பார்த்துக்கொண்டே யிருப் பேன். இதனால் என் சரக்குகளுக்கு ஹானி நேரிடக்கூடும் என்று நான் பயப்படத்தக்க ஒவ்வொரு விஷயமும், சந்தேக மின்றி எனக்கும் சஞ்சலத்தை யுண்டுபண்ணும்.

சா. காற்றினால் கஞ்சி யாறினால், இக் காற்று பலமாய் அடித் தால், கடலில் என்ன கஷ்டம் நேரிடுமோ என்று எண்ணின வனாகி நடுங்குவேன், ஜூரம் பிடித்தவன்போல். மணலைப் பார்க்கும் பொழுதெல்லாம், கடலில் ஆழ மில்லா இடங்க ளும், மணற் றிட்டைகளும் எனக்கு நினைவு வந்து என் செல்வம் நிறைந்த மரக்கலமானது எங்கு சென்று மணற் றிட்டில் அகப் பட்டு, உன்னதமான பாய்மரம் முறிந்து மாண்டு புதைக்கப் படுங்கால், அதற்கு முத்த மிடுவது போல், சாய்கிறதோ என்று மயங்கிடும் என் மனம். கோயி லுக்குச் சென்று கல்லாற் சமைத்த கோபுரத்தைப் பார்ப் பேனாயின், கடல் மத்தியில் அதைப் போன்ற உன்னதமான கற்பாறைகளிருந்து, என் மிருதுவான மரக்கலங்களின் பக்கங்களில் தாக்க, அவைகள் மீதிருந்த திரவியமெல்லாம் திரை கடலின் மீது சிதறுண்டுபோக, சப்திக்கின்ற சமுத் திர ராஜன் பட்டு வஸ்திரங்களை யெல்லாம் உடுத்திக் கொள்ள அபகரிக்க, சற்று முன் அதிக விலை பெற்றிருந்த கம்பல் க்ஷணநேரத்தில் கவைக் குதவாத தாகிப்போகுமே, என்னும் கவலை யன்றோ பாதிக்கும். இவைகளையெல்லாம் பற்றி யோசிக்கப் புத்தி யிருக்கும்பொழுது, அந்தச் சிந் தையே, அவைகள் அகஸ்மாத்தாய் நேர்ந்தால் எனக்கு என்ன துயரத்தைத் தரும்,என்னும் கவலையை உண்டாக்கா திருக்குமா? எனக்கு நீர் காரணம் கூறவேண்டிய தில்லை. அவரது வாணிபத்தின் மீது மனஞ் செல்வதால் வருத்தத்துட னிருக்கிறார் அநந்தநாதர்.

அ. நான் சொல்வதை நம்புங்கள்; அப்படியன்று. என் செல்வ மெல்லாம் ஒரே கப்பலிலாவது அல்லது ஒரே யிடத்திற் காவது ஏற்றப்பட்டிருக்க வில்லை என்று நான் சந்தோஷப் படுகிறேன்; அன்றியும் என் ஐஸ்வரியமானது கேவலம் இவ் வருஷத்திய லாப நஷ்டத்தையே பொறுத்ததுமன்று. ஆகவே எனக்கிப்பொழு திருக்கும் வருத்தம் வர்த்தக விஷயத்தால் வந்த தன்று.

சோ. சரி, அப்படியானால் காதல் கொண்டிருக்கிறீர் நீர்.

அ. சீ! சீ!

சோ.காதலு மல்லவா? ஆனால் சந்தோஷமா யில்லா தபடியால் யில்லாதபடியால் சஞ்சலத்தோ டிருக்கின்றீர் என்போம். இவ்வாறே, நான் துக்கத்துட னில்லாதபடியால், சந்தோஷமா யிருக்கிறேன் என்று சிரித்து குதூஹலத்துட னிருக்கக்கூடும் எளிதில். அசுவனிதேவர் மீது ஆணைப்படி, அகிலத்தில் என்ன என்ன ஆச்சரியகரமான ஜன்மங்கள் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றன! சிலரோ, நாகஸ்வரம் வாசிப்பவனைக் கண்டு இடைவிடாது நகைக்கும் கிள்ளைகளைப்போல், எந் நேரமும் மலர்ந்த கண்க ளுடையராய் நகைத்த வண்ணம் காலம் கழிக்கின்றனர். மற் றும் சிலரோ, பிரம்ம ரிஷி தூர்வாசரே நகைக்கத்தக்க பரி ஹாச வார்த்தையைக் கேட்டபோதிலும், நகைப்பதற் கறி குறியாகப் பல்லைத் திறவாது, முகத்தைச் சுளித்த வண் ணம் வாழ்ந்து வருகின்றனர்.- இதோ வருகின்றார் உமது ஆருயிர்த்தோழன் பானுசேனர், கிரிஜநாதர், லீலாதரர் எங்களுக்கு விடையளியும். அவர்களுடன் சாம்பாஷித் தாவது சந்தோஷமாயிரும்.

சா. உம்மை உற்சாகப்படுத்தும்பொருட்டு இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருப்பேன், எம்மைப் பார்க்கிலும் ஆப்த நண் பர்களான இவர்கள் வந்திராவிட்டால்.

அ. உங்களுடைய நட்பையும் நான் அருமையாகத்தான் பாவிக் கிறேன். உங்களுக்கேதோ வேலை யிருக்கின்றது, அதன் பொருட்டுப் போகின்றீர் இந்தப் போக்கைச் சொல்லி, என்றெண்ணுகிறேன்.

பானுசேனன், லீலாதரன், கிரிஜாநாதன் வருகின்றனர்.

சா. ஐயா, உங்களையெல்லாம் கண்டது, இன்று சுதினம்.

பா. எங்களுக்கும் அப்படியே. எப்பொழுது நாம் எல்லாம சந் தோஷமாய்க் காலம் கழிப்பது? எந்தச் சமயம் சொல்லுங் கள்? வர வர உங்களைக் காண்பதே கடினமா யிருக்கிறதே!- இப்பொழுதே போகவேண்டிய தவசியமா?

சா. உங்களுக்குச் சாவகாசமாய் யிருக்கும் சமயம் பார்த்து எங்களுக்குச் சாவகாசத்தை உண்டு பண்ணிக்கொள்கிறோம் உம்மைக் காண.

[சாம்பநாதனும், சோமேஸ்வரனும் போகிறார்கள்.]

லீ. ஐயா, பானுசேனரே, அநந்தநாதர் உமக்கு அகப்பட்டு விட்டபடியால் நாங்க ளிருவரும் விடைபெற்றுக்கொள்ளு கிறோம். சாப்பாட்டு வேளையில் நாம் சந்திக்கவேண்டிய இடத்தைப் பற்றி சற்றே கவனிக்க வேண்டுகிறேன்.

பா. நான் உங்களை எப்படியும் சந்திக்கின்றேன்.

கி. என்ன ஒரு மாதிரி யிருக்கின்றீர், அநந்தநாதரே? உலக விஷயங்களைப்பற்றி அதிகமாகப் பாராட்டுகின்றீர் என்று நினைக்கின்றேன். அதிக கவலைப்பட்டு அதைச் சம்பாதிப் பவர் அதன் சுகத்தை யிழப்பார். என் வார்த்தையை நம் பும், நீர் மிகவும் மாறியிருக்கின்றீர்.

அ. கிரிஜாநாதரே, நான் உலகத்தை உலகமெனவே பாராட்டுகின்றேன் – ஓர் நாடக சாலையாக. இதில் ஒவ்வொரு மனிதனும் அவனவன் ஆட்டத்தை ஆடவேண்டும்; என்னுடைய பாகம் சோககர மானது, அவ்வளவே.

கி. ஆனால் ஹாஸ்ய பாகம் என்னுடையதாக இருக்கட்டும். சந்தோஷத்திலும் சிரிப்பிலும் காலம் கழித்தே எனக்கு வயோதிகம் வரட்டும் ; துக்கப்பட்டுக்கொண்டே துன்ப மனுபவிப்பதைவிட, மதுவுண்டு நான் மதர்த்து வாழ்வேனாக! ஒரு மனிதன் தன்னுடலில் உயிரிருக்கும்பொழுதே சிலையில் செதுக்கப்பட்ட தன் பாட்டனாரின் பிம்பத்தைப்போல் உட்கார்ந்திருப்பானேன்? கண் விழித்த வண்ணம் உறங்கு வானேன்? சுடுசுடுத்த முகத்துடன் சும்மா இருந்து சோகையை வரவழைப்பானேன்? அநந்தநாதரே, நான் உமக் கொன்று சொல்லுகிறேன். உம்மீதுள்ள பிரீதியால் இதைச் சொல்லுகின்றேன். இவ் வுலகத்தில் சிலர் இருக்கி றார்கள், அவர்கள் பாசி படர்ந்த அசை வற்றதடாகங்களைப் போல் தங்கள் முகத்தை வைத்துக்கொண்டு, ஆழ்ந்த அறி வும் அளவற்ற ஞானமும் அதிக புத்தி கூர்மையுமுடையவ ரென்று மண்ணுலகத்தோர் மதித்திட விரும்பி வேண்டு மென்று மெளனம் சாதிக்கின்றனர். அவர்களைப் பார்த்தால் ”நான்முற்று முணர்ந்த மௌனி, நான் வாயைத் திறந்தால் நாயும் குலைக்க லாகா என்று கூறுவதுபோலிருக்கும். அநந்தநாதரே, இம்மாதிரி மனிதரை நான் நன்றா யறிவேன். பேசா திருப்பதினாலேயே அவர்கள் பேரறிவாளரென மதிக் கப்படுகிறார்கள். வாயைத் திறந்தால் அவர்கள் புல்லறி வாளரெனப் பூவுல கெங்கும் பிரசித்தமாகும். இதைப்பற்றி இன்னும் கூறுவேன் உம்மிடம் வேறொரு சமயம். நீர் இப் பொழுது இம்மாதிரியாய்ச் சோகை பிடித்தவன் போ லிருந்து சுத்த மூடர்பெற விரும்பும் பட்டப் பெயரைப் பெற முயல வேண்டாம். – லீலாதரரே, வாரும் நாம் போவோம். நீர் சுகமாய் இரும் அதுவரையில் ; மத்தியான போஜனம் கொண்டபின், மற்றப் போதனையையும் கூறி முடிக்கின்றேன்.

லீ. சரி, ஆனால் மத்தியான போஜன காலம்வரையில் உம்மை விட்டுப் பிரிந்திருக்கிறோம். கிரிஜாநாதர் கூறிய மெளன ரேனிகளில் நானும் ஒருவனாய் இருக்கவேண்டி யிருக்கிறது; ஏனெனில், அவர் என்னவோ எனக்குப் பேச இடம் கொடுக்கப்போகிற தில்லை.

கி. சரி, என்னுடன் இன்னும் இரண்டு வருஷம் உமது காலத் தைக் கழியும், உம்முடைய நாவின் ஒலியையே, உமது செவி யறியாதிருக்கும்படி செய்கிறேன்.

அ. போய் வாரும், இதைக்கொண்டு வாயாடுவதில் வல்லவனாக முயல்கிறேன்.

கி. உண்மையில் மிகவும் சந்தோஷம். ஏனெனில் மெளனமானது நாவுலர்ந்த நரனிடத்தும், நாணய மற்ற நாரியிடத்துமே சோபிக்கத் தக்கது.

(ஜீலாதரன், கிரிஜாநாதன் போகிறார்கள்.)

அ. அவன் கூறியதில் ஏதாவ திருக்கின்றதா?

பா. வீண் வார்த்தையாடுவதில் வாணீபுர முழுவதிலும் கிரிஜா நாதனுக்கு ஒப்பானவர் ஒருவரு மில்லை. அவன் நியாயத்தை அறியவேண்டில், இரண்டு மரக்கால் தவிட்டில் இரண்டு அரிசியைத் தேடிக் கண்டுபிடிப்பதுபோல் பிரயாசைப்பட வேண்டும், நாள் முழுவதும் நாடிக் கண்டுபிடிக்க வேண்டும்; அங்ஙனம் கண்டுபிடித்தாலோ, கஷ்டத்திற்குக் கூலியாகாது.

அ. சரி, அதிருக்கட்டும். எந்தத் தேவியையோ தரிசிக்கவேண்டி இரகசியமாய் யாத்திரை போகவேண்டுமென்று பிரமாணம் செய்திருக்கிறாயே, அது யார் அது? அவளைப்பற்றி இன்று என்னிடம் கூறுவதாக வாக்களித்தனை யல்லவா?

பா. என் அற்ப வரும்படிக்கு அமைந்தபடி வாழாது, ஆடம்பர மாய்ச் செலவிட்டு என் ஆஸ்தியை அதிகமாய் அழித்திருக் கிறேன் என்பது, அநந்தா, நீ அறியாத விஷயமன்று. அச் செல்வாக்கினின்றும் நீங்கி, செலவைக் குறைத்து வாழ வேண்டி யிருக்கின்றதே என்று இப்பொழுது நான் சிந்தைப் படவில்லை. கணக்கின்றிச் செலவழித்து காலம் கழித்ததினா லுண்டான பெருங் கடன்களினின்றும், கவுரமாய் என்னை மீட்டுக்கொள்வதே, எனக் கிப்பொழுது பெருங் கவலையாம் அநந்தா, உனக்கே நான் அதிகமாய்க் கடன்பட் டிருக் கிறேன், பணத்திலும் பிரீதியிலும்; என்மீ துனக் குள்ள பிரீதியானது, நான் கொடுக்கவேண்டிய கடன்களை ஒழித்து நான் கடைத்தேறுவதற்குச் செய்துள்ள யோசனைகளையும் சூழ்ச்சிகளையும், உன்னிடம் வெளியிடலாமென்று என்னை நம்பும்படிச் செய்கிறது.

அ. பானுசேனா, உன்னை நான் வேண்டுகிறேன், உடனே அதை எனக்குத் தெரிவி ; உன்னை எப்பொழுதும் நான் மதிப்பது போலவே, அதையும் நான் கௌரவமாய் மதிக்கக்கூடு மாயின், என் செல்வமும்,நானும், என்னுடைய சர்வ ஆஸ்தியும், உன் ஆபத்திற் குதவ அடிமைப்பட்டிருக்கின் றன வென்று உறுதியாய் நம்பு.

பா. நான் பள்ளிக்கூடத்தில் வாசிக்கும் பருவத்தில், நான் எய்த ஓரம்பு காணாமற்போக, அதைக் கண்டுபிடிக்க வேண்டி, அதே வேகத்துடன் செல்லும்படியான வேறொரு அம்பை அதே திக்காக கவனத்துடன் எய்து, இரண்டையும் இழக் கத் துணிந்து இரண்டையும் கண்டெடுத்திருக்கின்றேன். நான் இப்பொழுது கூறப்போகின்ற யோசனையும், இவ் வாறே கபட மறியாப் பேதமை யாதலால். பால்யத்தில்நான் செய்ததை உதாரணமாகக் கூறினேன். நான் உனக்குச் செலுத்தவேண்டிய கடன் அதிக மிருக்கிறது, மனம் போன வழி செலவழித்ததினால் அதனைத் தீர்க்க அசக்தனா யிருக் கின்றேன். முதலில் எய்த அம்பின் பின்பாக, மற்றொரு அம்பை எய்ததுபோல், கொடுத்த கடனுடன் இன்னும் கொஞ்சம் கடன் கொடுப்பையாயின், நான் ஜாக்கிரதையாய்க் கவனித்து, இரண்டு கடன்களையும் ஒன்றாய்க் கழிக்கவாவது கழிக்கின்றேன், இல்லாவிடின் இரண்டாம் முறை கொடுத் ததை மீட்டும் கொடுத்துவிட்டு, முதற் பட்ட கடனுடனிருக்கின்றேன்.

அ. என்னைநீ நன்றாயறிந்திருந்தும் இவைகளை யெல்லாம்பற்றி இவ்வளவு என்னிடம் சுற்று வழியாகக் கூறிக் காலத்தை விருதாவில் கழிப்பானேன்? நீ இவ்வாறு என் சக்தி யுள் ளளவு உனக்கு உதவுவேனோ என்னவோ என்று சந்தேகம் கொள்வது, என்னுடைய ஆஸ்தி முழுவதையும் நீ அழிப்ப தைப் பார்க்கிலும், பெருங் குற்ற மிழைப்ப தாகும் எனக்கு; சந்தேக மின்றி, என்னால் செய்யக் கூடுமென்று உன் புத்தி யில் என்ன படுகின்றதோ, அதை இந்த க்ஷணம் வாய் திறந்து சொல் அதைச் செய்து முடிப்பது என் பாரம். ஆகவே, சொல் உடனே.

பா. மணிபுரத்தில் ஓர் கன்னிகை யிருக்கின்றாள்,மிகுந்த செல்வ வதி, மிகுந்த ரூபவதி; அந்த ரூபத்தினும் மேம்பட்ட ஆச்சரியகரமான குணவதி. சில சமயங்களில் அப் பெண்மணி என்னைத் தன் கடைக் கண்ணினால் காதலோடு பார்த்து தன் கருத்தை யறிவித்திருக்கிறாள். அவள் பெயர் சரோ லினி, மிதிலை மன்னன் புதல்வி ஸ்ரீராமன் மனைவிக்குக் குறைந்தவளல்ல. பார் முழுவதும் அவள் பெருமை பரவி யிருக்கின்றது, நான்கு திக்குகளிலிருந்தும் இவளை நாயகி யாகப் பெற நாநிலத்துச் சீமான்களெல்லாம் போய்ச் சேரு கிறார்கள்.ஜானகியின் பேரழகைக் கேட்டு மன்னர் மன்ன ரெல்லாம் மிதிலையைச் சேர்ந்ததைப்போல், இக்கட்டழகி யைக் கடி மணம் புரியவரும் கனவான்களால், மணிபுரம் மிதிலை ஆயது. அநந்தா, அவர்களுக் கெதிராக நானு மொருவனாக நிற்க, எனக்கு வகை யிருக்குமாயின், நான் வேண்டியதைப் பெற்று பெரும் பாக்கிய சாலி யாவேன் என் பது திண்ணமென்று,என் மனத்தில் ஏதோ தோன்றுகிறது.

அ. என் செல்வமெல்லாம் செறி கடலின்மீ திருக்கின்ற தென் பது நீ அறிந்த விஷயமே. என்னிடமோ பணமில்லை, வைத்துக் கடன் வாங்கப் பொருளு மில்லை; ஆகையால் நீ உடனே புறப்பட்டுப் போய் என் நாணயத்தின்மீது, வாணீபுரத்தில் எவ்வளவு கடன் வாங்க முடியுமோ பார். எவ்வளவு முடி யுமோ, அவ்வளவு சேகரித்து, மணிபுரம் போய் அந்த சரோ ஜினியைக் காண உடனே புறப்படுவாய். பணம் கிடைக்கத் தக்க இடத்திற்கு உடனே புறப்பட்டுப் போய் விசாரி. நானு மவ்வாறே செய்கின்றேன். எனக்காகவென்று சொல்லி வாங்கினும் சரிதான்,என் ஜாமீன் மீது வாங்கினும் சரியே, எனக்கொரு ஆட்சேபனையுமில்லை. [போகிறார்கள்.]

காட்சி முடிகிறது.

இரண்டாம் காட்சி 

இடம்:- மணிபுரம். சரோஜினியின் வீட்டிலோர் அறை.

சரோஜினியும், நீலகேசியும், வருகிறார்கள்.

ச. உண்மையில் நீலகேசி, என் சிற்றுடலுக்கு இப் பெரிய உலகத்தின்மீது வெறுப் புண்டாயிருக்கிறது.

நீ. என் அம்மணி, உமக்கு எவ்வளவு நற்பாக்கிய மிருக் கின்றதோ அத்தனைத் துர்ப்பாக்கிய மிருக்குமாயின், நீர் அவ் வாறு வெறுப்படைதல் நியாயமாகும். ஆயினும் எனக்குத் தெரிந்தவரையில், அதிகமாய்ப் புசிப்பவர்களும் ஆகார மின்றி வருந்துவோர்களைப்போலவே வியாதிக்கு ஆளாகி றார்கள். ஆகவே, இரண்டு மின்றி நடு நிலையிலிருப்பது சுவல்பமான சுகமன்று று; அபரிமிதம் அதி சீக்கிரத்தில் மூப்பை அடைவிக்கும். மிதமா யிருத்தலே நெடுநாள் வாழ்க்கைக்கு அனுகுணமாம்.

ச. நல்ல பழமொழிகள், கேட்பதற்கு அழகா யிருக்கின்றன.

நீ. அதன்படி நடந்தால் இன்னும் அழகா யிருக்கும்.

ச. செய்யவேண்டியது இன்னது என்று அறிவது எவ்வளவு சுலபமோ, அவ்வளவு சுலபமா யிருந்தால் அதன்படி செய்வது,  கூரை வீடுகளெல்லாம் குபேரன் மாளிகைகளாகும். குடிசைகளெல்லாம் கோபுரங்களாகிவிடும். தான் போதிக் கும் வண்ணம் நடக்கின்றவனே சத்குரு வாவான். நடக்க வேண்டிய ஒழுக்கத்தைப்பற்றி நாலைந்து பேருக்கு நான் உப தேசம் செய்வது சுலபம், அந்த நாலைந்து பெயரில் ஒருத்தி யாய், என் உபதேசப்படி நானே நடத்தல்தான் கஷ்டம். அறி வானது, நமது இந்திரியங்களை அடக்குதற்பொருட்டு, கோட் பாடுகளை ஏற்படுத்தலாம். ஆனால் அடக்க மூடியா மன் தானது, அக் கோட்பாடுகளை யெல்லாம் குதித்துத் தாண் டிப்போம். யௌவனமென்னும் பித்தம் பிடித்த முயலானது, அடக்கியாள விரும்பும் அறிவென்னும் வலைக்குளகப்படாது மீறிப் போம். ஆயினும் இந்த நியாயங்களெல்லாம் நான் ஒரு கணவனை வரிப்பதற்குப் பிரயோஜனப்படுவன வல்ல:- ஐயோ! ஈசனே! நான் வரிப்பதாவது? விரும்பிய புருஷனை வரிப்பதற்கும், வேண்டாப் புருஷனை வெறுப்பதற்கும் எனக் கென்ன சுதந்தர முண்டு? உயிரோடிருக்கின்ற ஒரு பெண்ணின் மனமானது இறந்துபோன அவளது தந்தையின் வாக்கினால் இவ்வாறு கட்டப்பட்டிருக்கின்றது! – நீலகேசி, ஒரு புருஷனை வரிக்கவும் மற்றவர்களை வெறுக்கவும் சுதந்தர மில்லா திருப்பது பெரும் துர்ப்பாக்கிய மல்லவா?

நீ. உம்முடைய பிதா மிகவும் நற்குணமுடையவர்; அப்படிப் பட்ட புண்ணியாத்மாக்களுக்கு, அந்திய காலத்தில் மனத் தில் தோன்றுவது தவறாகாது. ஆகவே அவர் ஏற்படுத் திய, பொன் வெள்ளி ஈயத்தா லாகிய இம் மூன்று பெட்டி களுள், அவர் அர்த்தத்தைத் தெரிந்தெடுப்பவனே, உம்மை மணக்கவேண்டி யிருப்பதால், உமது காதலுக் குரிய கணவனன்றி, வேறொருவனும் சரியாகக் கண்டெடுக்க மாட்டான் என்பது திண்ணம். அதிருக்கட்டும் — இப்பொழுது உம்மை வரிக்க வந்திருக்கும் சீமான்களைப்பற்றி உமது மனம் எப்படி இச்சை கொண்டிருக்கிறது?

ச. நீ அவர்களின் பெயரை ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டு வா. அப்படி நீ சொல்லிக் கொண்டு வரும் பொழுது அவர்களை நான் வர்ணித்துக்கொண்டு வருகிறேன். அந்த வர்ணனையினின்றும் என் மனத்தினிச்சையை யறிந்துகொள்.

நீ. முதலில், நேபாளத்து அரச குமாரனிருக்கின்றார்.

ச. அவரா? அவர் ஒரு குதிரைக்குட்டியே. தன் குதிரையைப் பற்றிப் பேசுவது தவிர வேறொன்றும் அறியார். தன் குதி ரைக்குத் தானே லாடம் அடிக்கத் தெரியும் என்பதை, தன் னிடமுள்ள நற் குணங்களில் முக்கியமானதாக மதிக்கிறார். அவர் தாயார் தனித் திருந்த காலத்தில் கருமான் ஒருவன் அரண்மனைக்கும் சென்றிருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.

நீ. அதற்குப் பிறகு, பாடலீபுரத்துப் பிரபு.

ச. முகத்தைச் சுளிப்பது தவிர ஜகத்தில் வேறொன்றும் செய்வ தில்லை அவர். ” என்னை விரும்பாவிட்டால், உன்னிஷ்டம் என்பதுபோல் முகத்தை வைத்துக்கொண்டிருக்கிறார். வேடிக்கைக் கதைகளைக் கேட்கின்றார், நகைப் பென்பதைக் காணோம் முகத்தில்; இளம்வயதிலேயே இப்படி ஒழுங்கற்ற சோகத்தோ டிருப்பவர், முது வயதில் முற்றும் துறந்த வேதாந்தி யாவர் என்று அஞ்சுகிறேன். இவ் விருவரிலொரு வரை நான் விவாகஞ்செய்துகொள்வதைவிட, இடு காட்டி லுள்ள பிரேத மொன்றை மணப்பேன். இவர்களிட மிருந்து ஈசன் என்னைக் காப்பாற்றுவாராக!

நீ. பஸ்சிமதேசத்துப் பிரபு லாவண்யருக்கென்ன சொல்லுகிறீர்?

ச. ஈசன் மனிதனாக அவரைச் சிருஷ்டித்தார் ; ஆகவே நாமும் அவரை மனிதனாகப் பாவிப்போம். உண்மையில் பரிஹாசம் செய்வது பாபமென நான் அறிவேன். ஆயினும் இவரை ஐயோ! நான் என்னென் றுரைப்பது? குதிரைப் பயித் தியத்தில் நேபாளத் தரச குமாரனுக்கு மேம்பட்டிருக்கின்றார். கடு கடுத்த முகத்திலோ, பாடல் புரத்துப் பிரபுவைத் தோற்கடிக்கிறார். எல்லா மனிதருடைய துர்க்குணங்களும்

கொண் டிருக்கின்றன அவரிடம். ஆயினும், அவரை ஒரு மனிதனாகக் கூறக்கூடாது. குயில் பாடினால் கூத்தாட ஆரம்பிக்கின்றார் ; தன்னிழலுடன் போர்புரிவார். அவரைக் கலியாணம் செய்துகொண்டால், இருபது பெயரை நான் கலியாணம் செய்துகொண்டதாகும். அவர் என்னை வெறுத் தாலும் நான் பொறுப்பேன்.அவர் என்மீது பித்தம் பிடித்த படி காதல் கொண்டாலும், அதற்குப் பிரதி செய்ய வகையறியேன்.

நீ. சிங்கள தேசத்திலிருந்து வந்த இளஞ்சீமான் பற்குணருக் கென்ன சொல்லுகின்றீர்?

ச. அவரிடம் நான் ஒன்றும் கூறுவ தில்லை என்று உனக்குத் தெரியுமே? அவர் பேச்சு எனக்குத் தெரியாது, என் பேச்சு அவருக்குத் தெரியாது. அவருக்குத் தமிழ்தெலுங்கு கன்னடம் மலையாளம் ஒன்றுந் தெரியாது.எனக்கோ அவ ரது சிங்கள் பாஷையில் ஒரு பதமும் தெரியாதென்று, நீயே நியாயஸ்தலத்தில் நின்று சத்தியம் செய்வாய். ஆள், உருவத் தில், ஒழுங்காய்தா னிருக்கிறார்.ஆயினும், ஐயோ ! ஊமை யுடன் யார் வார்த்தையாடுவது? அவருடைய உடை என்ன அலங்கோலமா யிருக்கிறது பார்த்தனையா? அவர் அங்கியை ஐதராபாத்திலும், தலை குட்டையைத் தக்காணத்திலும், அங்கவஸ்திரத்தை வங்க தேசத்திலும், நடை யொழுக்கங் களை நானா தேசங்களிலும் விலைக்கு வாங்கியிருக்கவேண்டும்.

நீ. அவரது தேசத்துக்குப் பக்கத்துள்ள சகேதநாட்டுப் பிரபு வைப்பற்றி என்ன எண்ணுகின்றீர்?

ச. அயலாரிடத்து அவருக்கு அன்பு அதிகமுண்டு என்றே, சிங் கள தேசத்துச் சீமானிடமிருந்து கன்னத்தில் ஒரு அறை கடன் வாங்கி இருக்கிறார், இப்பொழுது எனக்குச் சக்தி யில்லை, சக்தி வந்தவுடன் கடனைத் தீர்க்கின்றேன், என்று சபதம் செய்திருக்கிறார். அதற்கு ஜாமீனாக இருந்து, பஸ் சிம நாட்டுப் பிறபு மற்றொரு கன்னத்தில் ஒரு அறை முத் திரை வைத்திருக்கிறார் என எண்ணுகின்றேன்.

நீ. சௌராஷ்டிரத்தை யாளும் சேரமான் மருகனைப்பற்றி என்ன எண்ணுகின்றீர்?

ச. அவர் காலையில் சாதாரணமா யிருக்கும்பொழுதே, கடு வெறுப்பா யிருக்கின்றது. மது பானம் செய்தபின் மத்தி யானத்தில் யோசிக்க வேண்டியதே யில்லை. நல்ல குணத்தி லிருக்கும்போதே நர ஜன்மத்துடன் சேர்க்க லாகாது; கெட்ட குணம் வந்துவிட்டாலோ, காட்டு மிருகத்திற்கும் கடைப்பட்டவர்தான். எனக்கு எப்படிப்பட்ட கேடுகெட்ட ஸ்திதி சம்பவித்தபோதிலும் அவர் கையிற்படாதபடி த்தேறும் உபாயத்தைக் கண்டுபிடிப்பேனெனக் கோருகிறேன்.

நீ. ஒருவேளை பெட்டிகளுள் தெரிந்தெடுப்பதாகக் கூறி, சரி பெட்டியைக் கோருவா ராயின், அப்பொழுது நீர் அவரைக் கணவனாக ஒப்புக்கொள்ளாவிட்டால், உமது தந்தையின் வாக்கைத் தட்டியதாகுமே?

ச. ஆகவே அப்படிப்பட்ட கெடுதி ஒன்றும் நேரிடா வண்ணம், தவறான பெட்டி யொன்றின்மீது, ஒரு பெரிய

புட்டி கொழும்பு சாராயத்தை வை. அந்தப் பெட்டிக்குள் பிசாசே யிருந்தாலும், மேலே அந்தப் புட்டியைக் காண்பாராயின் அதைக் கோருவார் என்பதற்குச் சந்தேக மில்லை. பஞ்சையை மணம் புரிவதைவிடப் பாரில் நான் வேறு எதையும் செய்வேன்.

நீ. அம்மா, இவர்களில் எவரையாவது மணக்கவேண்டி வருமே என்று தாம் ஒன்றும் அஞ்ச வேண்டிய தில்லை. அவர்கள் தங்களது தீர்மானங்களை எனக்குத் தெரிவித்திருக்கிறார்கள்; அதென்னவென்றால், உம்முடைய தகப்பனார் ஏற்படுத்திய இந்தப் பெட்டிகள் பரிசோதனையா லன்றி, வேறுவிதத்தால் உம்மை விவாகஞ்செய்துகொள்வது அசாத்தியமானால்,உம் மைத் தொந்தரவு செய்யாது பேசாமல் வந்த வழி பார்த்து, தங்கள் தங்கள் வீடு போய்ச் சேரவேண்டு மென்பதே.

ச. ஒளவையாரைப்போல், அத்தனைக் கிழவியானாலும், என் தகப்பனார் மனப்படி என்னை யாராவது மணம் புரிந்தா லொழிய, கன்னிகையாகவே என் காலத்தைக் கழித்து மரிப் பேன். இவர்களெல்லாம் அவ்வளவாவது அறி வுள்ளவர் களா யிருக்கின்றார்களே, அது எனக்கு மிகவும் சந்தோஷம். அவர்களில் ஒவ்வொருவரும் எப்படியாவது தொலைந் தால் போதுமென் றிருக்கின்ற தெனக்கு – சுவாமியின் கடாட்சத் தினால் சவுக்கியமாய்ச் சீக்கிரம் வீடுபோய்ச் சேருவார்களாக!

நீ. அம்மணி, உம்முடைய தந்தையின் காலத்தில், வாணீபுரத்தி லிருந்து ஒரு பிரபு இங்கு வந்திருந்தாரே, ஞாபக மிருக் கின்றதா? நல்ல வித்வான், சுத்த வீரன், மகத தேசத்து மந்திரியுடன் வந்திருந்தாரே?

ச. ஆம்,ஆம், அவர் பெயர் பானுசேனர்,– அப்படித்தான் அவர் அழைக்கப்பட்டதாக எனக்கு ஞாபகம்.

நீ. ஆம், உண்மை தான். அம்மணி, நான் என் பேதைக் கண் களைக் கொண்டு பார்த்தவர்களுக்குள், அவர்தான் கட்டழகிக்கேற்ற காதலன்.

ச. அவர் எனக்கு நன்றாய் ஞாபக மிருக்கிறது, நீ கூறிய புகழ்ச் சிக்குத் தகுந்தவரே.

ஒரு வேலையாள் வருகிறான்

என்ன இப்பொழுது? என்ன சமாசாரம்?

வே. புதிதாய் வந்த நான்கு பெயரும் தம்மிடம் விடைபெற்றுச் செல்லக் காத்துக்கொண் டிருக்கின்றார்கள். அன்றியும் ஐந்தாவது ஆசாமி மறவ நாட்டின் மன்னனிடமிருந்து ஒரு தூதன், தன் எஜமான் தம்மைக்காண இன்றிரவு வருவ தாகச் சேதி கொண்டுவந்திருக்கிறான்.

ச. மற்ற நால்வருக்கும் எவ்வளவு மன சந்துஷ்டியுடன் போகும்படி  விடையளிக்கின்றேனோ அவ்வளவு சந்தோஷத்துடன் இந்த ஐந்தாவது புருஷனை வரவழைப்பேனாயின், அவர் வருகைக்காக நான் சந்தோஷப்பட வேண்டியதே. தேவர் களின் குணமும் ராட்சதர்களின் முகமு முடையவரா யிருந் தால், அவர் எனக்குக் கணவனாவதைவிட ஆசாரியனாயிருக் கும்படி கோருவேன் – வாராய், நீலகேசி -அடே, நீ போ முன்பு.- ஒரு காதலனை வெளியில் தள்ளி, கதவைத் தாளிடு முன் மற்றொருவன் வந்து கதவைத் தட்டுகிறான். [போகிறார்கள்.]

காட்சி முடிகிறது.

மூன்றாம் காட்சி 

இடம்.– வாணீபுரம் வணிகர் வீதி.

பானுசேனன், ஷாம்லால் வருகிறார்கள்.

ஷா. மூவாயிரம் பொன்.- சரி.

பா. ஆம்,ஐயா,-மூன்று மாதத்திற்கு

ஷா. மூன்று மாதத்திற்கு – சரி

பா. அதற்காக – நான் சொன்னபடி, அநந்தநாதர் ஜாமீனாக இருப்பார்.

ஷா. அநந்தநாதர் ஜாமீனாக இருப்பார் – சரி.

பா. எனக்கு உதவி புரிவீரா ? எனக்குச் சந்தோஷம் உண்டுபண்ணுவீரா? உமது உத்தரம் நான அறியலாமா?

ஷா.மூவாயிரம் பொன்,மூன்று மாதத்திற்கு, அதற்காக அநந்த நாதர் ஜாமீன்.

பா. அதற்கு உமது பதில்?

ஷா. அநந்தநாதர், நல்ல மனுஷ்யன் தான்.

பா. அப்படியல்லவென்று ஏதேனும் அவதூறு கேள்விப்பட்டிருக்கிறீரா?

ஷா. ஓ! இல்லை, இல்லை, இல்லை, இல்லை !- நான் நல்ல மனுஷ் யன் என்று சொன்னதற்கு அர்த்த மென்னவென்றால் அவர் பொறுப்பான ஜாமின் என்று நான் எண்ணுவதாக நீர் அறியும்பொருட்டே. ஆயினும் அவருடைய சொத்துக ளெல்லாம் கொஞ்சம் சந்தேகத்திற்கிடமானது. அவருடைய ஒரு நாவாய் திரிபுரத்துக்குப்போயிருக்கிறது. இன்னொன்று வங்காளம் போயிருக்கிறது. அன்றியும் ரேவு துறையில் நான் அறிகிறபடி, மூன்றாவது நாவாய் நாவல் தீபத்திலும் நான்காவது சிங்களத்திற்கும் போயிருக்கின்றது, இன்னும் மற்றப் பொருள்களை யெல்லாம் ஆங்காங்கு இறைத்திருக் கின்றார் யோசனையில்லாமல். ஆயினும் மரக்கலங்களெல்லாம் மரத்தாலானவை, மாலுமிகளோ மனிதர்கள் தான்; நிலத்தி லும் எலிக ளிருக்கின்றன, சமுத்திரத்திலும் எலிகளிருக் கின்றன ; பூமியிலும் திருடர்களிருக்கிறார்கள், தண்ணீரின் பேரிலும் திருடர்களிருக்கிறார்கள்; அதாவது கப்பல் கொள் ளைக்காரர்களிருக்கிறார்கள்; இதல்லாமல் நீரினால் அபாயம், காற்றினால் அபாயம், கற்பாறைகளினால் அபாயம்,எல்லா மிருக்கின்றன.இருந்தாலும் அந்த மனுஷ்யன் பொறுப் பான ஜாமீன் தான், மூவாயிரம் பொன் – அவருடைய பத்தி ரத்தின்மீது கடன் கொடுக்கலாம் என்று எண்ணுகிறேன்.

பா. நிச்சயமாகச் செய்யலாம், சந்தேகமின்றி.

ஷா. எனக்கு நிச்சய மாகவேண்டும் சந்தேகமின்றி, அப்படிச் செய்யலாமென்று நிச்சயிக்கும் பொருட்டே நான் இப்பொழுது நன்றாக யோசிக்கவேண்டும்:- நான் அநந்தநாத ருடன் நேரிற் பேசக்கூடுமோ?

பா. இன்றைத்தினம் எங்களுடன் போஜனம் செய்யப் பிரிய மிருக்குமாயின்.

ஷா. ஆமாம், வந்து பன்றியின் மாமிசத்தை முகர்வதற்கு! உங்க ளுடைய சுவாமி மூன்றாவது அவதாரம் எடுத்தாரே, அதன் இறைச்சியைத் தின்பதற்கு! நான் உங்களிடம் விலைக்கு வாங்குவேன், உங்களுக்கு விற்பேன், உங்களோடு பேசு வேன், உங்களோடு நடப்பேன்,இன்னும் இவைபோன் றனவெல்லாம் செய்வேன். ஆனால் உங்களோடு புசியேன், உங்களுடன் குடியேன், உங்களுடன் தொழேன் – என்ன விசேஷம் ஐயா,ரேவில் ? யார் அது, இங்கு வருகிறது?

அகந்தநாதன் வருகிறான்.

பா. இவர்தான் அநந்தநாதர்.

ஷா. (தன்னுள்) இச்சகம் பேசித் திரியும் இறை தண்டுவோனைப் போன்ற இவன் முகத்தைப்பார்! இந்து மதஸ்த னாதல் பற்றி இவனை வெறுக்கின்றேன் நான். இதைப்பார்க்கிலும் இவனை அதிகமாய் வெறுப்பதற்கு இன்னொரு காரண முண்டு; புத்தி ஹீனத்தினால், வட்டிவாங்காமல் கடன் கொடுத்து, வாணீபுர மெங்கும் நாங்கள் செய்கிற வட்டி டி. லாவாதேவியைப் பாழாக்குகின்றான். ஒருதரம் இவன் குடுமி என் கையிலகப்பட்டால், எத்தனையோ நாளாயிருக்கும் என் துவேஷத்தை யெல்லாம் திர்ப்தியாய்த் தீர்த்துக்கொள் வேன். எங்களுடைய பரிசுத்தமான ஜாதியார்மீது துவே ஷம் பாராட்டுகின்றான். அன்றியும் நான் கஷ்டப்பட்டு சம்பா திப்பதை வட்டி யென்று பெயரிட்டிழித்து, என்னையும் என் வியாபாரத்தையும், எல்லோர் முன்னிலையிலும், அனேக வியாபாரிகள் ஒருங்கு சேரும் பயிரங்கமான இடங்களிலும், ஏளனம் செய்கின்றான்.- இவனை நான் சும்மா விட்டேனாயின் என் ஜாதியெல்லாம் நாசமாய்ப் போகட்டும்!

பா.ஷாம்லால், கேட்கிறதா?

ஷா. தற்காலம் என்னிடத்திலுள்ள சொத்தைப்பற்றி கணக் கிட்டுப் பார்க்கிறேன். இப்பொழுது எனக்கு ஞாபகமிருக்கிற வரையில், உடனே மூவாயிரம் பொன் மொத்தமாய்ச் சேக ரிக்க என்னால் முடியாது. ஆயினும் அதைப்பற்றி என்ன ? எங்கள் ஜாதியான் தூப்லால் என்னும் செல்வவந்த னாகிய ஜைனன், எனக்குதவுவான்.- ஆயினும் கொஞ்சம் பொறும்! எத்தனை மாதத்திற்கு வேண்டும் என்று விரும்பு கிறீர்? [அநந்தநாதனைப் பார்த்து) மஹாப்பிரபு, க்ஷேமமா யிருப்பீராக! பிரபு, தங்களைப்பற்றிதான் இப்பொழுது பேசிக்கொண்டிருந்தோம் கடைசியில் நாங்கள்.

அ. ஷாமலால், நான் வட்டிக்காக கடன் கொடுப்பதுமில்லை வாங்குவதுமில்லை யென்றாலும், எனது நண்பனுடைய அவ சியமான குறையைத் தீர்க்கும் பொருட்டு, என் ஏற்பாட்டி னின்றும் வழுவலானேன் – உனக்கெவ்வளவு வேண்டுமென் பதைத் தெரிவித்தனையா இவனுக்கு?

ஷா. ஆம், ஆம்; மூவாயிரம் பொன்.

அ. மூன்று மாதத்திற்கு.

பா. அதை மறந்தேன்.- மூன்று மாதத்திற்கு – நீர் அப்படித் தான் சொன்னீர். சரி ஆனால், உமது ஜாமீன்.-ஏதோ பார்க்கின்றேன்.-ஆனால் ஒரு வார்த்தை கேட்பீராக; நீர் வட்டிக்காக கடன் கொடுப்பது மில்லை வாங்குவது மில்லை யென்று கூறினதாக எனக்கு ஞாபகம்.

அ. ஆம், என் வழக்கமல்ல அது.

ஷா. திகம்பரர் தன்னுடைய மாமன் ஸ்வேதாம்பரருடைய மாடுகளை மேய்த்தபொழுது – இந்த திகம்பரர் பரிசுத்தமான தீர்த்தங்கரருடைய மூன்றாம் கால் – ஆம் மூன்றாங் கால் தான்.

அ. அவரைப்பற்றி என்ன ? அவர் வட்டி வாங்கினாரா?

ஷா. இல்லை; வட்டி வாங்க இல்லை.அதாவது, நீங்கள் சொல்லு கிறபடி, நேராக வட்டி வாங்கவில்லை. அவர் செய்ததைக் கவ னியும் நன்றாய். தன் வச மிருந்தபொழுது, அந்த ஆடு மாடு கள் போட்ட குட்டிகளை யெல்லாம் எடுத்துக்கொண்டார் அபிவிர்த்தி யடைவதற்கு இது ஒரு மார்க்கம் ; அவருக்கு அருகன் கருணையு முண்டாயிற்று. பொருளை விர்த்தி செய் தல் நன்மையே, திருட்டு வழியாய் அங்ஙனம் செய்யா திருப் பார்களாயின்.

அ. அத் திகம்பரர் தான் மேற்கொண்ட ஊ ஊழியத்தின் கூலிக் காக அதைப் பெற்றார். உங்களுடைய வேத சாஸ்திரத்தில் வட்டி வாங்குவதற்கு இது ஒரு நியாயமாக எடுத்துக் கூறி யிருக்கின்றதா என்ன? அல்லது உமது வெள்ளியும் பொன் னும் ஆடுமாடுகளா, தெய்வச் செயலால் விர்த்தியாவதற்கு?

ஷா. அது எனக்குத் தெரியாது, ஆடு மாடுகள விர்த்தியாவ தைப்போல் அத்தனை வேகமாய் விர்த்தியாகும்படி செய் கிறேன் அவைகளை நான்.-ஐயா, ஆயினும் நான் சொல் வதைக் கவனியும்.

அ. பார்த்தனையா பானுசேனா, இந்த நியாயத்தை? தர்ம சாஸ் திரங்களைப் பேய்களும் எடுத்துரைக்கும் தமது காரியத்தின் பொருட்டு, தூயதான வேத வாக்கியத்தைத் தனக் கத் தாட்சியாக எடுத்துக் கூறும் துராத்மாவானவன், நகை முகமுடைய பாதகனைப்போன் றிருக்கிறான்,- வெளிக்கு அழ காயும், உள்ளே அழுகியு மிருக்கும் அத்திப் பழத்தை ஒத் திருக்கின்றான். கபடமானது மேலுக்கு என்ன நல்ல வேஷம் தரிக்கின்றது!

ஷா. மூவாயிரம் பொன் – பெருத்ததொகை யாகும். பன்னிரண்டு மாதங்களில் மூன்று – என்ன வட்டி யாகிறதோ பார்க் கிறேன்.

அ. என்ன, ஷாம்லால்? எங்களுக் குதவுவையா?

ஷா. மஹாப்பிரபு, அநந்தநாதரே, பன் முறை பயிரங்கமாகப் பல ரறிய ரேவு துறையில் என்னை, என் பணத்தின்பொருட் டும், நான் வாங்கும் வட்டியின்பொருட்டும், வைத்திருக்கின் பொருட்டும்,வைதிருக்கின் றீர். அந்த வசை மொழிகளையெல்லாம் பொறுமையாகப் பொறுத்திருக்கின்றேன் பதில் பேசாது. அந்தப் பொறுமை எங்கள் ஜாதியாருக்கு ஓர் அறி குறியாம். என்னை நாஸ்தீக னென்றும், கழுத்தை யறுக்கும் பாதகனென்றும் திட்டி யிருக்கின்றீர்; என்னுடைய ஜைன ஆடையின்மீது காரி யுமிழ்ந்திருக்கின்றீர். எதற்காக? எல்லாம் என் பொருளை என்னிச்சைப்படி உபயோகிப்பதற்காக! இப்பொழுதோ, உங்களுக்கு என் உதவி வேண்டியிருப்பதாகக் காண்கின் றது. ஆகவே அதற்காக என்னிடம் வருகின்றீர். வந்து, ஷாம்லால், எங்களுக்குப் பணம் வேண்டும்.” என்கிறீர்,- அங்ஙனம் சொல்கிறீர் – நீர், என் தாடியின் மீது காரி யுமிழ்ந்து, ஏழை நாயை உதைத்து உமது வாசற்படிக்கு வெளியே தள்ளுவதுபோல் என்னை உதைத்த, நீர், உங்க ளுக்குப் பணம் வேண்டும். நான் உங்களுக் கென்ன பதில் சொல்லவேண்டும்? நாயிடம் பணமேது ? கேடுகெட்ட நாய் மூவாயிரம் பொன் கடன் கொடுக்குமா?” என்று சொல்லவேண்டாமா? அல்லது முழந்தா ளிட்டுப் பணிந்து, அடிமையைப்போல் மெல்லிய வார்த்தைகளால், வாய் பொத்தி, மிருதுவாய் தாழ்மையுடன், இவ்வாறு சொல்வதா? “கனம்பொருந்திய ஐயா, சுவாமி! போன புதன் கிழமை என்மீது காரியுமிழ்ந்தீர்! அன்றைத்தினம் என்னை உதைத்துத் தள்ளினீர்! இன் னொரு முறை என்னை நாயென் றழைத்தீர்! இத்தனை மரியாதையெல்லாம் நீர் எனக்குச் செய்ததற்காக, இவ்வளவு பணத்தை உமக்குக் கடன் கொடுக்கிறேன்,” என்று கூறுவதா?-

அ. மறுபடியும் நானுன்னை அவ்வாறு வைது, காரி யுமிழ்ந்து காலா லுதைத்தாலும் உதைப்பேன் ; நீ இந்தப் பணத் தைக் கடனாகக் கொடுப்பதானால், உன் சிநேகி தருக்குக் கொடுப்பதுபோல் கொடாதே.- எந்த மனிதன் தன் சிநேகி தனுக்குத் தன் பணத்தைக் கடன் கொடுத்து வட்டி வாங்கி அதை விர்த்தி செய்தான் ? உன்னுடைய பகைவனுக்குக் கடன் கொடுப்பதுபோல் கொடு. ஏனெனில், அவன் தவ றிப்போனால் உன் மனத்தில் கஷ்ட மில்லாமல் அபராதத்தை அவனிடம் வசூல் செய்யலாம் நீ.

ஷா.ஏனையா! இதோ பாரும்.- இத்தனைக் கோபமே உமக்கு? நான் உங்களோடு சினேகமாய், உங்கள் பிரீதியைப் பெற்று என்னை இழிபடச் செய்த அவமானத்தை யெல்லாம் மறந்து, உங்கள் தற்காலக் குறையைத் தீர்க்க விரும்புகிறேன்; என் பணத்திற்கு எனக்கு வட்டி அரைக் காசும் வேண்டாம் என்று சொன்னால்,நீர் கேட்கமாட்டேனென்கிறீரே. நான் செய்யக் கருதிய பட்சம் இதுவே.

பா. இது பெரிய உபகார மாகும்.

ஷா. இந்த உபகாரம் எப்படியும் செய்வேன்; வாருங்கள் என் னுடன், கணக்கனிடம் போவோம். அங்கு நீர் ஒரு வென் னிலைப் பத்திரம் எழுதிக் கொடும்; அதில் வேடிக்கை யார்த்தமாய், “இன்ன தினத்தில், இன்ன இடத்தில், ஏற் பாட்டின்படி அதில் கண்ட தொகை அல்லது தொகைகளை நீர் எனக்குத் திருப்பிக் கொடுக்காவிட்டால், அதற்கு அப் ராதம் உம்முடைய உடலினின்றும் எனக் கிஷ்டமான இடத் தில் சரியாக ஒரு ராத்தல் மாமிசத்தை நான் அறுத்து எடுத்துக் கொள்ளக்கடவேன் ” என்று எழுதுவோம்,

பா. சரிதான், அப்படியே ஆகட்டும். அந்தப் பத்திரத்தில் கையெழுத்து செய்து, மாறுபாடியிடத்தில் மட்டிலாக் கருணை உளதெனக் கூறுகிறேன்.

ஷா. இம்மாதிரி பத்திரத்தை எனக்காக நீ எழுதிக் கொடுக்க வேண்டாம். அதைவிட என் கஷ்டத்துடன் எப்படியாவது நான் வாழ்வேன்,

அ. என்ன? ஏன் பயப்படுகின்றாய், பானுசேனா? நான் அபரா தத்திற்கு ஆளாகமாட்டேன். இன்னும் இரண்டு மாதங் களுக்குள் – அதாவது இந்தப் பத்திரத் தவணைக்கு ஒரு மாதம் முன்னதாகவே – இந்தப் பத்திரத் தொகைக்குப் பதின் மடங்கு என்னிடம் வந்துசேரவேண்டியிருக்கிறது.

ஷா. ஐயோ! அருகக் கடவுளே ! அருகக் கடவுளே ! இந்த ஹிந் துக்கள் தான் என்ன மனிதரோ! இவர்கள் ஒருவரை யொரு வர் மோசம் செய்கிற வழக்கம், உலக மனைத்தையும் அவ் வாறே சந்தேகிக்கும்படி கற்பிக்கிறதே.-ஐயா, இதை மாத் திரம் எனக்குக் கொஞ்சம் சொல்லும்படி வேண்டுகிறேன். அவர் தவணைப்படி கொடாமல் தவறிப்போனால், இந்த அப ராதத்தை வசூல் செய்து, நான் அடையும் பலன் என்ன? ஒரு ராத்தல் நர மாமிசம், மனுஷ்யனிடமிருந்து எடுக்கப் பட்டது, அவ்வளவு ஆடு மாடுகளின் இறைச்சிக்குச் சமான மாகுமா ? அவ்வளவு விலைதான் பெறுமா? நான் இந்தச் சினேகம் பாராட்டுவது, அவருடைய நன் மதிப்பைப் பெறும் பொருட்டே. அவர் அதற் குடன்பட்டால்,சரி, இல்லாவிட்டால், உத்தரவளியும். நான் வருகிறேன். நான் விசுவாசம் காட்டவந்ததற்காக, என்னை வைது அனுப்பாதீர்.

அ. சரிதான், ஷாம்லால் நானவ்விதமே பத்திரம் எழுதித் தருகிறேன்.

ஷா. ஆனால் உடனே புறப்பட்டு, கணக்கனிடம் வந்து சந்தியும் என்னை; இந்தப் பரிஹாசப் பத்திரத்தை எழுதிவைக்கும்படி கட்டளை யிடும். நான் நேராகப் போய்ப் பணத்தைப் பைகளில் கட்டிக்கொண்டு, ஒரு செலவாளியான துஷ்டப் பையனிடம் ஒப்பித்த என்வீட்டைப் பார்த்துவிட்டு, உடனே உங்களிடம் வந்து சேர்கிறேன்.

அ. தயையுடைய மாறுபாடியே, போய்வா சீக்கிரம்.

[ஷாம்லால் போகிறான்.]

இந்த ஜைனன் சீக்கிரத்தில் ஹிந்து வாவான்; இவ்வளவு தயை பிறந்துவிட்டதே இவனிடம்.

பா. வாக்கில் நயமும் மனத்திற் கொடுமையும் எனக்குத் திர்ப் தியாயில்லை.

அ. வா,வா! இதி லொன்றும் பய மில்லை; என் கப்பல்கள் தவணைக்கு ஒரு மாதம் முன்பாக வந்து சேரும். [போகிறார்கள்.]

காட்சி முடிகிறது.

– தொடரும்…

– வாணீபுர வணிகன் (நாடகம்), நாடகப் பேராசிரியர் ப.சம்பந்த முதலியார், பி.ஏ.பி.எல். அவர்களால் இயற்றப்பட்டது, மூன்றாம் பதிப்பு: 1957.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *