மரம்படு சிறு தீ
கதையாசிரியர்: முல்லை பி.எல்.முத்தையா
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 4,052
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்
வேல் முனையால் நெற்றி வியர்வையைத் துடைத்து நின்று வெஞ்சினங் கூறினான் வேந்தன். பெண் கேட்க வந்தவன் அவன்.
மகட் கொடை மறுக்கும் தந்தையும் மறச் சொற்கள் கிளத்தினான்!
இது, போர் வரும் என்பதற்கு அறிகுறி! மன்னன் மகள் ஓடி வந்தாள்.
“அப்பா என்னால்தானே இவ்வளவு கேடு” என்றாள்
மன்னன், “பெண்ணே , பெரிய மரத்தில் பட்ட சிறு தீ, மரம் முழுவதையும் சுட்டெரிக்கும்! அதுபோல், இவ்வூரிற் பிறந்த சிறுமி நீ. உன்னைத் துணைகொண்டு போர்த் தீ புகைகின்றது. அது, ஊரையே சுட்டெரிக்கப் போகின்றது” என்றான்.
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்
தொடர்புள்ள சிறுகதைகள்
A for ஆப்பிள் – O for JOY
எஸ்.பவிஷ்
June 23, 2026
நல்ல மனம் வாழ்க!
வளர்கவி
June 20, 2026
கருங்கல்லும் கூழாங்கல்லும்!
வளர்கவி
June 17, 2026