மதம் கடந்த மனித நேயம்
கதையாசிரியர்: அல்போன்ஸ் மோசஸ்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: July 17, 2026
பார்வையிட்டோர்: 86

“அனைத்து மனிதர்களும் ஒரே குடும்பம்”
அது ஒரு குறுகிய பாதை. அந்த வழியாகத்தான் மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்வார்கள். அந்த வழியில் ஒரு சிறிய கடை நடத்தி வந்தாள் கறுப்பாயி. அவளது கணவன் குடியின் கோரப்பிடியில் சிக்கி இறந்து போனான்.
கறுப்பாயிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதுவும் பிறந்த சில மாதங்களிலேயே ஜன்னி வந்து இறந்து போனது. கவலை தீரவும் வாழ்வாதாரத்திற்கும் அந்தக் கடையின் முதலாளியானாள் கறுப்பாயி. பிள்ளையில்லாத குறையை பள்ளிக்கு வரும் பிள்ளைகளின் முகம் பார்த்து ஆறுதல் அடைவாள். கருப்பாயிக்கு கன்னத்தில் ஒரு சிறிய மச்சம் சின்ன வயதிலிருந்தே இருந்து வந்தது.
சலீம் சிறிய பையன். அப்பா ஒரு கடை நடத்தி வந்தார். அம்மா வீட்டிலேயே ஊது வத்தி சுறுட்டும் வேலை செய்து முதலாளியிடம் கொடுத்து மாதம் ஏதோ வருமானத்திற்கு வழி தேடிக் கொண்டாள். சலீம் தினமும் அந்தக் கடை வழியாகத்தான் பள்ளிக்குச் செல்வான். ரொம்ப துடுக்கானவன்;. அந்தக் கடை பக்கமாகப் போகும் போதும் வரும் போதும் கறுப்பாயியைப் பார்த்து கலாய்ப்பதே அவனுக்கு வாடிக்கை. அவனுடன் கொஞ்சுவதே கறுப்பாயிக்கும் வேடிக்கை.
சலீம் எப்போதும் கறுப்பாயியின் கன்னத்தில் இருக்கும் மச்சத்தை ஆசையாகத் தடவி விட்டுத்தான் அங்கிருந்தே நகர்வான். கறுப்பாயி அவனுக்கு அவ்வப்போது கடையிலிருந்து மிட்டாய் சாக்லெட் பிஸ்கட் முறுக்கு பழங்கள் என்று ஏதாவது ஒன்றை இலவசமாகக் கொடுத்து சாப்பிடு சலீம் என்று கூறி அவன் சாப்பிடுவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பாள். நாட்கள் பல கடந்தன. பல ஆண்டுகளும் கடந்து போயின. கறுப்பாயி வயது முதிர்ந்த போதிலும் அந்த கடையைத் தொடர்ந்து நடத்தி வந்தாள். கண் பார்வை சிறிறு சிறிதாகக் குறைய ஆரம்பித்தது.
ஒரு நாள் மாலை. மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. கடை பொருட்களை வாரி மூட்டைக் கட்டி தலையில் வைத்துக் கொண்டு அங்கிருந்து மெதுவாக வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் கறுப்பாயி. மழை பெய்ததால் மழைத் தண்ணீர் தேங்கி, சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டது. கண் பார்வை மங்கியதால் நடக்கும்போது கால் தடுமாறி சாலை ஓரத்தில் விழுந்து விட்டாள் கறுப்பாயி. தலையில் அடிபட்டு இரத்தம் லேசாகக் கசிய ஆரம்பித்தது.
அப்போது அந்த வழியாக ஆட்டோ ஓட்டி வந்த ஜான் உடனே வண்டியை நிறுத்தி கறுப்பாயியை தூக்கி ஆட்டோவில் ஏற்றி பக்கத்திலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அவரைப் பார்த்த கம்பவுண்டர் ஐயா அம்மாவிற்று தலையில் அடிபட்டு இருக்கின்றது. முதலில் முன்பணமாக ரூபாய் ஐந்து ஆயிரம் கட்டுங்க என்று கூறும்போதே அந்த மருத்துவமனையின் பெரிய மருத்துவர் அருகில் வந்தார்.
மருத்துவர் அந்த அம்மாவைப் பார்த்தார். அவளின் கன்னத்தில் இருந்த கறுப்பு மச்சம் அவள் கறுப்பாயி என்பதை தௌ;ளத் தெளிவாகக். காட்டிக் கொடுத்தது. உடனே மருத்துவமனை உள்ளே அனுமதித்து உயர்தர சிகிச்சை கொடுக்க ஆரம்பித்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு கண் திறந்த கறுப்பாயி கை எடுத்து மருத்துவரைக் கும்பிட்டாள்.
ஐயா சாமி என்னிடம் காசில்லை. பணமில்லை. நான் ரொம்ப ஏழை. மருத்துவச் செலவை என்னால் கட்ட முடியாது. நான் என்ன செய்வேன் என்று புலம்ப ஆரம்பித்தாள். அதைக் கேட்ட மருத்துவர் அதைப்பற்றிக் கவலைப்படாதேம்மா. அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.
அது சரி என்னைத் தெரிகிறதா? நான் தான் உங்க சலீம். அடிக்கடி சலீம்பாய் சலீம்பாய் என்றுச் செல்லமான அழைப்பீர்களே அந்தச் சலீம்பாய் நான்தான். இப்ப நான்தான் இந்த மருத்துவமனையின் பெரிய மருத்துவர். நான் சிறுவனாக இருக்கும்போது நீங்க கொடுத்த திண்பண்டங்களை என்னால் இன்றளவும் மறக்க இயலாது.
நான் பசியா இருக்கும்போது அதுதான் அடிக்கடி என் பசியை போக்கியது. நான் தாகமாய் இருந்தபோது மண் பானையிலயிருந்து நீங்க மொண்டு கொடுத்த தண்ணீர்தான் என் தாகத்தைத் தீர்த்து களைப்பைப் போக்கியது. அப்ப நீங்க கொடுத்த அன்பு கலந்த மனிதாபிதான விதைதான் இன்று பெரிய ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது.
பிறருக்கு உதவ வேண்டும் என்பதை உங்களிடமிருந்துதான் நான் கற்றுக் கொண்டேன். அதனால்தான் நானும் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு என்னால் இயன்ற சிறு சிறு உதவிகளை அவ்வப்போது செய்து வருகின்றேன் என்று கூறிய சலீம், அம்மா எனக்கு நீங்க ஒரு அனுமதி தர வேண்டும் என்றார்.
அதைப் கேட்ட கறுப்பாயி ஆச்சரியத்துடன் சலீமை உற்று நோக்கி என்ன சாமி என்னிடம் என்ன அனுமதி வேண்டும் சொல்லு சாமி என்றாள் ஆச்சரியமாக. ஒன்னுமில்லையம்மா. நான் சின்ன பையனா இருந்தப்போ உங்க கன்னத்திலிருக்கும் மச்சத்தை தொட்டு விளையாடுவேன் ஞாபகமிருக்காம்மா. இப்போது அந்த ஞாபகம் வந்து விட்டது. இப்ப உங்க கன்னத்திலிருக்கும் அந்த மச்சத்தை ஒரு முறை தொட்டுப் பார்க்கட்டுமா என்றார் மருத்துவர் சலீம். ஓ.. இன்னும் சிறு வயது குறும்பு உன்னிடமிருந்து போகல போல என்றாள் கறுப்பாயி சிரித்துக் கொண்டே.
குர்ஆன் மனித நேயத்தை மத எல்லைகளைத் தாண்டி வலியுறுத்துகின்றது. முக்கியமாக ஒரு உயிரைக் காப்பது மனித குலத்தைக் காப்பதற்குச் சமம். “ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றுபவன் எல்லா மனிதர்களின் உயிரையும் காப்பாற்றியவன் போன்றவன்” என்பதை குர்அன் 5: 32ல் காணலாம். மேலும் பெற்றோர் உறவினர் ஏழைகள் அண்டை வீட்டார் அனைவரிடமும் நன்மை செய்ய வேண்டும் என்பதை “மனிதர்களிடம் அன்பு உதவி கருணை காட்ட வேண்டும் என்று போதிக்கின்றது.” குர்ஆன்: 4: 36 குர்ஆன் ஏழைகள் பசித்தோர் தாகமுற்றோர் ஆதரவற்றோர் ஆகியோருக்கு உதவுவது இறைபக்தியின் ஒரு முக்கிய அடையாளம் என்றுன் கூறுகின்றது.
“மதத்தில் வற்புறுத்துதல் இல்லை” என்று குர்ஆன் 2:256ல் கூறப்பட்டுள்ளது. எனவே குர்ஆன் சொல்வதைப்போல மனித உயிரின் புனிதத்தையும் நீதி கருணை சமத்துவம் ஏழைகளுக்கான உதவி பிறரை மதிப்பும் பண்பையும் வலியுறுத்துகின்றது என்பதை நாம் கட்டாயம் உணர வேண்டும். இதுதான் மதம் கடந்த மனித நேயம். எனவே மத எல்லைகளைத் தாண்டிய மனித நேயத்தின் அடிப்படை மதிப்புகளை எப்போதும் மதித்து சிறந்த மனிதாபிமானத்தோடு நீடு வாழ்வோம்.
| நான் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அல்போன்ஸ் மோசஸ். பல்வேறு உற்பத்தி பிரிவுகளில் மனிதவளத் துறையில் மேலாளராகப் பணியாற்றினேன். கடந்த 3 ஆண்டுகளாக வாரந்தோறும் சிறுகதைகள் எழுதி, புதுச்சேரியிலிருந்து வரும் வார இதழில் வெளியிட்டு வருகிறேன். முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சென்னை மற்றும் மைலாப்பூர் பேராயரிடமிருந்து எழுத்தாளர் விருதைப் பெற்றுள்ளேன். ஆரோவில் ஐடிஐயில் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளேன். தேரி உயர்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
விவசாயி
இளையவேணி கிருஷ்ணா
July 17, 2026
அகல் விளக்கு
மு.வரதராசன்
July 17, 2026
காடு
மருதம் கேதீஸ்
July 14, 2026