பெருஞ்செலவு செய்த பெரியண்ணள்
கதையாசிரியர்: க.இனியன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்: 4
(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வரகூர் என்றும் ஊரிலே பெரியண்ணன் என்னும் பெயருடையவன் ஒருவன் இருந்தான். பெரியண்ணன் வீண்செலவு செய்வதில் வல்லவன். ஒரு ரூபா கிடைத் தால் இரண்டு ரூபா செலவு செய்வான். இரண் டு ரூபா கிடைத்தால் நான்கு ரூபா செலவு செய்வான். இவ்வாறே அவனுடைய செலவு வரவுக்கு மேல் ஒரு பங்கு மிகுதியாக இருக்கும்.
“வரவுக்குமேல் செலவு செய்தல் கூடாது. அவ் வாறு செய்தால் பலவகையான தொல்லைகள் உண் டாகும்,” என்று பலர் பெரியண்ணனுக்கு அறிவுரை கூறினார்கள். அவன் அவ்வுரைகளை யெல்லாம் காதிற் போட்டுக்கொள்ளவில்லை. யாரேனும் கடன் கொடுப் பவர்கள் இருந்தால் அவர்களிடமெல்லாம் கடன் வாங்கிச் செலவு செய்வான். பிறகு கடன் கொடுத்த வர்கள் கடனைத் தரச்சொல்லி நெருக்கி வருத்துவார்கள். கொடுத்தவர்கட்குத் திருப்பிக்கொடுக்க வகை. யில்லாமல் விழிப்பான். அவர்கள் இவனுடைய பெரு மைக்குச் சிறுமை வருமாறு நடந்து கொள்வார்கள். பெரியண்ணன் எல்லாவற்றையும் பட்டுக் கொள்வான்.
நாளடைவில் வரகூர் சரிப்பட்டு வரவில்லை. வேறு ஊர்கட்குச் சென்றான். அவ்விடத்திலும் ஒத்துக் கொள்ளாமல் ஊர் ஊராகச் சுற்றித் திரிந்தான். அவ னுடைய மனைவி மக்களும் அவனை மிகவும் வெறுத் தார்கள். பெரியண்ணன் பல வகையான தொல்லைகளை அடைந்து வருந்தியபின் மாண்டு தொலைந்தான். அவன் இவ்வாறு வீண்செலவு செய்து அழிந்தொழிந்தானே என்று பலரும் வருந்தினார்கள்.
“ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப்-போனதிசை
எல்லார்க்கும் கள்ளனுய் ஏழ்பிறப்புந் தீயனுய்
நல்லார்க்கும் பொல்லானும் நாடு.”
(உரை ) ஆன முதலில் அதிகம் செலவு ஆனால் – தனக்குக் கிடைத்த முதற் பொருளுக்குச் செலவு அதிகமானவன், மானம் அழிந்து – மானங் கெட்டு, மதிகெட்டு – அறிவு இழந்து போன திசை எல்லார்க்கும் கள்ளன் ஆய் – தான் ஓடிப்போன திக்கினும் எல்லோர்க்குங் கள்ளனைப்போல் ஆகி, ஏழ்பிறப்பும் தீயன் ஆய் – எழுவகைப் பிறப்புகளினும் கொடியவனாகி, நல்லாருக்கும் பொல்லனாம் – தன்னிடத்தில் அன்புவைத்த பெண் கட்கும் பொல்லாதவனாவான், காடு – இதனைத் தெரிந்து கொள்.
(கருத்து.) ஒவ்வொருவரும் தமது வருவாய்க்குத் தக்கவாறு செலவு செய்தல் வேண்டும். பெருஞ் செலவு செய்தால் பிறகு வருந்தி அழிய நேரிடும்.
– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
வாணிகஞ் செய்த வல்லாளன்
க.இனியன்
August 3, 2026
ஒளவையாரும் ஆராய்ச்சியாளர்களும்
க.இனியன்
August 3, 2026