நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…!
கதையாசிரியர்: வளர்கவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: May 19, 2026
பார்வையிட்டோர்: 8,166

அந்த ஹோட்டல் நிரம்பி வழிந்தது. இரவு ஒன்பது மணிதான். ஆனாலும் அடுத்த நாள் கிருஸ்துமஸ். முதல்நாள், ஒருநாள் வீட்டுக்கு வெளியில் குடும்பமாய்ச் சேர்ந்து சாப்பிடும் ஆசையில் குவிந்திருக்கக் கூடும்.
இடம் பிடிப்பது சிம்ம சொப்பனமாய் இருந்தது. குடும்பத்தோடு போயிருந்த குப்புசாமி, இடம் தேடி ஒரு ஆறுபேர் அமரும் வரிசையில் இடம் பிடித்தான். இருந்தும் ஒரு சின்னப் பிரச்சனை. உடன் கூட்டிப் போயிருந்த அந்த மூன்று வயதுக் குழந்தைக்கு டேபிள் எட்டவில்லை. அது, அடம் பிடித்து அழத் தொடங்கியது.
சூப்ரவைசர் சூப்ரனான ஆள் என்பதைத் தன் ஒவ்வொரு செயலிலும் தன் பெருந்தன்மையை உணர்த்தி எல்லார் மனதில் இடம்பிடித்தார்.
‘என்ன வேணும் ? ஏன் பாப்பா அழறீங்க?!’ என்றார் அன்பாக.
‘ஹைசேர் வேணுமாம்..!’
அந்த ஹோட்டலில் ஹைசேர் உடைந்து போயிருந்ததால், உடைந்ததைக் கொடுக்க அவருக்கு மனம் வரவில்லை., அதற்கு இரண்டு காரணம் இருக்கலாம். ஒன்று உடைந்ததை குழந்தைக்குக் கொடுத்தால், ஒரே கணத்தில் ஹோட்டலின் மரியாதை கெட்டுப் போய்விடும் என்ற நினைப்பாயிருக்கலாம்., இன்னொன்று குழந்தை அதில் அமர்ந்து விழுந்து கிழுந்து வைத்துவிடக் கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வாகவும் இருக்கலாம்.
உடனே, அவர் குழந்தையிடம் ஸ்வீட் சாப்பிடறீங்களா? என்றார்.
ஓசியில் குடுத்தால், சிலர் அதை மரியாதை நிமித்தமாக மறுக்கக் கூடும் என்றா நினைப்பில், ஸ்வீட் கலந்த பெருஞ்ச்சீரகம் சோப்புவில் சிலவற்றைக் கொடுத்துச் சமாதானம் செய்தார்.
அடுத்து எல்லாருக்கும் என்ன வேணுமெனக் கேட்டுக் கேட்டு பரிமாற குடும்பம் அவர் குணத்தால் சிலிர்த்துப் போனது. பில்லுடன் சேர்த்து ஐம்பது டிப்ஸ் வைக்கையில்தான் அவர் தன் பெருந்தன்மையின் சிகரத்தில் உயர்ந்தார். அவர் அப்படி என்ன செய்தார்?
தான் ஆர்டர் எடுக்க அதையெல்லாம் கஸ்டமர்ஸுக்கு சப்ளை செய்த அந்த சர்வரை அழைத்து அந்த ஐம்பது ரூபாயையும் அப்படியே அவனிடம் கொடுக்கையில், அவர் குணத்தில் குன்றில் நின்றார்.
பணம் பத்தும் செய்யும்..! பணப்பற்றை அவர் தவிர்த்து, அதை தன் கீழே வேலை பார்ப்பவர்க்குக் கொடுக்கும் போதுதான் குப்புசாமிக்கு’சே! சர்வ் செய்தவனை விடுத்து சூப்ரவைசருக்குக் கொடுத்தோமே? நம்மையவர் தன் செய்கையால் தலைகுனிய வைத்துவிட்டாரே! நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நினைத்துப் பார்க்காத ஒன்றைத்தானே தெய்வம் நிறைவேற்றுகிறது?!’ என்று நினைத்தான் குப்புசாமி.
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
The 361st Degree
வேங்கடேஷ் புருஷோத்தம்
August 19, 2026
நலம் தரும் நட்பு
அல்போன்ஸ் மோசஸ்
August 19, 2026
எமன் அக்காள் கழுதை
நாகரத்தினம் கிருஷ்ணா
August 19, 2026
