நாடென்ன செய்தது நமக்கு?
கதையாசிரியர்: வளர்கவி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 15, 2026
பார்வையிட்டோர்: 101
‘நாடென்ன செய்தது நமக்கு? என்ற கேள்விகள் கேட்பது எதற்கு?’
(தேச பக்தி – கதைப்பாடல்)

அந்த நாட்டில் காலையில்
அதிவிரைவுச் சாலையில்
உந்து வண்டி ஒன்றது
ஓடிக் கொண்டு இருந்தது.
வண்டி கடைசி இருக்கையில்
வயது மூத்த ஒருத்தியாம்
நொண்டிக் காலும் கொண்டவள்
நூறு வயது இருக்கலாம்..!
கையில் தையல் ஊசியாம்
கண்ணில் வெள்ளெ ழுத்துநோய்
இருந்தும் இருக்கை ஒரத்து
இருந்த கிழிசல் தைத்திட
அருகி ருந்த இளைஞனோ
அந்தப் பெண்ணைப் பார்த்துநீர்
“இருக்கும் இருக்கைக் கிழிசை
எதற்கு நீரும் தைக்கிறீர்?
வண்டி அரசு வண்டியே!
வருத்தப் பட்டுநீ நோவதேன்?
ஆண்டு கொண்டிருப்பவர்
அதனைச் சீர் செய்குவர்!”
என்று சொல்லிச் சிரிக்கையில்
எள்ளி நகைத்துக் களிக்கையில்
‘இருக்கும் இருக்கை மட்டுமன்றுநான்
இருக்கும் நாடும் என்னது!’
பிறந்து வாழ எனக்கிது
பெரிய உதவி செய்தது!
வாழும் எந்தன் நாட்டையே
வாட விடுதல் நியாயமோ?
ஆளும் அரசை செய்யவிட்டு
ஆளப்படுவோர் களிப்பதோ?
நாடென்ன செய்தது நமக்கென
நாட்டைக் கேட்பது பிணக்கு!
நீ என்ன செய்தாய் அதற்கு?
நினைத்தால் நன்மை உனக்கு!
தேச பக்தி என்பது
தேவை நாடல் அல்ல!
சேவை செய்தலென, இருக்கைத
சீர்மை செய்தாள் முதியவள்!
இளைஞன் மனது மாறினான்
எள்ளல் குணத்தைத் தள்ளினான்
கிழவி தேச பக்திக்கு
கிரீடம் சூட்டி வாழ்த்தினான்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நாய் வால்
நீர்வை பொன்னையன்
September 15, 2026
அந்த இலக்கியவாதியும் நடுநிசி மனிதர்களும்
இளையவேணி கிருஷ்ணா
September 15, 2026
கொட்டு மேளம்
தி.ஜானகிராமன்
September 12, 2026
