நன்றி மறவேல்
கதையாசிரியர்: சுந்தர சண்முகனார்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 18, 2026
பார்வையிட்டோர்: 7
(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நன்றி – பிறர் செய்த நன்மை, மறவேல் – நீ மறக்காதே.
ஒரு கிராமத்தில் ஆனை என்று ஒரு குடியானவன் இருந்தான். அவன் மிகவும் ஏழை. ஒருநாள் திருவிழா பார்ப்பதற்காக வெளியூருக்குச் சென்றான். அவன் நாயும் அவனுடன் சென்றது. வெளியூரில் ஒரு தனவந்தர் இருந்தார். அவர் ஆனையின் பசியைக் கண்டு அவனுக்குச் சோறு போட்டார். அவன் நாயும் சாப்பிட்டது.
ஒருநாள் தனவந்தர் வியாபாரத்திற்காகக் குடியானவன் இருக்கும் ஊர்ப்பக்கம் வந்தார். வழியில் திருடர்கள் தனவந்தரின் கைப்பணத்தைப் பறித்துக் கொண்டார்கள். வேறு வழியில்லாமையால், அவர் குடியானவனது வீட்டை விசாரித்துக்கொண்டு சென்றார். அவர் முன்பு சோறு போட்ட நன்றியை ஆனை மறந்துவிட்டான். அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
ஆனால், ஆனையின் நாய் தனவந்தரைத் தெரிந்து கொண்டது. அவர் சோறுபோட்ட நன்றியை அது மறக்க வில்லை. அவர் முன்னெ சென்று வாலை ஆட்டியது. உடம்பைக் குழைத்தது. மகிழ்ச்சி தாங்கமுடியாமல் துள்ளிக் குதித்தது.
நாயின் நன்றியை ஆனை கண்டான், ஆகா! நம் நாய்க்கு இருக்கும் நன்றிகூட நமக்கு இல்லையே என்று வெட்கப்பட்டான். உடனே தனவந்தரை நன்றாக உபசரித்தான். பின்பு தனவந்தர், ஆனையைத் தம்மூர்க்கு அழைத்துச் சென்று ஆதரித்து வந்தார். (ஆகையால்)
பிறர் செய்த நன்றியை மறக்கவே கூடாது.
எழுதியவர்: மயிலம் தமிழ்க்கல்லூரியில் விரிவுரையாளரா யிருந்த வித்துவான் சுந்தர சண்முகனார்.
– ஆத்திசூடி அமிழ்தம், குழந்தைக் கதை மலர், முதல் பதிப்பு: 30-8-1948, பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி.
![]() |
பேராசிரியர் சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922 – அக்டோபர் 30, 1997) புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த ஒரு மிகச்சிறந்த தமிழ்த்தேசிய அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழில் முறையியல் (Methodology) அடிப்படையில் புதிய ஆய்வுத் துறைகளை உருவாக்கிய முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். “சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழ்நாட்டுத் தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்.”, என தமிழ்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அறம் செய விரும்பு
சுந்தர சண்முகனார்
July 18, 2026
ஆறுவது சினம்
சுந்தர சண்முகனார்
July 18, 2026
ஈவது விலக்கேல்
சுந்தர சண்முகனார்
July 18, 2026
