தன் வினை தன்னைச் சுடும்
கதையாசிரியர்: கே.என்.சுவாமிநாதன்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: May 10, 2026
பார்வையிட்டோர்: 132
(2024ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கார்த்திக் ஒரு வீட்டுத் தரகர். நகரின் ஒதுக்குப் புறத்தில் சொந்த வீடு வைத்திருக்கும் சிவராமன், கார்த்திக்கிடம் வீடு குடியிருக்க நல்ல குடும்பம் ஒன்றைக் கண்டுபிடித்துச் தரச் சொன்னார். தரகர் கமிஷன் ஒரு மாத வாடகையான ரூபாய் 10000 கொடுப்பதாகவும் உறுதியளித்தார். சொன்னபடியே, கார்த்திக், நமசிவாயம் என்பவரைக் கூட்டி வந்தான். மனைவியுடன் வீட்டைப்பார்த்தவருக்கு, வீடு பிடித்துப் போய், குடி வருவதற்கு முடிவு செய்தார். பேசிய தரகர் கமிஷன் தருவதற்கு சிவராமனுக்கு மனமில்லை. சாமர்த்தியமாகப் பேசி, கமிஷன் குறைத்துக் கொடுக்க முடிவு செய்தார்.
நமசிவாயத்தையும் தன்னுடைய பக்கம் இழுத்துக் கொண்டார். நமசிவாயத்தின் முன்னிலையில கார்த்திக்கிடம், “கார்த்திக், நமசிவாயம் என்னுடைய பால்ய நண்பர். எனக்குத் தெரிந்தவரைக் கூட்டி வந்த உனக்கு நான் எப்படி முழு கமிஷன் கொடுக்க முடியும். ஆகவே, உனக்கு ரூபாய் 2000 தருகிறேன்” என்று சொல்லிப் பணத்தைக் கொடுத்தார்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட கார்த்திக், சிவராமன் பொய் சொல்லி கமிஷனைக் குறைக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டான். வீட்டுத் தரகருக்கு கமிஷன் சரியாகக் கொடுக்காமல் ஏமாற்றுவது எப்போதும் நடைபெறுகின்ற நிகழ்வு. சிவராமனுக்குப் பாடம் கற்பிக்க முடிவு செய்தான் கார்த்திக்.
அவரிடம் சொன்னான். “முதலாளி, நமசிவாயம் உங்க நண்பர் அப்படின்னு சொன்னீங்க. வீட்டைக் காட்டும் போது ‘அந்த விஷயம்’ சொல்ல வேண்டாம் அப்படின்னு சொன்னீங்களே. வீட்டிற்கு குடித்தனம் வரப் போகிற உங்க நண்பர்கிட்ட, ‘அந்த விஷயம்’ சொல்லிட்டீங்களா?” என்று கேட்டான்.
“அது என்னப்பா ‘அந்த விஷயம்” என்று படபடத்தார், நமசிவாயம்.
“ஒன்னும் பெரிய விஷயம் இல்லீங்க. இந்த வீட்டில முன்னே குடியிருந்தவர் ஒருத்தர் தற்கொலை பண்ணிக்கிட்டார். அவருடைய ஆவி வீட்டில் உலாவுறதாகச் சொல்லி, இதுக்கு முன்னாலே இருந்தவங்க காலி பண்ணிக்கிட்டுப் போனாங்க” என்றான் கார்த்திக்.
“அப்படியெல்லாம், ஒன்னும் நடக்கலீங்க. கமிஷன் குறைச்சதாலே, கார்த்திக் பொய் சொல்றான். நீங்க ஊருக்குள்ள யாரை வேணுமானாலும் கேட்டுப் பாருங்க” என்றார் சிவராமன்.
“தரகருக்குப் பேசிய கமிஷன் கொடுக்காம ஏமாற்ற, என்னை உன்னுடைய பால்ய நண்பன் அப்படின்னு பொய் சொன்ன நீ ஊரிலே மற்றவங்களுக்குப் பணம் கொடுத்து விஷயத்தை மூடி மறைச்சிருப்பே. உன்னோட வீட்டிற்கு நான் குடி வரலே” என்று சொல்லிச் சென்றார் சிவராமன்.
.
– 2024, தமிழ்நாடு இ-பேப்பர்.காம்.
![]() |
பொறியியல் பயின்று, அரசுத் துறை, பொதுத் துறை, தனியார் குழுமங்களில் பணி புரிந்து, பின்பு, 15 ஆண்டுகளாக கணிதமும், தர்க்கமும் கற்பித்து வந்தேன். “யு-டியூப் – ஸ்வாமிமேடிக்ஸ்” என்ற சேனலில், சுலப கணிதம் குறித்து ஆங்கிலத்தில் விளக்கி வந்தேன். கோவிட் ஊரடங்கு என்னை கதை, கட்டுரை, எழுத ஊக்கம் அளித்தது. கதைகள், கட்டுரைகள் வெளியான இதழ்கள் - தினமலர்-வாரமலர், கலைமகள், அமுதசுரபி, தினமணி, சிறுவர்மணி, கதிர், நம் உரத்த சிந்தனை,…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
மருத்துவத்தின் இரு கோடுகள்
மனோகர் மைசூரு
May 10, 2026
போலி விமர்சனம்
கோமதி ஸ்வாமிநாதன்
May 10, 2026
அச்சம் என்பது மடமையடா!
வளர்கவி
May 7, 2026
