கொள்ளை விரும்பேல்
கதையாசிரியர்: சுந்தர சண்முகனார்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 19, 2026
பார்வையிட்டோர்: 50
(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு காட்டில் ஒரு கொள்ளைக்காரன் இருந்தான். அவன் இரவில் தன் கொள்ளைக் கூட்டத்தாருடன் ஊருக்குள் புகுவான். கொள்ளை யடிப்பான். சிவ சமயங்களில் காட்டில் ஒளிந்து கொண்டிருப்பான். அவ்வழியாக வழிப் போக்கர்கள் வந்தால் அவர்களை மறித்துக் கொள்ளை யடிப்பான்.
அவன் கொள்ளை யடிக்கப் போகின்ற இடங்களில் பல துன்பங்கள் உண்டாவதும் உண்டு. கல் பொக்கும். முள் தைக்கும். பாம்பு கடிக்கும். தேள் கொட்டும். அடி அகப்படும். உதை கிடைக்கும். அவன் அவற்றைப் பொருப்படுத்துவ தில்லை.
ஒருநாள் இரவு காட்டு வழியில் மறைந்து கொண்டிருந்தான். அப்போது அவ்வழியே ஒரு வியாபாரி ஏராளமான சாமான்களை ஏற்றிக்கொண்டு ஓர் இரட்டைமாட்டு வண்டியில் வந்தார். வண்டியைக் கண்டதும் கொள்ளைக்காரனுக்கு மகிழ்ச்சி உண்டாகிவிட்டது. ‘நிறுத்து வண்டியை’ என்றான். அவர், கொள்ளைக்காரன் என்பதைத் தெரிந்துகொண்டு நிறுத்தாமல் ஓட்டினார். அவன் மாடுகளின் முன் சென்று நின்று மறித்தான். அம்மாடுகளுள் ஒரு முரட்டு மாடு, தன் கொம்புகளால் கொள்ளைக்காரன் வயிற்றைக் குத்திக் கிழித்தது. அவன் “ஐயோ” என்று அலறிக் கீழே விழுந்து இறந்தான். (ஆகையால்)
பிறர் பொருளைக் கொள்ளைபடிக்கக் கூடாது.
– ஆத்திசூடி அமிழ்தம், குழந்தைக் கதை மலர், முதல் பதிப்பு: 30-8-1948, பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி.
![]() |
பேராசிரியர் சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922 – அக்டோபர் 30, 1997) புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த ஒரு மிகச்சிறந்த தமிழ்த்தேசிய அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழில் முறையியல் (Methodology) அடிப்படையில் புதிய ஆய்வுத் துறைகளை உருவாக்கிய முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். “சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழ்நாட்டுத் தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்.”, என தமிழ்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கேள்வி முயல்
சுந்தர சண்முகனார்
July 19, 2026
கைவினை கரவேல்
சுந்தர சண்முகனார்
July 19, 2026
கூடிப் பிரியேல்
சுந்தர சண்முகனார்
July 19, 2026
