கஸ்டமர் – ஒரு பக்க கதை
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 9,042
கசமுத்து பலசரக்கு கடையில் நான் நின்றிருந்தேன். ஒவ்வொருவராக வந்து பலசரக்கு சாமான்கள் வாங்கி சென்ற வண்ணம் இருந்தனர்.
ஒருவர் கருப்புகட்டி ஒரு கிலோ என்று கேட்க, ஏய் தம்பி சாருக்கு உடன்குடி கருப்புகட்டியை போட்டுக்கொடு என்றார் கசமுத்து.
இன்னொரு பெண், அரை கிலோ துவரம்பருப்பு என்று கேட்க, அம்மாவுக்கு அந்த நயம் பருப்பை நிறுத்துக்கொடு என்றார்.
எனக்கு தெரியும் இவரிடம் இருப்பது ஒரே கருப்பு கட்டி. ஒரே துவரம்பருப்பு தான் என்று.
இது பற்றி கடை முதலாளி கசமுத்துவிடம் கேட்க இப்படி சொன்னால் தான் கஸ்டமர்கள் நமக்கு நல்ல பொருளை பார்த்து தார்றார்னு நினைப்பாங்க. ந;ம்ம கஸ்டம்ர்கள் வேற கடைக்கு போகாம நம்ம கடைக்கே வருவாங்க.
இது வியாபார டெக்னிக் தம்பி என்றார் கசமுத்து.
அப்படிப்போடு சபாஷ் என்றேன் நான்.
– எஸ்.முகம்மது யூசூப் (ஜூன் 2013)
தொடர்புள்ள சிறுகதைகள்
‘ள்’ என்பதனால்
திசேரா
July 23, 2026
தாய் உள்ளம்
எஸ்.மதுரகவி
July 23, 2026
அகல் விளக்கு
மு.வரதராசன்
July 23, 2026