கற்றல் நன்றே!
கதையாசிரியர்: முல்லை பி.எல்.முத்தையா
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 4,584
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்
ஆசிரியனுக்கு ஏற்படும் துன்பத்தைத் துடைக்க வேண்டும். வேண்டும் பொருளை விரைந்து கொடுக்க வேண்டும். அடங்கிக் கல்வி கற்றல் நல்லது. ஏன்? தாய் தன் வயிற்றிற் பிறந்த மக்களுள் கற்ற மகனையே விரும்புவாள் !
ஒரு குடியிற் பிறந்தவர்களுள், மூத்தவன் வருக என்று அழைக்காமல், கல்வி கற்றவன் வருக என்றே அவையினர் அழைப்பர் அறிவுடையோன் சென்ற வழியே அரசனும் செல்வான்.
நால்வகை சாதியாரில் மேல் சாதிக்காரர், கற்றிலராயின் தாழ்ந்தவராகி கெடுவர்! கீழ்ப்பட்ட ஒருவன் கல்விகற்றிருப்பின், அவனை மேல் சாதிக்காரனும் வணங்குவான்.
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்
தொடர்புள்ள சிறுகதைகள்
A for ஆப்பிள் – O for JOY
எஸ்.பவிஷ்
June 23, 2026
நல்ல மனம் வாழ்க!
வளர்கவி
June 20, 2026
கருங்கல்லும் கூழாங்கல்லும்!
வளர்கவி
June 17, 2026