ஊர் காக்கும் ஐயனார்
கதையாசிரியர்: வீ.அய்யனார்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: August 9, 2026
பார்வையிட்டோர்: 4
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல ரெண்டு களவாணிக இருந்தாங்க. களவாண்டே பொளச்சு வந்தாங்க. ஒருத்த மொரடன், இன்னொருத்தன் அப்பாவி. களவாண்ட போரண்ணைக் கெல்லாம், ஐயனாரு சாமிய கும்புடாமப் போறதில்ல. ஐயனாரு, அவங்களுக்குத் தொண செஞ்சுக்கிட்டு வந்தாரு.
இப்டி இருக்கயில, ஒருநா ராத்திரி, களவாண்டப் போனாங்க. போரப்ப, ஐயனாரு கோயிலுக்கு போயி, ‘ஐயனாரப்பனே”.இண்ணக்கி நெறயக் கெடைக்கணும், எங்கள ஆரும் பாத்திரக் கூடாது. அப்டி காத்துக்கிட்டயினா! இண்ணிக்கி கெடைக்கிறதில் பாதிய, உனக்கு படைக்றோம்ண்டு வேண்டிக்கிட்டாங்க.
சொல்லி வச்சது போல, ரெண்டு பேரும் ஊருக்குள்ள போனாங்க. போயி, ஒரு வீட்டுகிட்ட நிண்டாங்க. வீட்டு வாசல்ல படுத்துக் கெடந்த நாய்க, இவங்களப் பாத்துக் கொலச்சுச்சு. நாயி கொலைக்கிற சத்தம் பலமா இருந்துச்சு. என்னா! நாயி இப்டிக் கொலைக்குதுண்டு பாக்க வந்த பக்கத்து வீட்டுக்கார், இவங்களப் பாத்திட்டு, களவாணி! களவாணிண்டு சத்தத்தப் போட்டுட்டா.
ஊரு ஆளுகளெல்லாம் எந்திருச்சுக்கிட்டாங்க. இந்த நெலம களவாணிகளுக்கு பயத்தத் தந்திருச்சு. ஓட ஆரம்பிச்சாங்க. கம்புங் – களிக்கவயும் தூக்கிக்கிட்டு வெரட்டிட்டாங்க.
தப்பிச்சே – பொளச்சேண்டு ஐயனாரு கோயில நோக்கி ஓடியாந்தாங்க. சாமிக்கு. காதுல கொழுப்பு ஏறிப்போச்சுடா. அதுனாலதா நம்ம சொன்னது கேக்கல. அது மண்டய ஒடச்சாத்தாண்டா, கொழுப்புக் கொறையும், நிய்யி ஒரு கல்ல எடுத்துக்க, நானும் ஒரு கல்லு எடுத்துக்கிறே, ரெண்டு பேரும் சேந்து எறியணும்டாண்டு சொல்லிக்கிட்டு, மொரடன் முன்னால வாரர்.
அப்பாவியான களவாணி, சாமி மண்டயில கல்லக் கொண்டெறியப் பயந்துகிட்டு, அவ, சாமி மண்டயில எறியயில, நம்ம, கல்ல சங்கம் பொதைக்குள்ள எறிஞ்சிரணும்ண்டு நெனச்சுக்கிட்டுப் பின்னாலேயே வந்துகிட்டிருக்கர்.
அப்ப சாமி!! இந்தப் பயக வர்ர சீருக்கு, நம்ம மண்டய ஒடச்சுப்பிருவாங்க போல இருக்கு. போயி, இந்தச் சங்கம் பொதைக்குள்ள ஒளிஞ்சுகிருவோம்ண்டு, செலய விட்டெறங்கி, சங்கம் பொதைக்குள்ள போயி ஒளிஞ்சுகிருச்சு.
எங்களக் காப்பாத்தாம, குதுரமேல ஏறியா ஒக்காந்திருக்க. ஒன்னய, இப்பப் பாருண்டு சொல்லிக்கிட்டே, சாமி மேல கல்ல எறிஞ்சா. கல்லு படவும் செல ஒடஞ்சு போச்சு. சாமிய எறியப் பயந்த அப்பாவிக் களவாணி, பக்கத்துல இருந்த சங்கம் பொதையில எறிஞ்சா. அந்தக் கல்லு, சங்கம் பொதைக்குள்ள ஒளிஞ்சுகிட்டிருந்த, ஐயனாரு மண்டயில புடுச்சுக்கிருச்சு.
இந்தப் பயக விடமாட்டாங்க போலிக்கு. பூசாரிகிட்டப் போயிச் சொல்வோம்ண்ட்டு, எறிஞ்ச, அந்தக் கல்லயும் எடுத்துக்கிட்டு, பூசாரி வீட்டுக்கு ஓடுச்சு.
பூசாரிய எழுப்பி, பூசாரி!! பூசாரி!! ஆபத்து. என்னய வெரட்டிக்கிட்டு வருது. தடுத்து, அவங்ககிட்டச் சொல்லி வையி, இல்லோண்டா ஓங்கண்ண கெடுத்துப்பிருவேண்டு சொல்லிட்டு, பூசாரி வீட்டு கொல்லைக்குள்ள போயி ஒளிஞ்சுகிருச்சாம். ஒளிஞ்சுகிட்டு, அவனச் சொல்லி வக்கிறயா! ஓங்கண்ணச் கெடுக்கவாண்டு சத்தம் போட்டுச்சாம்.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நகைசுவைக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசா பல்கலைக் கழகம், மதுரை.
தொடர்புள்ள சிறுகதைகள்
லார்ட் பெட்லிங்டனும் அப்புசாமியும்
ஜ.ரா.சுந்தரேசன்
August 19, 2026
வக்கணை
வீ.அய்யனார்
August 9, 2026
பங்கு – பாகம்
வீ.அய்யனார்
August 9, 2026