கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 18, 2026
பார்வையிட்டோர்: 93 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

ஒரு நகர்ப்புற பகுதியில் பல மரங்கள் வளர்ந்து புதர்கள் போல் காட்சியளித்தன. அது மக்களுக்கு சற்று சிரமமாக இருந்தது.

மரங்களை அகற்ற முடிவு எடுக்கப்பட்டன. ஊரில் பல பேர் அதை ஏற்றுக் கொண்டனர்.

மரங்களை வெட்டுவதால் தவறில்லை, ஆனால் மழை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும், என கணிசமான பேர் முடிவுக்கு வந்தனர்.

மரம் வெட்ட நபர்களை தேவையான அழைப்பு விடுக்கப்பட்டது. பல நாட்கள் யாரும் முன் வரவில்லை. எந்த வேலையும் செய்யாமல் இருந்த ஒருவரையும், வேலை இல்லையென்றாலும் வேலை செய்ய ஆர்வம் கொண்ட மற்றோரையும் தேர்வு செய்தனர்.

அவர்கள் இருவரும் வேலையை செய்ய ஆரம்பித்தனர். அதற்கான கட்டளை சற்று விசித்திரமாக இருந்தது. எப்படியும் இந்த வேலை முடிவடைய பல நாட்கள் ஆகும் என்பதால், இருவரும் இருவேறு பகுதிகளில் இருந்து வேலையை ஆரம்பிக்க வேண்டும். அகற்றப்பட வேண்டிய மரங்கள் சரியாக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அது மட்டும் போதாது, முழுமையாகவும் மரக்கிளைகளை வெட்ட கூடாது, மேலும் வளரும் வண்ணம் வெட்ட வேண்டும். அதாவது ஆய்வு செய்து தேவையானதையும் , தேவையற்றதையும் பிரித்து முழுமையாக அல்லது பாதி மரத்தை தான் வெட்ட வேண்டும்.

இருவரின் வேலை நேரத்தையும் வேலை அளவையும் தனித்தனியாக அளவிட்டு வந்தனர்.

இருவரும் தீவிரமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அதில் ஒருவர் அதிகமாக நேரம் வேலை செய்யாமல், இடை இடையில் வெளியே சென்று விடுவர். கேட்டால் ஏதாவது காரணம் சொல்வார்.

மற்றொருவர் இடைவிடாமல் வேலை செய்து கொண்டே இருப்பார். என்ன காரணம் என்று கேட்டால் நன்றாக வேலை செய்ய பலம் இருப்பதாக சொல்வார். இவர் இடைவேளி எடுப்பது அவருக்கு தெரிந்தது. அதைப் பற்றி கவனிக்காமல் வேலையில் ஈடுபட்டு இருந்தார்.

நாட்கள் நகர மற்றொருவர் இடைவேளையுடன் வேலை செய்வதை கவனிக்க ஆரம்பித்தார். தான் ஒரு நாளைக்கு இடைவேளை விடாமல் செய்த வேலையை அவர் இடைவேளையுடன் முடித்து இருப்பதை கண்டு வியந்து. பின் அதை விசாரித்தார். 

மற்றொருவர் முதலில் பதில் அளிக்கவில்லை.

“நீங்கள்  இடைவேளை எடுத்தாலும் முடிப்பதற்கு காரணம் என்ன?” என்று விசாரித்தார்.

முதலில் பதில் அளிக்காமல் இருந்தாலும், மீண்டும் மீண்டும் கேட்ட பிறகு அவர் பதில் கூறியதாவது:

“கத்தியை கூர்மை படுத்துவதாகும். மூன்று நான்கு வெட்டில் வெட்டப்படுவதை ஒரே வெட்டில் வெட்டுவேன். வேலையும் சீக்கிரம் முடியும்; இடைவேளையும் எடுத்து உடலுக்கும் மனதிற்கும் ஓய்வு எடுக்க நேரம் இருக்கும். நீயும் முயற்சித்துப் பார். நாம் இடைவேளை எடுப்பதால் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *