உயர்ந்த இடத்தில் இருக்கும் போது…!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 1, 2026
பார்வையிட்டோர்: 103 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

அந்தக் குட்டிக் குழந்தைக்கு எப்படிப் புரிய வைப்பது என்றே தெரியவில்லை. அது ஒரு ரெண்டுங்கெட்டான் வயசு. வாழ்க்கைத் தத்துவத்தை வாழும் முறையை நெளிவு சுளிவுகளிலிருந்து தப்பிப் பிழைக்கும் முறையைக் கற்றுக் கொடுக்க இது ஏற்ற வயதா என்னன்னு தெரியலை. ஆனா, அதுக்காக கற்றுக் கொடுக்காமல் விட முடியுமா? அதுக்குப் புரியறா மாதிரி சொல்லிக் கொடுக்கணும். முடியு செய்தான்.

எதைச் சொன்னாலும் ஏன்? ஏன்? என்று கேட்பது கஷ்டமாக இருந்தாலும் உரிய காரணம் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

வாழ்க்கையில் சும்மா எல்லாரோடும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறது குழந்தை என்ன் செய்யலாம் என்று யோசித்தான்.

அனுசரித்துப் போக சொல்லிக் கொடுக்க வேண்டும். அனுசரித்துப் போவதால் உள்ள் ஆதாயத்தையும் விளக்கியாக வேண்டும்.

யோசித்துக் கொண்டிருந்த போது பளீரென உதயமாயிற்று அந்த எண்ணம்.

குழந்தையைக் கைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஹாலின் நடுப்பகுதிக்கு வந்தான். அது ஒரு இருபதுக்குப் பதினாறு பெரிய ஹால். நட்ட நடு ஹாலில் உயரத்தி வீற்றிருந்தது அது.நவீன டெக்னாலஜிபடி இயங்கும் அது தன் எண்ணத்தை உணர்த்த உதவும் என்று எண்ணி வடக்குப் புறமாக நின்றவன் அதை ஆன் பண்ணி மெல்ல தெற்குப் புறம் நோக்கி குகழந்தையைக் நடக்க ஆரம்பித்து “பிளீஸ் பாலோ மீ…!” என்றபடி நடக்க, அந்த ஏசி அவன் போகிற பக்கமெல்லாம் தன் ஏசி குளிர்ச்சியை வீசி வியாபித்தது.

குழந்தை அதை உற்று கவனிக்க இத ஏசி யூனிட் மாதிரி நீயும் சொல்வதைக் கேட்டு இணங்கி நடந்தால் அதோ அதைப் போல உயரத்தில் இருக்கலாம். மாறா…. எதிர்த்து கோபத்தை குரலிலும் குணத்திலும் காட்டினால்… ‘லொட லொடன்னு சப்தம் போட்டதுன்னு கழற்றிப் போட்டிருக்கோமே அந்த சீலிங்க் ஃபேன், அது மாதரி எவ்வளவு உயரத்தில் இருந்தால் முரண்பட்டால், தூக்கி மூலைல போட்டிடும் உலக்ம சொல்ல…

சொன்னதெல்லாம் குழந்தைக்குப் புரிந்ததோ என்னவோ கூடத்திலிருந்து ஒட்டுக் கேட்பது மாதிரி முறுவலோடு கேட்டுக் கொண்டிருந்த முத்தரிசிக்குப் புரிந்திருக்க வேண்டும்.

யாருக்காவது புரியணும். அது தானே நம்ம இலக்கு. உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்.

வளர்கவி இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். கதைகள்: வளர்கவி வெளியிட்ட நால்கள் -…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *