ஆளவந்தவர்..! – ஒரு பக்க கதை
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: June 27, 2019
பார்வையிட்டோர்: 24,209
தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகவும் ஆகிவிட்ட ஆளவந்தார் தன் உயர்விற்கு அல்லும் பகலும் பாடுபட்ட நெருக்கமானவர்களைத் தனியே சந்தித்தார்.
”உங்களுக்கெல்லாம் நான் எப்படி கைமாறு செய்யப்போறேனோ !” நெகிழ்ந்தார்.
”பெரிய வார்த்தையெல்லாம் வேணாம். அதெல்லாம் அப்புறம். மொதல்ல நாம ஒரு முக்கியமான காரியம் செய்யனும்.” காறாராய்ச் சொன்னான் காசிநாதன்.
”என்ன சொல்லு ?” ஏறிட்டார்;.
”என் தெரு முருகேசு பயல். தான் அரசாங்க உத்தியோகஸ்த்தன் என்கிறதை மறந்து நமக்கு எதிராய் வேலை செய்து ஓட்டையெல்லாம் பிரிச்சான். அவனை மொதல்ல தண்ணி இல்லா காட்டுக்குத் தூக்கனும்.”
”அப்புறம் ?” ஆளவந்தார் அடுத்தவனைப் பார்த்தார்.
”நம்ம கூட்டத்துல கல்லெறிஞ்சவனை அந்த சபாபதி இன்ஸ்பெக்டர் கண்டுக்கவே இல்லே. அவனை மாத்தனும்.”
”அடுத்து…?” கேட்க…. ஆளாளுக்கு ஒவ்வொருத்தரைச் சொல்லி அமைதியானார்கள்.
ஐந்து நிமிடம் அமைதியாய் இருந்த ஆளவந்தார் அமைதியாய்……
”நேத்திவரை நான் உங்களுக்கு நண்பன். இன்னைக்கு…..நம்ப தொகுதியில் உள்ள மொத்தப்பேருக்கும் பொது. எதிரியைப் பழிவாங்குறது சரி இல்லே. நண்பனாக்கிக்கிறதுதான் சரி. மறந்து மன்னிச்சாலே நண்பனாகிடுவான். இது அடுத்த தேர்தலுக்கு நமக்கு இன்னும் பலம். சுலபமா ஜெயிக்கலாம்.” – அரசியல் அரிச்சுவடியைச் சொன்னார்.
கேட்டவர்கள் தலை சுழன்றது.
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
இவளே என் மனைவி!
அ.லஷ்மி
June 20, 2026
யார் அது?
இரஜகை நிலவன்
June 20, 2026
கந்தையரின் கடைசி வித்து!
மா.சித்திவினாயகம்
June 14, 2026
