அறம் செய விரும்பு
கதையாசிரியர்: சுந்தர சண்முகனார்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 18, 2026
பார்வையிட்டோர்: 102
(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர் ஊரில் அறவோன் என்ற அண்ணனும், மறவோன் என்ற தம்பியும் இருந்தார்கள். அறவோன் நல்லவன். நியாயமாக நடப்பான். தருமம் செய்வது என்றால் அவனுக்கு ஆசை அதிகம். ஆனால், மறவோன் பொல்லாதவன். நியாயம் என்றால் என்ன என்று கேட்பான். தருமம் என்றால் அவனுக்குத் தலைவலி எடுக்கும்.
பக்கத்து ஊரில் ஒரு திருவிழா நடந்தது. அண்ணனும் தம்பியும் கட்டுசோறு கட்டிக்கொண்டு திருவிழாவிற்குப் போனார்கள். வழியில் ஒரு குளக்கரையில் கட்டு சோற்று மூட்டையை அவிழ்த்தார்கள். அப்போது, ஒரு முடவன் அங்கு வந்து அவர்களைச் சோறு கேட்டான். மறவோன் முடவனை வைது துரத்தினான். மறுபடியும் அவன் கேட்டான். மறவோன் அவனை நன்றாக அடித்துவிட்டான். முடவன் ஐயோ என்று அழுதான்.
அறவோனுக்கு மனம் இளகிவிட்டது. அப்பொது பக்கத்தில் ஒரு மாடு மற்றொரு மாட்டின் முதுகை நக்கித் தினவு தீர்ப்பதைக் கண்டான். ஆகா! மாடுகளே ஒன்றுக்கு ஒன்று உதவி செய்துகொள்ளும்பொது, நாம் மட்டும் முடவனுக்கு உதவி செய்யக் கூடாதா என்று நினைத்தான். தன் பங்கில் பாதி சோற்றை முடவனுக்கும் போட்டான். அவன் வாழ்த்தினான்.
அங்கே வண்டியில் ஒரு பணக்காரக் கிழவர் வந்து தங்கி யிருந்தார். அவர் அறவோனுடைய தரும குணத்தைக் கண்டார். அவன் மேல் ஆசை பிறந்து விட்டது. அவர் பிள்ளையே இல்லாதவர். ஆதலால் அறவோனைத் தன் வண்டியில் ஏற்றிக்கொண்டார். அவனைத் தன் சுவீகாரப் பிள்ளையாகவும் ஆக்கிக் கொண்டார். தருமம் செய்கு அறவென் பூஜிப்பாய் வாழ்ந்தான். தருமம் செய் மாத மறவோன் தன் கெட்ட குணத்திற்காக வருந்தினான். (ஆகையால்)
எப்போதும் தருமம் செய்ய வேண்டும்.
எழுதியவர்: மயிலம் தமிழ்க்கல்லூரியில் விரிவுரையாளரா யிருந்த வித்துவான் சுந்தர சண்முகனார்.
– ஆத்திசூடி அமிழ்தம், குழந்தைக் கதை மலர், முதல் பதிப்பு: 30-8-1948, பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி.
![]() |
பேராசிரியர் சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922 – அக்டோபர் 30, 1997) புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த ஒரு மிகச்சிறந்த தமிழ்த்தேசிய அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழில் முறையியல் (Methodology) அடிப்படையில் புதிய ஆய்வுத் துறைகளை உருவாக்கிய முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். “சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழ்நாட்டுத் தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்.”, என தமிழ்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஆறுவது சினம்
சுந்தர சண்முகனார்
July 18, 2026
ஈவது விலக்கேல்
சுந்தர சண்முகனார்
July 18, 2026
ஊக்கமது கைவிடேல்
சுந்தர சண்முகனார்
July 18, 2026
