அம்மா என்றால் அன்பு..!
கதையாசிரியர்: வளர்கவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 8, 2026
பார்வையிட்டோர்: 156

செல்விக்குக் கொஞ்சம் முங்கோபம் அதிகம். சிடுமூஞ்சி என்ரு எல்லார் கிட்டவும் கெட்ட பேர் எடுத்துவிட்டாள். ‘சின்ன வயதில் நல்ல குணங்கள் பழகா விட்டால் என்ன செய்வது?;’ என்று அவள் அம்மா வருத்தப்படாத நாட்களே இல்லை.
ஒருநாள் கொஞ்சம் கோபம் தலைக்கேறிய அம்மா, செல்வியிடம் ‘உன்னால் எனக்கு எந்த பயனுமில்லை.. நீ இந்த வீட்டில் இனி இருக்க வேண்டாம். அப்படித் தொடர்ந்து இருக்கணும்னு நெனைச்சா… நான் சொல்றதைச் செய்தால் இருக்கலாம்’ என்றாள். பள்ளிக்கூடத்தில் அவள் எல்லோரையும் அடித்து விடுவதாகவும் எல்லாரிடமும் சண்டை போடுவதாகவும் ரிப்போர்ட் வந்தது.
வீட்டில் தோட்டம் போன்ற செடி கொடிகள் நிரம்பி இருந்ததால் அவள் அம்மா ஒருநாள் ‘இதோ பாரு, செல்வி, நீ போய் நம்ம தோட்டத்துக்கு வரும் மயிலின் தோகையிலிருந்து ஒரு கொத்துக் கொண்டு வா! கொண்டு வந்தால் வீட்டில் இருக்கலாம்’ என்று கண்டித்து அனுப்பிவிட்டாள்.
வீட்டிலிருந்து வெளியேறிய செல்வி, வீட்டிலிருந்து நிறைய நிலக்கடலைகளை அள்ளிக் கொண்டு போனாள். அப்போது தோட்டத்துக்கு ஒரு நீண்ட தோகையுள்ள மயில் மேய வந்திருந்தது. அதற்கு அருகில் சென்று நிலக்கடலைகளைப் போட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்து வந்தாள். மயில் அவளோடும் இணங்கிப் பழக அதனை நெருங்கி, அதன் தோகைகளைப் பறித்தாள். அது அவளை ஒன்றும் செய்யாமல் இருந்தது.
வீட்டுக்கு கொத்துத் தோகையோடு வந்து தாயிடம் தர அவள் அம்மா அதனை விருட்டென எரியும் நெருப்பில் போட்டுவிட்டாள்.
‘அம்மா.. இதற்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? இப்படி எரியும் நெருப்பில் போட்டுவிட்டீர்களே?’ என்று வருந்த, அவள் அம்மா மென்மையாகச் சொன்னாள். ‘நான் இதைப் பறித்துவரச் சொன்னது எனக்காக அல்ல., எதற்கு என்று தெரியுமா? உனக்குப் பொறுமை வரத்தான்’ என்று சொல்ல, தன் முங்கோபத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக விடப் பழகிக் கொண்டாள் செல்வி!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஞானம்
கே.என்.சுவாமிநாதன்
July 8, 2026
தாயின் தவம்!
மா.சித்திவினாயகம்
July 8, 2026
வசந்தம் வந்து போய்விட்டது
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
July 8, 2026
