கதைத்தொகுப்பு: புனைவு

18 கதைகள் கிடைத்துள்ளன.

அகலிகா! நான் உன்னைக் காதலிக்கிறேன்…

 

 கௌதம முனிவன் நிஷ்டை கலைந்து கண்ணை விழித்தான். அந்த ஆரண்யம் மிக அடர்த்தியாக இருந்தது. எதிரில் அவனைச்சுற்றி மரங்கள் செடிகள். கொடிகள். மெல்ல யோசித்தான். தான் எங்கே இருக்கிறோம் தண்டகாரண்யம்? அல்லது மேருமலை? புரியவில்லை. கொஞ்சம் யோசித்தான். நீண்டகால தவத்தால் அவனுக்கு சக்தி பெருகி இருந்தது. தவவலிமை கூடியிருந்தது. ஆனால் அதுவெல்லாம் பிரயோக படுத்த அவன் மனம் ஒரு படவில்லை. தான் எங்கு இருக்கிறோம். எங்கே. எங்கே. எங்கே. மெல்ல யோசித்தான். நினைவு வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக


கனவுப் பூதம்

 

 சோகமே உருவாக அமர்ந்திருந்தான் அரசி மதுவந்தி. அகண்ட அவள் விழிகளில் துயரம் தேங்கிக் கிடந்தது. சமீப காலமாக அவளை ஏதோ கவலை பிடித்து ஆட்டி வந்தது. அடிக்கடி, சோர்ந்த முகத்துடன் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தவளாக அமர்ந்து விடுகிறாள். “உள்ளே வரலாமா அரசியாரே?” குரலைக் கேட்ட மாத்திரத்தில் அரசியாரின் முகம் மாறியது. “வா கனகதாரா” என்றாள். வந்தது அமைச்சர் வித்யார்த்தியின் மனைவி கனகதாரா. அரண்மனையிலேயே, சொல்லப்போனால் அந்த பிரத்யுக தேசத்திலேயே மதுவந்திக்கு மிகவும் நெருக்கமானவள் கனகதாராதான். “ஏதோ ஆழ்ந்த


காலம் மறந்த இடம்

 

 அத்தியாயம்:௩ – திசை மாறிய பயணம் | அத்தியாயம்: ௪ – வஞ்சகன் பிடிபட்டான் அதே வழியிலேயே வெகு நாட்களாகப் பயணித்துக் கொண்டிருந்தோம். நான் உடைந்த கோணமாணியை வைத்து எங்கள் இடத்தை அறிய முயற்சி செய்து கொண்டிருந்தேன். அது கொடுக்கும் முடிவுகள் நம்பத் தகுந்ததாக எப்போதும் இருந்ததில்லை. உறுதியாக நாங்கள் வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்று தெரிந்தாலும் அது மேற்கு நோக்கியே காட்டிக் கொண்டிருந்தது. நான் அதை நொந்து கொண்டிருந்தேன். பின் ஒரு நாள் மத்தியானம்


நேரம் இரவு ஒன்று முப்பத்தியாறு

 

 தாஹிர் பாய் என் குழந்தை பருவத்தில் எரிந்த ஒரு அக்காவின் ஆன்மா, அந்த தெருவையே பல வருடங்கள் ஆட்டிப் படைத்தது. ஹரே கிஷோர் பாய், கொஞ்சம் நேரத்தை பாருங்க மணி இரவு ஒன்று முப்பத்தாறு ஆகிறது. உங்களுக்கு ஒன்னு தெரியுமா? சொல்லுங்க தாஹிர் பாய். இப்போ நான் ரூம்ல இருக்கேன், நீங்க கம்பெனில இருக்கீங்க. உங்களை நான் எப்படி தொடர்பு கொள்ள முடியும்? மொபைலுக்கு அழைப்பீங்க தாஹிர் பாய். ஹான் சரியாக சொன்னீங்க கிஷோர் பாய். சரி


காலம் மறந்த இடம்

 

 அத்தியாயம்:௩ – துரோகி | அத்தியாயம்:௩ – திசை மாறிய பயணம் | அத்தியாயம்: ௪ – வஞ்சகன் பிடிபட்டான் அன்று மத்தியானம் மேக மூட்டமாயிருந்தது. காற்றின் வேகம் அதிகமாகிப் புயலாகிக் கொண்டிருந்தது. கப்பலைக் கவிழ்த்து விடுவது போல் கடல் பரப்பு ஏறிக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட அனைவருக்கும் உடம்பு சரியில்லாமல் போய் விட்டது. காற்றில் துர் நாற்றம் அடித்தது. இருபத்து நான்கு மணி நேரமும் நான் முறை கோபுரத்தை விட்டு இறங்கவில்லை ஓல்சன் ப்ராட்லி இருவருக்குமே பிணி


காலம் மறந்த இடம்

 

 அத்தியாயம்:௨ | அத்தியாயம்:௩ துரோகி அந்தச் சில நாட்கள் ஏக்கத்துடனேயே கழிந்தன. லிஸ்ஸுடன் பேசுவதற்குச் சந்தர்ப்பங்கள் ஏதும் வாய்க்கவில்லை. அவளுக்கு மீகாமனின் அறையை ஒதுக்கி இருந்தேன். ப்ராட்லியும் நானும் மேல் தள அதிகாரியின் அறையை எடுத்திருந்தோம். கீழ் நிலை அதிகாரிகள் தங்கும் அறைகளில் ஓல்சன் மற்றும் இரு சிறந்த மாலுமிகளும் தங்கி இருந்தனர். நாப்ஸின் படுக்கையை லிஸ்ஸின் அறையில் போட்டிருந்தேன் அவள் தனிமையை உணராதிருக்க. ஆங்கிலக் கடல் பரப்பை விட்டு வந்தவுடன் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. கடல்


காலம் மறந்த இடம்

 

 அத்தியாயம்:௧ | அத்தியாயம்:௨ | அத்தியாயம்:௩ உதவி பொழுது புலர்ந்த நிலையில் நான் உறங்கியிருக்க வேண்டும். இப்படியே எத்துணை நாட்கள் இருந்தேன் என்றே தெரியவில்லை. அவை மணிக்கணக்காக இருக்கும் என்று தோன்றவில்லை. இறுதியில் என் கண்களை விழித்துப் பார்க்கும் போது பகல் வெளிச்சம் முகத்தில் அறைந்தது. அவள் கூந்தல் என் முகத்தை மறைத்திருந்தது. அவள் மூச்சு இயல்பாய் இருந்தது. கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன். அவள் முகத்தைச் சிறிது திருப்பி இருந்திருக்க வேண்டும் இரவில். இப்போது என்


பட்டாம்பூச்சியைத் தேடி

 

 எனது சுய விவரம்: பெயர் விண்முகிலன். அஸ்ட்ரா யுகத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் பேசும் இளம் யுக ஊர்தி ஆய்வாளன். யுக ஊர்தி என்பது காலத்தின் ஊடே பின்னோக்கி மட்டும் செலுத்தக்கூடிய ஒரு விண்கலம். மிக மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் ஒரு விஞ்ஞானத் தொழில்நுட்பம். இதன் மென்பொருள் வடிவமைப்பில் என் பங்கு பெரிய அளவில் இருப்பதால் பூமிப்பந்தில் இந்த ரகசியம் அறிந்த சொற்ப நபர்களில் அடியேனும் ஒருவன். ‘மெல்லத் தமிழ் இனி சாகும்! அந்த மேற்கு மொழிகள்


நோ-வீடு

 

 2030, மார்ச் 4ஆம் தேதி மணி ஐந்தாகி விட்டிருந்தது. அலுவலகத்தில் சந்தோஷ் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு கொண்டு இருந்தான். வேலை நேரம் முடிந்தும் அவன் பரபரப்பாக வேலை செய்து கொண்டு இருப்பதை பார்த்த சக அலுவலர் விமல், “என்ன சந்தோஷ் ரொம்ப பரபரப்பா இருக்கீங்க இன்னும் வேலை முடியலயா?”, எனக் கேட்டார். “ஆமா விமல். ஒரு பழைய அக்கவுண்ட் பத்தின டீடெயில்ஸ ஹெட் ஆஃபீஸுக்கு இன்னைக்கே மெயில் அனுப்பணும்னு பாஸ் சொல்லிட்டாராம். அந்த டீடெயில்ஸ் அனுப்பிட்டு தான்


காலம் மறந்த இடம்

 

 முன்னுரை 1918 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ப்ளூ புக் மேகஸின் என்னும் பத்திரிக்கையில் மூன்று பகுதியாக வெளி வந்த புதினம் இது. எட்கர் ரைஸ் பர்ரோஸ் என்னும் எழுத்தாளர் எழுதிய கேஸ்பக் என்னும் பழைய உலகத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றி எழுதிய மூன்று நூல்கள் கொண்ட தொகுப்பில் முதலாம் கதை இது. முதலாம் உலகப்போர் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், அமெரிக்காவில் ஒரு மிகப் பெரிய கப்பல் கட்டும் தொழில் அதிபரின் மகன் ஒருவன் வேலை விஷயமாக பிரான்சிற்குக்