கதைத்தொகுப்பு: அறிவியல்

129 கதைகள் கிடைத்துள்ளன.

புன்னகைக்கும் இயந்திரங்கள்

 

 (2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) (ஸ்மைலிங் மெஷின்ஸ்) “சமூக விஞ்ஞானி முனைவர் ராம் அவர்கள் நாளை காலை 8.00 மணிக்கு அரசாங்க ஆடிட்டோரியத்தில் தன் கண்டுபிடிப்புக்களைச் சமர்ப்பிக்கிறார். அன்று மாலை 5 மணிக்கு அரசாங்கம் சில முக்கிய முடிவுகளை அறிவிக்க இருக்கிறது” நகரின் முக்கிய இடங்களில் லேசர் எழுத்துக்கள் வெற்றுவெளியில் தோன்றி நகர்ந்து கொண்டிருந்தன மீண்டும் மீண்டும். ஒரு நிமிடம் நின்று பார்த்துக் கொண்டிருந்து விட்டுத் தொடர்ந்தேன். பெருமிதமாய்


பதக்கம் எண் 13

 

 இக்கதை, மீன் வயிற்றில் பதக்கம் இருந்தது குறித்து நாளிதழ்களில் வந்த உண்மைச்செய்தியை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டதாக இருக்கலாம். முதல் பாதிக் கதையில், ஓர் அயற்கோள்வாசி, அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இவ்வுலக மனிதர்களோடு உரையாடி, உறவாடி தனக்கு வேண்டிய பதக்கத்தைப் பெற்றுக் கொள்கிறான். பிறகு, அந்தப் பதக்கத்தைக் கொண்டு அடிமைத் தளையிலிருந்து தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களயும் விடுவித்துக்கொள்கிறான் என்பதுதான் அடிப்படை கதை. விறு விறுப்பாக, நகர்த்தப்பட்டிருக்கும் இந்தக் கதையில், அந்நியவாசிகளின் வாழ்வும், பிரச்சனைகளும், சூழ்ச்சிகளும் இவ்வுலக மக்களின் வாழ்வுக்கும்


ஆமியுடன் ஒரு அற்புத இரவுப் பொழுது…!

 

 ஆமி ஒரு குட்டி வனதேவதை… அவளுடன் சிறிது நேரம் செலவிட்டால் போதும்… உற்சாகம் உங்களையும் தொற்றிக்கொள்ளும்.. அவளுக்கு நேற்று என்பதும் நாளை என்பதும் இல்லை.. இன்று மட்டும்தான்… எப்போதும் பச்சரிசி பல் தெரிய சிரிக்கும் இளவரசி..!! கேரளாவில் மலப்புரம் மாவட்டம் நீலாம்பூரிலுள்ள மலைநாயக்கன் என்று அழைக்கப்படும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஓரியின் செல்லமகள்..! சிறு வயதிலேயே தாயை இழந்தவள்.ஓரி வேறு துணை வேண்டுமென்று நினைக்கவே யில்லை.. ! அவனுக்கு தேன் எடுக்கவும் மெழுகு தயாரிக்கவுமே நேரம் சரியாய்


ந்யூமாவின் நகல்

 

 ராகுலன் – 00. 003398 G II – இந்திய அரசின் தலைமை அணுக்கரு விஞ்ஞானி – 4.3.2094. 17: 58 : 245 மணி “திரு. ராகுலன், தாங்கள் இந்திய அரசின் அணுக்கரு விஞ்ஞானத் தலைமையகக் கணிப்பொறியால் அழைக்கப்படுகிறீர்கள்.” ‘கோக்’ பானம் குடித்துக் கொண்டிருந்த ராகுலன் நகர்ந்து வந்து அகலமான மானிட்டர் முன்பு அமர்ந்தான். “ஆஜர். செய்தி என்ன?” “ வணக்கம் ராகுலன்! கடந்த 2600 நானோ விநாடிகளாகத் தாங்களுக்கும், தலைமையகத்துக்கும் இருக்கும் தொடர்பு கொஞ்சம்


ஆலமரத்து ஆவி

 

 இயற்கையின் சக்திகள் பசுமையான மரங்களில் குடி கொண்டிருப்பதாக மனிதன் நம்புகிறான். கனடா பூர்வகுடி மக்கள் மரங்களை தெய்வமாக வழிபடுகிறார்கள். இது இந்தியாவிலும் இலங்கையிலும் மர வழிபாடாய் மலர்ந்தது. நீங்கள் எந்தத் தெய்வக் கோயிலுக்குச் சென்றாலும் அங்கு அந்தத் தெய்வத்திற்கென்று ஒரு மரம் இருப்பதைக் காணலாம். இம்மரம் தலவிருட்சம் என்று கூறப்படும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு மரம் உண்டு. சிவனுக்கு ஆலமரம். கணபதிக்கு அரசு. அம்மனுக்கு வேம்பு. *** திருகோணமலையில் இருந்த தென் மேற்கே சுமார் 50 கிமீ


பொது எதிரி

 

 ஒட்டுமொத்தமனித குலத்தின் பொது எதிரி எது என்ற கேள்விக்கு உங்கள் பதில் என்னவாகஇருக்கும்? உங்கள் நூற்றாண்டில் இதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட பதில்கள்கிடைத்திருக்கும். தீவிரவாதம், போர், மதக்கலவரம், கேன்சர், கொரோனா, புவி வெப்பமயமாதல், பசி, பஞ்சம், இயற்கைச் சீற்றம் என்று உங்கள் லிஸ்ட் நீள்கிறது. மனித குலத்தின் பொது எதிரி தேர்வுப் பட்டியலில் எங்கள் நூற்றாண்டில் நாங்கள் எல்லோரும் முதலிடம் பெறும் என்று நம்பியிருந்தது பிளிசன்ட் (Bliss-end) என்ற மீளா நித்திரைக்குக் கொண்டு செல்லும் அதிபயங்கர போதை வஸ்து.


மார்ஷல் ரோடு

 

 அந்த ரோட்டுக்கு பெயர் ‘மார்ஷல் ரோடு’ எக்மோரில் உள்ளது. இப்பொழுது அந்த ரோட்டுக்கு பெயர் வேறு. ராஜரத்தினம் ஸ்டேடியம் வந்தபின் அந்த ரோட்டுக்கும், அந்த பெயரே நிலைத்துவிட்டது. வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று அந்த ரோட்டில் இருந்தது என நண்பன் ரவி கூற கேட்டு அங்கு சென்றேன். அவன் அந்த தகவலை என்னிடன் கூறியதற்கு காரணம் உள்ளது. நான் வானொலித் தொடர்பான எதைப் பார்த்தாலும் என்னிடம் கூறு என்று கூறியிருந்தது காரணமாக இருக்கலாம். ஆனால் அவனிடம்


காலம் ஒரு நாள் மாறும்!

 

 கவனிக்க: இக்கதையில் வர்ணிக்கப்பட்டுள்ள விண்வெளி பயண தொழில் நுட்பங்கள் முற்றிலும் கதாசிரியரின் கற்பனையே…காப்பி ரைட் உள்ளது (Copy Right)…. நாசாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது! கி.பி. 2025 இந்தியப் பெருங்கடலின் நடுவில், சரியாக பூமத்திய ரேகை (Equator) பகுதியில் நடந்து கொண்டிருந்த அந்த பிரமாண்டமான வேலைப்பாடுகளை, மேலே ஹெலிகாப்டரில் இருந்து பார்த்த விக்னேஷ்வரை மெய்சிலிர்க்க வைத்தது.. சமீப காலத்தில் பிரபலமாகிப்போன இளம் விஞ்ஞானி சுதர்சனை நினைத்து மனமாற மெச்சினார். சுதர்சனுக்கு இப்பொழுது வயது இருபத்தி ஆறு தான் இருக்கும். எந்தவொரு


பட்டாம்பூச்சியைத் தேடி

 

 எனது சுய விவரம்: பெயர் விண்முகிலன். அஸ்ட்ரா யுகத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் பேசும் இளம் யுக ஊர்தி ஆய்வாளன். யுக ஊர்தி என்பது காலத்தின் ஊடே பின்னோக்கி மட்டும் செலுத்தக்கூடிய ஒரு விண்கலம். மிக மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் ஒரு விஞ்ஞானத் தொழில்நுட்பம். இதன் மென்பொருள் வடிவமைப்பில் என் பங்கு பெரிய அளவில் இருப்பதால் பூமிப்பந்தில் இந்த ரகசியம் அறிந்த சொற்ப நபர்களில் அடியேனும் ஒருவன். ‘மெல்லத் தமிழ் இனி சாகும்! அந்த மேற்கு மொழிகள்


அரோகா

 

 “சூரியனின் மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள சில இரசாயன மாற்றத்தால் இந்த காந்த புயல் உருவாகியுள்ளது. அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் இந்த புயலுக்கு ‘அரோகா’ என பெயர் சூட்டியுள்ளனர். இந்த புயல் பூமியில் அண்டார்டிகா பகுதி வழியே கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பூமியில் புவியீர்ப்பு காரணமாக, காந்தப்புயல் ஈர்க்கப்பட்டு, அனைத்து பகுதியை தாக்க வாய்ப்புள்ளது.அதன் தாக்கம் பல நாட்கள் நீடிக்கலாம் ‘ என்று அமெரிக்க அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். தற்சமயம் அந்த புயல் 7,500 கிலோ