எட்டாவது குழந்தை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 15, 2026
பார்வையிட்டோர்: 167 
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்

(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பார்வதி, அந்தக் கடிதத்தை எத்தனை முறை படித்திருப்பாள் என்பது அவளுக்கே தேரியாது, கண்களிலே ததும்பிக் கொண்டிருந்த கண்ணீர் பார்வைக்குத் திரை போட்டுத் தடுத்தது. மையினால் மெழுகியது போல் காட்சியளித்த அக் கடிதம் உணர்ச்சியற்ற மோன நிலையிலிருந்த அவளது தளிர்க் கரங்களினின்றும் நழுவிக் கீழே விழுந்தது.

பார்வதியின் இரு விழிகளிவின்றும் வாய்க் கால் மாதிரி வழிக்தோடிக் கொண்டிருக்கும் கண்ணீரைக் காணச் சகிக்காதவன் போல் கோடி வீட்டுப் பாட்டி, “என்னடீ சமாசாரம்! அதிலே அப்படி என்னதான் எழுதியிருக்கிறது” என்று கவலையுடன் கேட்டுக் கொண்டே பின்கட்டை அடைந்தாள்.

பாட்டிக்கு அந்தத் தெருவிலேயே பார்வதி ஒருத்தியைத் தவிர வேறு யாரையும் பிடிக்காது; அத்துடன் வேறு ஒருவரும் பாட்டிக்குப் பார்வதியைப் போல் அத்தனை ஆதரவு காட்டவும் மாட்டார்கள். ஆனால் பார்வதி அப்போதிருந்த மன நிலையில் பாட்டிக்குப் பதில் கூறக் கூட நாவெழவில்லை.

தாங்க முடியாத ஒருவித பாரம் அவன் உள்ளத்தை அழுத்திக் கொண்டிருந்தது. சோகத்தின் இரும்புப் பிடிகளிலே சிக்கி, சிந்தனைச் சிறகுகளின் மீது அமர்த்து விட்ட பார்வதியை, அவை எங்கெல்லாமோ, தன் மனம் போனபடி யெல்லாம் இழுத்துச் சென்று கொண்டிருந்தன.

தனக்கு விவாகமான இந்தப் பதினைந்து வருட இடைக் காலத்துக்குள் அவள் உள்ளமும் ஒவ்வொரு கணமும், ஒரு குழந்தைக்காகத்தான் ஏங்கித் துடித்துக் கொண்டிருந்தது. ஆனால் விரும்புகிறவர்களை விட்டு, வேண்டாதவர்களுக்குத் தானே, தெய்வம் அள்ளி அள்ளிக் கொடுக்கிறது

அடுக்கடுக்காய் ஆணும் பெண்ணுமாக ஏழு குழந்தைகயுடைய பார்வதியின் நாத்தனர் சாவித்திரி, இப்போதும் கர்ப்பிணியாக இருப்பதாகத்தான் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தது, காலட்சேபத்துக்கே கையைப் பிடிக்கும் அந்தக் குடும்பத்துக்குத் தேவையான பொருட் செல்வத்தை இறைவன் அளிக்காவிடினும், மக்கட் செல்வத்தை மட்டும், வற்றாது அளித்துக் கொண்டுதான் வருகிறான்.

ஆனால் வற்றாத செல்வமும், சுக போகங்களும் இருந்தும் கூட, பார்வதியின் பிள்ளைர் கலி தீர்க்க, ஆசைக்கு அவளை ‘அம்மா’ வென்று அழைக்க, பெயருக்கு ஒரு பிள்ளையை அவளுக்குப் பிச்சை போட இறைவன் மனம் இளகவில்லை. இதை நினைக்கும் பொழுதுதான் அவளுக்கு வாழ்க்கையே ஒரு வறண்ட பாலைவனமாகக் காட்சியளித்தது.


கசப்பான மருந்தை மென்று விழுங்குவது போல், பார்வதி விரட்டி விரட்டி அடித்துக் கொண்டு வந்த வேதனை நிரம்பிய காட்களுக்கு மத்தியில்தான், ஆண்டவன், சில இன்ப இதழ்களையும் அவன் முன் தூவினான், கடவுளது கருணைப் பார்வைக்குச் சங்கரய்யர் தம்பதிகள் இலக்கானார்கள்.

தன் மனைவி இரண்டு மாதங்களாகக் குளிக்காமல் இருக்கிறாள் என்கிற செய்தி சங்கரய்யரை எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தான் எடுத்த பிறவியின் பயன் இனிமேல்தான் எட்டப்போவதாக அவர் உள்ளம் மகிழ்ந்தார்.

பார்வதியின் ஆனந்தம் அளவுகடந்து நின்றது. எந்த ஒருவித ஆசைத் தீயில், அவளுடைய உடலும் உள்ளமும் வெந்து சாம்பலாகிக் கொண்டு வந்ததோ, அந்த மகத்தான பேராசை அவளுக்கு நிறைவேறப் போகிறது. ஊரிலுள்ள எல்லாப் பெண்களைப் போல் இனி மேல் அவளாலும் தலை நிமிர்ந்து நடக்க முடியும். எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதுதானே, அவளது வாழ்க்கைச் செடி அரும்பு விட்டிருக்கிறது! இப்போது அவளது மனம், மலரைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியது.

தன் சக பெண்கள் மத்தியில், தானும் மணமான புதுப் பெண்ணைப் போல் உட்கார்ந்து கொண்டு, முழங்கை வரை விதம் விதமான வளையல்களை அணிந்து கொள்ளப் போகும் இன்பக் காட்சி, அவள் முன் வந்து நின்றது. தவழ்ந்து நீந்தும், தன் செல்வக் குழந்தையையும், ‘அம்மா’ வென்று துள்ளி ஒரு வரும் பாலகனையும், வாரி அணைத்து மகிழப்போகும் நன்னாளை அவள் மனம் கற்பனை செய்து பார்த்துக் கனித்தது.


இந்தச் சமயத்தில்தான் சங்கரய்யருக்கு அவருடைய சகோதரியிடமிருந்து மற்றொரு கடிதம் வந்தது. அப்போது சாவித்திரிக்கு ஆறாவது மாதம். மிகுந்த கவலையுடன் கடிதத்தைப் பிரித்தார் சங்கரய்யர். அதில் பின் வருமாறு எழுதியிருந்தது.

அன்புள்ள அண்ணாவுக்கு,

சாவித்திரி கமஸ்காரம்.

அவர் எழுதின முன் கடிதம் உங்களுக்குக் கிடைத்திருக்கலாம் என எண்ணுகிறேன். ஆனால் அதற்குத் தங்களிடமிருந்து இன்று வரை எவ்வித பதிலும் வரவில்லை, நாளுக்கு நாள் என்னுடைய உடம்பு மிகவும் பலஹீனமாய்க் கொண்டு வருகிறது. இந்தப் பிரசவம் என்னை மிகவும் படுத்திவிடும் போலிருக்கிறது. டாக்டரிடம் காண்பித்ததில் நல்ல உயர்ந்த டானிக்குகள் வாங்கிச் சாப்பிட வேண்டுமென்று எழுதிக் கொடுத்து விட்டார், இதுவரைக்கும் ஏற்பட்ட வைத்தியச் செலவையே அவரால் சமாளிக்க முடியவில்லை, இன்னும் குறை மாதங்களையும் எப்படி ஓட்டப் போகிறேன் என்றே எனக்குத் தோன்றவில்லை.

இனிமேல் ஒன்றுக்கும் உங்களைத் தொந்தரவு செய்யச் கூடாது. என்று உங்கள் மாப்பிள்ளை கண்டிப்பாய்க் கூறி விட்டார். இந்தக் கடிதம் கூட நான் அவருக்குத் தெரியாமல் தான் எழுதியிருக்கிறேன். என்னால் உங்களுக்கு எப்பொழுதும் துன்பம் தான். ஆனால் என் துக்கத்தைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள, தங்களைத் தவிர எனக்கு இவ்வுலகில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனாலேயே துணிந்து எழுதினேன். இத்துடன், டாக்டரின் மருந்துச் சீட்டுக்களையும் வைத்து அனுப்பியிருக்கிறேன். கூடிய சீக்கிரம் உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். மன்னிக்கு என்னுடைய நமஸ்காரங்களைச் சொல்லவும்,

சாவித்திரி.

இந்தக் கடிதத்தின் சமாசாரம் பாட்டிக்கும் தெரியவே, ஒரு நாள் இதைப் பற்றிச் சாவகாசமாகப் பேச்சை ஆரம்பித்தாள் பாட்டி,

“பார்வதி! உன் நாத்தனாருக்கு இது எட்டாவது பிரசவம்தானே!”

“ஆமாம்!” என்றாள் பார்வதி, அடக்கமாக.

ஆனால் அதைக் கேட்டு விட்டு, “ஹும் !…” என்று சூள் கொட்டி ஒரு ரீண்ட பெருமூச்சையும் விட்டாள் பாட்டி.

பாட்டியின் அபிநயங்களினால் பீதியடைந்த பார்வதி, “ஏன் பாட்டி அப்படிக் கேட்டீர்கள்!” என்றாள் பட படப்புடன்.

“ஒன்றுமில்லையடியம்மா, சும்மாதான் கேட்டேன். நான் ஏன் அதைச் சொல்லவேண்டும்!” என்று பாதி கூறியும் கூறாமலும் மழுப்பிப் பார்வதியின் ஆவலையும் கலக்கத்தையும் அதிகப்படுத்தி விட்டாள். பார்வதி, பாட்டியை இலேசில் விடவில்லை. ஆனால் அதற்குப் பாட்டி கூறிய பதிலைக் கேட்டப் போது அவளுக்கு இந்தப் பிரபஞ்சமே பூகம்பத்தினால் கிடு கிடு வென்று ஆடுவது போல் தோன்றியது.

“எட்டாவது குழந்தை தாய் மாமனுக்கு ஆகாது” என்கிற பாட்டியின் தத்துவம் நிறைந்த வார்த்தைகளே அவள் திரும்பும் திசைகளிலெல்லாம் பேரிடிபோல் முழங்கிக் கொண்டிருந்தன.

தன்னையும், பிறக்கப்போரும் தன் குழக்தையையும் விட்டுத் தன் கணவனைப் பிரித்துச் செல்ல ஏதோ ஒரு சக்தி காத்திருப்பது போன்றதொரு பீதி அவன் இதயத்தை இறுகக் கவ்விக் கொண்டது.

அமைதியாயிருந்த பார்வதியின் உள்ளத்தடாகத்தில் ஒரு சிறு கல்லைத் தூக்கி எறிந்து, அவள் மனத்தில் எண்ணற்ற எண்ணகளைத் தட்டி எழுப்பி விட்டாள் பாட்டி. ஆனால் ஆழம் காண முடியாத துயரக் கடலின் அடி வாரத்தை நோக்கி அமிழ்ந்து கொண்டிருக்கும் பார்வதிக்கு, பாட்டி ‘சட்’டென்று தன்னுடைய சில அபூர்வமான யோசனைகளை கூறி, அவள் மனத்தைத் தேற்றி விட்டாள்.


மறு நாள் மஹாதானபுரத்துக்குப் போக வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு, தன் சகோதரிக்கு வாங்கி வந்த மருந்துகளையும் மனைவியின் கையில் ஒப்புவித்துவிட்டு, சங்கரய்யர் அவசர வேலையாக வெளியே சென்று விட்டார். ஆனால் அதைத் தொடர்ந்து பாட்டியும் அங்கு வந்து விடவே பார்வதியின் சந்தோஷம் அளவு மீறியது.

“கொண்டு வந்து விட்டீர்களா, பாட்டி!” என்றாள் பார்வதி தாங்கமுடியாத ஆவலுடன்.

“இதோ!” என்று கூறிக்கொண்டே, தன் தளர்ந்த இடுப்பைத் துழாவி ஒரு பொட்டலத்தை எடுத்துப் பார்வதியிடம் நீட்டினாள். அதைப் பிரித்துப் பார்த்த பார்வதியின் கண்கள் அகல விரித்தன.

“ஏன் பாட்டி! இது பெரிய உயிருக்கு ஒன்றும் கெடுதல் செய்து விடாதே!” என்று கேட்கும்போது பார்வதியின் குரலிலே கலக்கம் கலந்து தொனித்தது.

“போடி, அசடே! தத்துப் பித்துன்னு ஒன்றும் உளறாதே, அப்படியிருந்தால் நான் கொடுப்பேனா!” என்றாள் பாட்டி, சற்று கண்டிப்புடன். அதற்குமேல் பாட்டியிடம் விவாதிக்கவும் பார்வதிக்கு இஷ்டமில்லை. கணவன் வருவதற்குள் காரியத்தை முடித்துவிட வேண்டு மென்று அவள் உள்ளம் பறந்தது.

கணவன் கொடுத்து விட்டுப்போன மருந்துப் பொட்டலத்தைப் பிரித்தாள் பார்வதி. அப்போது அவனது கைகள் நடுங்கின. மன்னிக்க முடியாத குற்றம் ஒன்றைத் தான் செய்யப் போவதாக அவள் மனச்சாட்சி குத்திக் காட்டியது. ஆனால் அதில் அவள் உள்ளம் தளர வில்லை, “எழு குழந்தைகளையுடைய அவர்களுக்கு இந்தக் குழந்தை போனால் குடி ஒன்றும் முழுகி விடாது ஆ னால் அது பிறந்து…என் கணவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டு விட்டால்..” என்று எண்ணிப் பார்த்ததும், அவள் இதயம் கல்லாகி விட்டது.

இயந்திரத்தினால் இயக்கப்பட்டவள் போல் பொட்டலத்திலிருந்த மாத்திரைச் சீசா ஒன்றை எடுத்தாள். அந்த மாத்திரைகளைக் கொட்டி விட்டு, அதே பாட்டிலில், பாட்டி கொடுத்த சாம்பல் நிற மாத்திரைகளைப் போட்டு நிரப்பி, முன்போல் வைத்து விட்டாள்.

அன்றிரவு முழுவதும் பார்வதி தூங்கவே வில்லை ‘தான் செய்திருக்கும் துரோகச் செயல், வெளிப்பட்டு விட்டால்…!’ என்று நினைக்கும் போது அவளுக்கு மூச்சே நின்றுவிடும் போல் தோன்றியது.

பொழுது விடிந்ததும் சங்கரய்யர், தன் மனைவியிடம் உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளும்படி, பலமுறை எச்சரித்து, தான் வரும்வரை பாட்டியையும் துணைக்கு ஏற்பாடு செய்து விட்டு மருந்துகளுடன் மஹாதானபுரம் புறப்பட்டுச் சென்று விட்டார்.


கால வெள்ளம், தன் கடமையை, வழுவாது செய்த வண்ணம் சென்று கொண்டே தானிருந்தது. இதற்குள் சங்கரய்யர் இரு முறை தன் சகோதரியைச் சென்று கண்டு வந்து விட்டார். ஆனால் அந்த இடைக் காலம் முழுவதும் பார்வதி மட்டும் ஏதோ பிரமை பிடித்தவன் போலவே இருந்து வந்தாள். செய்யத் தகாத ஒரு பெரும் குற்றத்தைச் செய்து விட்டதாக அவனது உள்ளுணர்வு அவளை வேதனைப் படுத்தியவாறிருந்தது.

கணவன் படுக்கச் சென்று வெகு நேரமாகியும் பார்வதி மாத்திரம் மேல் மாடியில் நின்ற வண்ணம் ஆகாயத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்த வண்ணமிருந்தாள்.

பால் நிலவு, தேய்ந்த நிலவான விந்தையை அனுபவித்துக் கொண்டிருந்த பார்வதி மறுகணம் திடுக்கிட்டு விட்டாள். தெற்குக் கோடியிலிருந்த, நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து ஒரு நட்சத்திரம், பூமியை நோக்கிப் பாய்வதைக் கண்டவுடன், தாங்க முடியாத ஒருவித அச்சம் அவள் உள்ளத்தை ஆக்ரமித்து விட்டது. ‘நாம் ஏன், மாடிக்கு வரிதோம்!’ என்றாகி விட்டது அவளுக்கு. விடுவிடுவென்று தன் படுக்கையை அடைந்தாள்.

அன்று காலையிலிருந்தே அவன் மனம் ஒரு நிலையிலில்லை. “இரண்டு மூன்று நாட்களாகவே, வலி எடுத்துத் தாங்க முடியாமல் சாவித்திரி மிகவும் அவஸ்தைப்பட்டாள். ஆனால், ஆயுதத்தினால் எடுக்க வேண்டி வந்த குழந்தை செத்துத்தான் பிறந்தது. அவளுடைய நிலைமையே மிகவும் கவலைக் கிடமாய்த் தானிருக்கிறது. ஆனால் இந்த நிலைமையிலும், அவள் எப்பொழுதும், தன்னுடைய மன்னியின் நினைவாகவே யிருக்கிறாள்.

“டாக்டர் இரண்டு மாதம் பூரண ஓய்வு எடுத்துக் கொள்ளா விட்டால் உயிருக்கே ஆபத்து என்கிறார். ஆனால் அவள் ஒரே பிடிவாதமாக, இத்தனை வருஷங்களுக்குப் பிறகு வந்திருக்கும் மன்னியின் சீமந்தத்துக்கு, செத்தாலும் நான் அங்கு போய்த்தான் ஆக வேண்டு மென்கிறாள்!” என்று சாவித்திரியின் கணவர் எழுதியிருந்தார். அதைப் படித்து விட்டு, தன் கணவன், புலம்பி அழுவதைப் பார்வதியினால், பார்க்கச் சகிக்க வில்லே, இத்தனைக்கும், தானே தான் காரணம் என்று அவள் மனம் குத்திக் காட்டியது.

பைத்தியம் பிடித்தவள் போல் விடு விடு என்று மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தாள் பார்வதி. உள்ளத்திலே ஒரு விஷ வித்து விழுந்து விட்டால், அது எத்தனை சீக்கிரம் தான், எங்கெல்லாம் வேர் விட்டு வியாபித்து விடுகிறது!

“நட்சத்திரம் விழுவதைப் பார்ப்பது அப சகுனம் என்பார்களே” இதே கேள்வி திரும்பத் திரும்ப எழுந்து மிதந்து கொண்டிருந்தது. தன் தீய செய்கையினால் எமன் வாயிலை நோக்கி நடந்து கொண்டிருக்கும், சாவித்திரியின் உயிருக்கும் ஏதாவது… அதற்கு மேல் அவளால் எண்ணிப் பார்க்கக் கூட முடியவில்லை. கட்டிலில் முகத்தைப் புதைத்துக் கொண்டு, சிறு குழந்தையைப் போல் தேம்பித் தேம்பி அழுதாள் பார்வதி.


அன்றிரவு முழுவதும் பார்வதி தூங்காமல் புரண்டு கொண்டிருந்தாள். சிந்தனைத் தீக்கு இரையாகி, அதிலே வெந்து சாம்பலாகிக் கொண்டு வந்த பார்வதியின் அகக்கண் முன்பு, சாவித்திரியின் அன்புருவமும், இறந்துபோள் அவளது குழந்தையும், விஸ்வரூபம் எடுத்து நின்றன. அந்தப் பயங்கரக் காட்சியை அவளால் பார்க்க முடியவில்லை.

“மன்னி! நாங்கள் ஏழை, கேட்பாரில்லை என்பதால் தானே, உங்கள் சுயநலத்துக்காக, என் குழந்தையைப் பலியிட்டு விட்டீர்கள்! என் வயிற்றில் பிறக்கும் இந்தக் குழந்தையின் மூலம்தான் உங்கள் கணவருக்கு ஒன்று ஏற்பட வேண்டு மென்று எங்காவது சட்டம் இருக்கிறதா? உலகத்தில் எத்தனையோ குழந்தைகள், பெற்றோருக்கே ஆகாமல் பிறப்பதில்லையா! இப்போது உங்கள் வயிற்றில் பிறக்கும் குழந்தையே, என் அண்ணாவுக்கு ஆகாது; ஏதோ தோஷமிருக்கிறது என்று ஏற்பட்டு விட்டால் அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்!” – சாவித்திரி புலம்பினாள்.

காலனே தன்முன் தோன்றிப் பழி வாங்க வந்து விட்டாற் போல்தான் பார்வதியின் உடல் பதறியது. ஆனால் அதைத் தொடர்ந்து அரைத் தூக்கத்திலிருந்த பார்வதிக்கு யாரோ தன்னை, ” அம்மா, அம்மா!” என்று ஈனஸ்வரத்தில் கெஞ்சிக் கூப்பிடுவது போலிருந்தது.

அவள் தன்னையுமறியாமல் ‘ஏன்?’ என்றாள்.

உருவம் தெரியாத அந்தக் குரல் மீண்டும் பெரிய குரலில் பேசிற்று:

”அம்மா! அந்தப் பாட்டிக்கிட்டே மாத்திரை வாங்கிச் சாப்பிட்டு, என்னையும் கொன்னுப்பிடுவியா, அம்மா! என்னைக் கொல்லாதே, அம்மா!” என்று மிகவும் பரிதாபமாகக் கெஞ்சிற்று அந்தக் குரல்.

ஆவேசம் வந்தவளைப் போய் சட்டென்று தன் இரு கைகளாலும், வயிற்றை அணைத்துக் கொண்டாள் பார்வதி. அவளது கண்களிலே கண்ணீர் ஆறாகப் பெருகிக் கொண்டிருந்தது.

“மாட்டேண்டா, கண்ணு! நிச்சயமாக மாட்டேன். உன் அம்மா அவ்வளவு கொடிய பாவி இல்லேடா கண்ணு! அவள் அவ்வளவு கொடிய பாவி இல்லை” என்று தன்னையு மறியாது அலறி விட்டாள்,

அந்தச் சத்தத்திலே திடுக்கிட்டு விழித்துக் கொண்ட சங்கரய்யர் சட்டென்று தம் மனைவியின் பக்கம் திரும்பினார். அந்த மங்கலான விளக்கின் ஒளியில், பேயறைந்தது போல் ஒரேயடியாக வெளிறிப் போயிருந்த நம் அன்பு மனைவியின் முகத்தைக் கண்டதும் அவர் ஒரு கணம் நடுங்கி விட்டார். காரணம் தெரியாத ஒரு வித திகில், கண நேரத்துக்குள் அவரை அடிமை கொண்டு விட்டது.

தெப்பக் குளமாக உடல் முழுவதும், வியர்த்து நனைதிருந்த பார்வதியை இமை கொட்டாமல் பார்த்தார். வார்த்தைகள் அவரது உள்ளத்திலேயே தடுமாறின.

“ஏன் இப்படி உன் உடம்பு நடுங்குகிறது, பார்வதி! என்ன உளறினாய்! தூக்கத்தில் சொப்பனம் கண்டு பயந்து விட்டாயா!” என்றார் கவலை தோய்ந்த குரலில். ஆனால் பார்வதி பதிலே பேச வில்லை. அவளது விழிகள் மட்டும் கண்ணீரைக் கசிந்த வண்ண மிருந்தன.

“பார்வதி, ஏன் இப்படிப் பார்க்கிறாய்! துர்ச் சொப்பனம் ஏதாவது கண்டு பயந்து விட்டாயா!” என்று மீண்டும் வந்த அவள் கணவனது அன்பு நிறைந்த குரல் அவள் சிந்தனையைத் தடுத்து நிறுத்தியது.

“ஆமாம். சொப்பனம்தான் கண்டேன், நான் நினைவில் செய்த தீயினை யெல்லாம் என்னை அந்த உருவத்தில்தான் பயமுறுத்துகிறது. நீங்கள் முதலில் என்னை மன்னிப்பதாக வாக்களியுங்கள். அப்போதுதான் என் மனம் சாந்தியடையும்” என்று பேசிக் கொண்டே வந்தவள் தாங்க முடியாத துக்கத்தினால் ‘ஓ’ என்று அழுது விட்டாள். சங்கரய்யர் ஒன்றும் புரியாமல் திகைத்தார்.

“பார்வதி, இதெல்லாம் என்ன! எனக்கு ஒன்றுமே புரியவில்லையே! நீ என்ன செய்து விட்டாய், நான் உன்னை மன்னிப்பதற்கு! சரி. நிச்சயமாக நீ எங்கேயோ பயந்துதான் இருக்கிறாய்! பேசாமல் முருகனை நினைத்துக் கொண்டு படுத்துக் கொள், பொழுது விடியட்டும். பார்த்துக் கொள்ளலாம். ஒன்றும் உளறாதே!” என்றார். ஆனால் அதை இடைமறித்துப் பார்வதி தொடர்ந்து பேசினாள்:

”நான் உளற வில்லை. உண்மையைத்தான் சொல்லுகிறேன். அதைக் கேட்டால் நீங்கள் என்னை மன்னிக்கக்கூட மாட்டீர்கள். ஆமாம்! யாருமே என்னை மன்னிக்கத்தான் மாட்டார்கள், சாவித்திரியின் குழந்தையைக் கொன்று அவரை இக்கதிக்குள்ளாக்கியது நான் தான், இல்லாவிட்டால் அவள் குழந்தை உயிருடனேயே பிறந்திருக்கும்” என்று பார்வதி பேசிக்கொண்டுவரும்போதே சங்கரய்யர் இடைமறித்து, “என்ன சொல்லுகிறாய், பார்வதி!” என்றார் கலக்கமும், கலவரமும் கலந்த குரலில்.

“ஆம்! உங்கள் சகோதரியின் இந்தக் குழந்தைக்கு நானேதான் எமனாக வாய்த்தேன், ‘எட்டாவது குழந்தை தாய் மாமனுக்கு ஆகாது’ என்று பாட்டி சொன்னாள். அப் போது நானும் கர்ப்பிணியாக இருந்தேன். இத்தனை காட்களுக்குப் பிறகு பகலிலே தெரியும் பிறை போல் அபூர்வமாக நமக்குக் குழந்தை பிறக்கும் போது அதைக் கண்டு களிக்க வேண்டிய உங்களுக்கு அக்குழந்தையினால் ஏதாவது ஏற்பட்டு விட்டால்! – என்கிற பயம் என்னைக் கவ்விக் கொண்டு விட்டது. என்னுடைய இந்த மனக்குறையைத் தவிர்க்க, கைகேயிக்கு வாய்த்த கூனியைப் போல் பாட்டி எனக்குப் பூரண உதவி செய்தாள். நீங்கள் வாங்கி வந்த மாத்திரைகளைக் கொட்டி விட்டு, அதில் குழந்தையை அழித்து விடும் சில மாத்திரைகண் நிரப்பி உங்களிடம் கொடுத்து விட்டேன். நீங்களும் அதைச் சாவித்திரிக்குக் கொடுத்து விட்டீர்கள்” என்று சொல்லிக் கொண்டு வரும்போதே மேலே பேச முடியாமல் வார்த்தைகள் தடுமாறின.

அத்தனையையும் நிதானமாகக் கேட்டுக் கொண்டிருந்த சங்காய்யர், கலங்கியிருந்த தன் இரு கண்களையும் இறுக மூடிக் கொண்டு ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுத் தம்மை ஒரு கணம் நிதானம் செய்து கொண்டார்.

சோகமே உருவெடுத்தாற் போல் ஏங்கி நிற்கும் தன் அருமை மனைவியை அணைத்த வண்ணம், “பார்வதி, நீ குற்றவாளியல்ல. உன்னையும் என்னையும் அந்தப் பெரும் பாவத்தினின்று ஆண்டவன் தான் காப்பாற்றியிருக்கிறார்” என்றார், அமைதியாக,

‘ஆ’ வென்று அலறினாள் பார்வதி தன்னையும் மீறிப் போய்.

“ஆமாம்! மாத்திரைகளை மாற்றியது ஒன்றுமே எனக்குத் தெரியாது. அதைச் சாப்பிட்டிருந்தால் சாவித்திரியின் கதி என்னவாகி யிருக்குமோ அதுவும் எனக்குத் தெரியாது…” என்று அவர் சொல்லிக் கொண்டு வரும் போதே, பார்வதி இடைமறித்து, “அப்போது அந்த மாத்திரைகள்!” என்று படபடப்புடன் அவரைக் கேட்டாள்.

“இரு! அவசரப்படாமல் கேள். உன்னிடமிருந்து நான் வாங்கிச் சென்ற மருத்துப் பையை அப்படியே ரயிலில் வைத்து விட்டு மறந்து இறங்கி விட்டேன். திடீரென்று, வண்டியில் பாதி வழி வந்த பிறகுதான் எனக்கு மருந்துப் பையின் நினைவு வந்தது. ஆனால் நல்ல வேளையாக மருந்துச் சீட்டு மாத்திரம் என் பையில் இருந்ததினால், என் மானம் பிழைத்தது. போகிற வழியிலேயே கடையில், மறுபடியும் அத்தனை மருந்துகளையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போய் விட்டேன்.

“முப்பது ரூபாய் கையை விட்டுப் போனாலும், பரிகாசத்துக்கிடமான, என்னுடைய இந்த ஞாபக மறதி வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் என்றே, கான், இதை உன்னிடம் கூடச்சொல்லவில்லை. இப்போதாவது ஒப்புக் கொள்கிறாயா, நீ நிரபராதி என்று” எனச் செல்லமாகக் கூறிக் கொண்டே தம் மனைவியின் கன்னங்களைத் தட்டினார் சங்கரய்யர்.

நீண்ட பெரு மழைக்குப் பிறகு காணப்படும் நிர்மலமான ஆகாயத்தைப் போல், பார்வதிக்கும், தன் உள்ளத்தை அழுத்திக் கொண்டிருக்கும் பாரம் நீங்கிப் பூரண அமைதி ஏற்பட்டது.

இயற்கையாக நேர்ந்த இந்த மரணத்துக்கு, தங்கள் பேரில் பழி வராமல் தடுக்க, தான் வணங்கும் தெய்வம்தான், தன்னுடைய கணவருக்குத் தக்க சமயத்தில் ஞாபகமறதியைக் கொடுத்துக் காப்பாற்றியதாக அவள் உள்ளம் அவளுக்குச் சொல்லிக் கொண்டிருந்தது.

கோய் வாய்ப்பட்டிருக்கும் சாவித்திரியின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டும், தன் மனைவியின் விருப்பப்படியும், பார்வதியின் சீமந்தத்தையும், பிரசவத்தையும், சாவித்திரியின் வீட்டிலேயே நடத்துவதற்குச் சங்கரய்யர் தம்முடைய சம்மதத்தைத் தெரிவித்தார்.

– 01-05-1955, கல்கி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *