கட்டயன்
கதையாசிரியர்: வீ.அய்யனார்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: August 9, 2026
பார்வையிட்டோர்: 3
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல ஒரு செட்டியாரு இருந்தாரு. பக்கத்து ஊருக்குப் போயி, பணம் வட்டிக்கு குடுத்து வாங்குறது வழக்கம். செட்டியாரு வெளியூருக்குப் போறபோதெல்லாம் கட்டயண்றவ, தொணக்கிப் போவானாம்.
ஒருநா, ரெண்டு பேரும் ரஸ்தாவ்ல நடந்து போயிக் கிட்டிருந்தாங்க. போயிக்கிட்டிருக்கயில, இருட்டிப் போச்சு. பயந்துகிட்டே, நடந்து போயிக்கிட்டிருக்காங்க.
பின்னால, யாரோ ஓடி வர்ர சத்தங்கேக்குது. திரும்பிப் பாத்தா திருடங்க. செட்டியாரப் போயிச் செடி மறவ்ல ஒழிஞ்சுகிறச் சொல்லிட்டு, அப்டியே ரஸ்தாவ்ல கட்டயன் படுத்துக்கிட்டா.
ஓடியாந்த திருடங்க, கட்டயன காலால எடறுனாங்க. எடறிட்டு, கட்ட, நடுரோட்ல கெடக்டாண்டு ஒருத்த சொன்னா.
திருடங்க சொன்னதக் கேட்டக் கட்டயன், கட்ட, கைலகூடக் காலணா இருக்குமண்டா. என்னாடா! கட்ட பேசுதுண்டு திரும்பிப் பாத்தாங்க. பாத்து, அவங்கிட்ட இருந்த காலணா காசப் புடுங்கிப் பாத்த திருடங்க, இந்த காசு செல்லுமா? செல்லாதாண்டு அவங்களுக்குள்ள பேசுனாங்க. கட்டயன், சும்மா கெடக்காம, செல்லும் செல்லாதுங்றது செடிக்குள்ள இருக்ற செட்டியாரக் கேட்டாத் தெரியும்ண்டு சொல்லிப்பிட்டா செல்லும் 6 – செல்லாதுண்றதுக்கெல்லாம் செட்டியாரு செடிக்குள்ள இருக்காரு, அவரப் போயிக் கேளுங்கடாண்டு சொல்லவும், திருடங்க செடிக்குள்ள குமி ஒழிஞ்சுகிட்டிருந்த செட்டியாரப் புடுச்சு, அடியடிண்டு அடிச்சு, பணத்தெல்லாம் புடுங்கிக்கிட்டுப் போயிட்டாங்க. இவ சும்மா இருந்திருந்தா, புடுங்கிருப்பாங்களா? அதுக்குத்தா சொல்றது, கோவணத்ல முக்காத்துட்டிருந்தா கோழி கூப்டப் பாட்டு வருமாம்.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், நகைசுவைக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசா பல்கலைக் கழகம், மதுரை.
தொடர்புள்ள சிறுகதைகள்
லார்ட் பெட்லிங்டனும் அப்புசாமியும்
ஜ.ரா.சுந்தரேசன்
August 19, 2026
வக்கணை
வீ.அய்யனார்
August 9, 2026
பங்கு – பாகம்
வீ.அய்யனார்
August 9, 2026