இரண்டு செல்வர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்: 11 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர் ஊரிலே இரண்டு செல்வர்கள் இருந்தார்கள். ஒருவன் பெயர் வானமாமலை. மற்றவன் பெயர் மலையப்பள்; வானமாமலை நுண்ணறிவுடையவன். எதையுங் குறிப் பறிந்து செய்வான். மலையப்பனோ நுண்ணறிவுடைய வன் அல்லன். யாராவது ஒன்றைக் குறிப்பாகச் சொன்னாலும் உணர்ந்துகொள்ள மாட்டான். வெளிப் படையாகச் சொன்னாலும் அறிந்துகொள்ள மாட்டான். 

ஒருநாள் ஒரு பெரியவர் அவ்வூருக்கு வந்தார். அவர் ஒரு கோயில் திருப்பணியின் பொருட்டுப் பொருள் திரட்டுதற்கு வந்தார். அவர் யாரிடமும் வெளிப்படையாகக் கேட்பதில்லை. குறிப்பாகவே கேட் பார். கொடையாளர்களும் ‘குறிப்பறிந்தீதலே கொடை’ என்பதற்கு ஏற்ப அப் பெரியவருடைய குறிப்பை யறிந்து பொருள் வழங்கினார்கள். 

வானமாமலை அப் பெரியவர் அவ்வூருக்கு வந் துள்ளதன் காரணத்தைக் குறிப்பால் உணர்ந்து பெரும் பொருள் வழங்கினான். அவனுடைய செயல் பெரிய வருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. மலையப்பன் வானமாமலையைவிடப் பெருஞ்செல்வன். அவன் பெரியவருடைய குறிப்பறிந்து நடந்துகொள்ளவில்லை. பிறகு பெரியவர் அவனைக் கண்டு தாம் ஒரு பெரிய திருக்கோயில் திருப்பணியின் பொருட்டுப் பொருள் திரட்டுவதாகவும், வானமாமலை கேளாமலே பெரும் பொருள் வழங்கி யிருப்பதாகவும் மலையப்பனும் பெரும் பொருள் வழங்க வேண்டுமென்றுந் தெரியப் படுத்தினார். 

இவ்வாறு கேட்டுங்கூட மலையப்பன் யாதுங் கொடுக்கவில்லை. இவன் அறிவிலாப் பேதை. இவனிடம் பொருளைப் பெற்றாலுங்கூட அப் பொருள் பயன் அளிக்காது என்று எண்ணிக்கொண்டே பெரியவர் அவ்வூரைவிட்டுச் சென்றார். அப் பெரியவர் மனவருத்தத்தோடு சென்றபடியினால் நாளடைவில் மலை யப்பனுடைய செல்வவளம் குன்றத் தொடங்கி விட்டது. 

”பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே-தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலுந் தோன்றா துணர்வு.” 

(உரை) பூவாதே காய்க்கும் மரமும் உள – பூவாமலே காய்க்கின்ற மரங்களும் இருக்கின்றன ; அதைப் போல, மக்க களுளும் ஏவாதே நின்று தாம் உணர்வார் உளர் – மனிதர் களுள்ளும் ஏவாமலே இருந்து தாமே அறிந்து செயவல்லவரும் உண்டு, தூவா விரைத்தாலும் நன்று ஆகா வித்து என- தூவி விரைத்தாலும் முளைத்துப் பயன்படாத விதைபோல, பேதைக்கு உரைத்தாலும் உணர்வு தோன்றாது – அறிவற்ற வனுக்கு எடுத்து விளங்கச் சொன்னாலும் அவனிடத் தில் அறிவு உண்டாகாது. 

(கருத்து.) இயற்கையாகவே அறிவற்றிருப்பவனுக்கு அறிவுரைகளைக் கூறினாலும் பலனுண்டாக மாட்டாது. 

– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *