கைக்கூலி பெற்ற நடுவன்
கதையாசிரியர்: க.இனியன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்: 3
(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர் ஊரிலே நீதிமன்றம் ஒன்று இருந்தது. அதற்கு நடுவனாக (வழக்குத் தீர்ப்பவனாக) அமைந் தவனுடைய பெயர் அறத்திருவன். பெயர்தான் அறத்திருவனே தவிரச் செயலில் மறத்திருவனாக விளங்கினான். அவன் தன்னிடம் வருகிற வழக்குகளை நன்றாக உசாவி நேர்மையான முறையில் முடிவு சொல் இல்லை. யாராவது கைக்கூலி (இலஞ்சம்) பக்கமாக முடிவுவதே இல்லை. கொடுப்பார்களாயின், அவர்கள் செய்துவிடுவான். இதனால் ஏழை எளியவர்கள் அறமுறை கிடைக்காமல் பெருந்தொல்லைக்கு உள்ளானார்கள்.
அறத்திருவனுக்குச் செல்வம் நன்கு பெருகிற்று. அவன் அதனைக் கண்டு மனம் மகிழ்ந்தான். “நமது செயல் தெய்வத்திற்குக்கூடப் பிடித்திருக்கிறது; அதனால் தான் நமக்குச் செல்வம் பெருகுகிறது,” என்று உள்ளங் களித்தான். மறநெறியில் நடப்பவன் எவ்வாறு நன்றாக வாழமுடியும்? நாளடைவில் அறத் திருவனுக்கு அல்லல்கள் பல நேர்ந்தன. அவன் கைக்கூலி பெற்றுக்கொண்டு மறநெறியில் நடக்கிறான் என்னும் செய்தி அரசனுக்குத் தெரிந்தது. அரசன் உடனே மிகுந்த சினங்கொண்டான். அவனை வேலையி லிருந்து நீக்கிவிட்டு நடுநிலை பிறழாத வேறொருவனை முறைமன்றத் தலைவனாக ஏற்படுத்தினான்.
அறத்திருவன் பதவியிழந்ததும் செல்வம் கரை யத் தொடங்கிற்று. அவன் எளிய நிலையை அடைந் தான். அவனால் முன்பு வழக்கிழந்த பலர் அவனுக்கு அல்லல்கள் பல செய்தார்கள். அறத்திருவன் நாள டைவில் ஊரைவிட்டு ஓடிப்போனான். அவனுடைய மனைவி மக்களும் சிதறிப்போனார்கள். அவன் குடி யிருந்த வீட்டைக்கூட யாருந் திரும்பிப் பார்க்கவில்லை. அது பாழடைந்து பேய் பூதங்களுக்கும் பாம்பு முதலிய வற்றுக்கும் இருப்பிடமாகிவிட்டது. இடிந்துபோன பகுதியில் பாதாள மூலி வெள்ளெருக்கு முதலியவை யும் முளைத்தன.
”வேதாளஞ் சேருமே வெள்ளெருகுப் பூக்குமே
பாதாள மூலி படருமே – முதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரஞ் சொன்னார் மனை.”
(உரை.) மன்று ஓரஞ்சொன்னார் மனை – தரும சபையிலே ஓரஞ் சொன்னவருடைய வீட்டில், வேதாளம் சேரும் – பேய்கள் வந்து சேரும், வெள்ளெருக்குப் பூக்கும் – வெள்ளெருக்கு முளைத்து மலரும், பாதாள மூலி படரும் – பாதாள மூலி என்னுங் கொடியானது படரும், மூதேவி சென்று இருந்து வாழ்வள் – மூதேவியானவள் போய் நிலைபெற்று வாழ்வாள், சேடன் குடிபுகும் பாம்புகள் குடியிருக்கும்.
(கருத்து.) அறநெறியில் தவறி நடந்தவர்கள் வாழ்கி திருந்த இருப்பிடங்கூட நன்னிலையில் விளங்கமாட்டாது.
– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
வாணிகஞ் செய்த வல்லாளன்
க.இனியன்
August 3, 2026
ஒளவையாரும் ஆராய்ச்சியாளர்களும்
க.இனியன்
August 3, 2026