வயிற்றுப்பசி
கதையாசிரியர்: க.இனியன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்: 4
(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒருநாள் ஒளவையார் ஓர் ஊரிலே இருந்து வெகு தொலைவில் உள்ள மற்றோர் ஊருக்கு வழி நடந்து கொண்டிருந்தார். இக் காலத்தைப்போல அக் காலத் திலே விரைந்து செல்லத்தக்க மோட்டார் முதலிய ஊர்திகள் இல்லை. செல்வநலம் படைத்தவர்கள் வண்டி,- குதிரை, பல்லக்கு முதலியவற்றில் செல்வார்கள். மற்றையோர் வழிச் சாப்பாட்டிற்குக் கட்டுச்சோறு கட்டித் தூக்கிக்கொண்டு நடந்து தான் செல்லவேண்டும்.
ஒளவையாருக்கோ வீடு வாசல்கள் இல்லை. ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டிருப்பவர். வழியிற் சாப்பிடு வதற்குக் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு போகும் வழக்கம் அவரிடம் இல்லை. வழி நடந்துகொண்டிருந்த ஒளவையாருக்கு வயிற்றுப்பசி உண்டாகியது. வழி நடப்பவர்களுக்கு வயிற்றுப்பசி உண்டானால் அது மிகக் கடுமையாக இருக்கும். வயிற்றுப் பசிக்கு உள் ளாகிய ஒளவையார் பக்கத்தில் ஊர் ஏதேனும் இருக் கிறதா என்று பார்த்தார். ஊர்கள் இல்லை ; மனிதப் போக்குவரத்தே இல்லை. வயிற்றுப்பசியால் வாடிய ஒளவையார் தமது வயிற்றையே பழித்துரைக்கத் தொடங்கினார்:
‘என்னுடைய வயிறே! ஒருநாள் சாப்பாட்டை விட்டுவிடு என்றால் விட்டுவிடமாட்டாய். உணவு கிடைக்கிறபோது இரண்டு நாளைக்குச் சேர்த்துச் சாப் பிட்டுவிடு என்றால் அதையுங் கேட்கமாட்டேன் என்கிறாய். என்னுடைய வருத்தம் உனக்குச் சிறிதும் தெரிவதில்லை. உன்னோடு சேர்ந்து யான் வாழ்வது, மிக அருமையான காரியம்’ என்று கூறினார். ஒளவையார் இவ்வாறு தமது வயிற்றையே குறை சொல்லிக்கொண்டு போவதைக் கண்ட சில வழிப் போக்கர்கள் தமது கட்டுச் சோற்றிற் சிறிது ஒளவையா ருக்குக் கொடுத்து உண்ணச் செய்தனர்.
“ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக் கேலென்றால் ஏலாய்-ஒருநாளும்
என்னே அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.”
(உரை.) இடும்பைகூர் என் வயிறே-துன்பத்தைச் செய் கின்ற என்னுடைய வயிறே!, ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் – அகப்படாதபோது ஒருநாள் சாப்பாட்டை விட்டு விடுவாயாக என்று கூறினால் நான் கூறுவதைக் கேட்டு விட்டு விட மாட்டாய்!, இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்-உணவு கிடைத்த போது இரண்டு நாட்கட்கு உரிய சாப்பாட்டைச் சாப்பிட்டுவிடு என்றால் அதனையுங் கேட்டுச் சாப்பிடமாட்டாய்; என்நோ ஒரு நாளும் அறியாய்-எனக்கு ஏற்படுகின்ற வருத் தத்தை நீ ஒரு நாளும் தெரிந்துகொள்ளமாட்டாய், உன்னோடு வாழ்தல் அரிது- ஆகவே உன்னோடு கூடி வாழ்க்கை நடத்துவது எனக்கு மிக அருமையாக இருக்கிறது.
(கருத்து.) வயிறானது ஒருநாள் உணவை விட்டிருக்க மாட்டாது. இரண்டு நாளைக்கு ஒன்றாக உணவை ஏற்றுக் கொள்ளவும் மாட்டாது. ஆகவே மிகக் கொடியதாகும்.
– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
வாணிகஞ் செய்த வல்லாளன்
க.இனியன்
August 3, 2026
ஒளவையாரும் ஆராய்ச்சியாளர்களும்
க.இனியன்
August 3, 2026