பழுதிலாப் பணி
கதையாசிரியர்: க.இனியன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்: 2
(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒருநாள் சிலர் ஒளவையாரைப் பார்த்துப் *பெரியீர் ! இவ்வுலகில் குற்றமற்ற தொழில் யாது? அரசாங்க அலுவலில் அமர்ந்து அதிகாரஞ் செலுத்து வதா ? அல்லது வாணிகம் முதலியவற்றில் ஈடு பட்டுப் பெரும்பொருள் தேடிக்கொண்டு சிறப்பாக வாழ்க்கை நடத்துவதா? எங்கட்கு ஏற்பட்டுள்ள ஐயத்தைப் போக்கியருளுங்கள்,” என்று வேண்டிக் கொண்டனர்.
ஒளவையார் அவர்களைப் பார்த்துப், “பெருஞ் செல்வராகி வாழ்தலும் அரசனிடம் அலுவல் பார்ப்பதும் மிகச் சிறந்த வாழ்க்கை என்று எண்ணாதீர்கள். நீர் வளம் பொருந்திய ஆற்றின் கரையில் சிறந்து வளர்ந் தோங்குகிற மரம் ஆற்றுநீரால் கரை சேதமுற்று வீழ்ந்து அழிந்துபோ தலை நாம் கண்கூடாகப் பார்க் கிறோம் அல்லமோ? அதைப்போல் அரசன் அறியும் படியாக வாழ்கிற சிறந்த வாழ்க்கையும் நிலைபெற்றிருப் பது பெரும்பாலும் ஐயந்தான். இவ்வுலகில் சிறந்த தொழிலாக நான் பயிர்த்தொழிலையே எண்ணுகிறேன். ‘உயிர்த்தொழில் எல்லாம் பயிர்த்தொழில் தன்னால்’ என்று பெரியோர்கள் கூறியிருப்பதால் எல்லாருடைய வாழ்க்கைச் சிறப்பும் உழுதுண்டு வாழ்கிற வாழ்க்கைக் குள்ளே அடங்கியிருக்கிறது. இதற்குச் சிறிதும் ஐயமில்லை, என்று கூறினார்.
”ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே-ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை
கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு.”
(உரை) ஆற்றங் கரையின் மரமும்ஆற்றின் கரையில் உள்ள மரமும், அரசு அறிய வீற்றிருந்த வாழ்வும் – அரசன் அறியப் பெருமையாகவாழ்கின்ற வாழ்க்கையும், விழும்அன்றே- அழிந்துவிடும் அல்லவா? ஆகவே, ஏற்றம் உழுதுண்டு வாழ்வு- உயர்வைத் தரக்கூடியது உழுது பயிர்செய்து வாழ்கின்ற உழு தொழில் வாழ்க்கையே ஆகும், அதற்கு ஒப்பு இல்லை – அதற்கு நிகரான வாழ்க்கை வேறில்லை, வேறு ஓர்பணிக்கு -மற்றைய தொழில்கட்கு, பழுது உண்டு-ஏதாவது குற்றங்கள் இருக்கும் என்பதற்குச் சிறிதும் ஐயமில்லை.
(கருத்து.) எத்தகைய சிறந்த வாழ்க்கையும் அழிந்து. போகும். பயிர்த்தொழில் செய்து வாழும் வாழ்க்கையோ ஒப்பற்ற சிறப்பினையுடையதாகும்.
– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
வாணிகஞ் செய்த வல்லாளன்
க.இனியன்
August 3, 2026
ஒளவையாரும் ஆராய்ச்சியாளர்களும்
க.இனியன்
August 3, 2026