கேள்வி முயல்
கதையாசிரியர்: சுந்தர சண்முகனார்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 19, 2026
பார்வையிட்டோர்: 52
(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு பள்ளிக்கூடத்தில் பல பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுள் கேள்வியான் என்று ஒரு பையன் இருந்தான். அவன் யார் எதைச் சொன்னாலும் நின்று கேட்பான். அதிலுள்ள நல்ல கருத்தை நினைவில் வைத்துக் கொள்வான். எங்கே பிரசங்கம் நடந்தாலும் ஓடிவிடுவான். மற்றைய பிள்ளைகள் அவனைப் போல் நல்லதைக் கேட்பதில்லை.
ஒருநாள் சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டதும், பிள்ளைகள் வீட்டிற்குச் சென்றார்கள். வழியில் ஒருவர் ஒளவையார் கதையைப் பற்றிப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். எல்லாப் பிள்ளைகளும் அங்கு நிற்காமல் விட்டிற்கு ஓடி விளையாடினார்கள். கேள்வியான் மட்டும் பிரசங்கத்தைக் கேட்டுவிட்டுச் சென்றான்.
மறுநாள் காலையில் பிள்ளைகள் எல்லோரும் பள்ளிக்கூடம் வந்தார்கள். அன்றைக்குத் திடீரென்று அதிகாரி வந்துவிட்டார். அவர் பிள்ளைகளைப் பார்த்து, ஒளவையார் கதையை அழகாகச் சொல்பவருக்கு, ஓர் ஆத்தி சூடிக் கதைப் புத்தகம் இனாம் தருவேன் என்றார். யாரும் சரியாகச் சொல்லவில்லை. கேள்வியான் மட்டும் அழகாகச் சொன்னான். அவனுக்க புத்தகம் இனாம் கிடைத்தது. மற்றைய பிள்ளைகள் தாங்கள் பிரசங்கம் கேட்காததற்காக வருந்தினார்கள். (ஆகையால்)
பிறர் சொல்லும் நல்ல கருத்துக்களைக் கேட்க வேண்டும்.
– ஆத்திசூடி அமிழ்தம், குழந்தைக் கதை மலர், முதல் பதிப்பு: 30-8-1948, பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி.
![]() |
பேராசிரியர் சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922 – அக்டோபர் 30, 1997) புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த ஒரு மிகச்சிறந்த தமிழ்த்தேசிய அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழில் முறையியல் (Methodology) அடிப்படையில் புதிய ஆய்வுத் துறைகளை உருவாக்கிய முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். “சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழ்நாட்டுத் தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்.”, என தமிழ்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கைவினை கரவேல்
சுந்தர சண்முகனார்
July 19, 2026
கொள்ளை விரும்பேல்
சுந்தர சண்முகனார்
July 19, 2026
கூடிப் பிரியேல்
சுந்தர சண்முகனார்
July 19, 2026
