இளமையில் கல்
கதையாசிரியர்: சுந்தர சண்முகனார்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 18, 2026
பார்வையிட்டோர்: 7
(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு பட்டினத்தில் ஒர் அரசன் இருந்தான். அவனுக்கு ஒரே சமயத்தில் இரட்டைப் பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களுள் ஒருவன் பெயர் வழுதி. மற்றொருவன் பெயர் மாறன்.
வழுதி மட்டும் நன்றாகப் படித்து வந்தான். மாறன் படித்தாமல் விளையாடி விண் காலம் போக்கி வந்தான்.
இருவருக்கும் இருபது வயதில் கலியாணம் நடந்தது. குழந்தை குட்டியுடன் வாழ்ந்துவந்தார்கள்.
ஒருநாள் அரசி அரசனைப் பார்த்து, தம் இரட்டைப் பிள்ளைகளுள் எப்பிள்ளைக்குப் பட்டம் கட்டப் போகிறீர்கள் என்று கேட்டாள். படிப்பில் கெட்டிக்காரனுக்கெ பட்டம் கட்டப் போகிறேன் என்று அரசன் சொன்னான்.
அதைக் கேட்ட மாறன். ஐயையோ! நாம் இளமையில் படிக்காது விட்டோமே; பட்டம் வழுதிக்குக் கிடைத்துவிடும் போல் இருக்கிறதே என்று வருந்தினான். இனிமேல் படித்துப் பார்க்கலாம் என்று அவனுக்கு யோசனை தோன்றியது.
முதிர்ந்த வயதில் மாறனுக்குப் படிப்பு ஏறவில்லை. படிக்க உட்கார்ந்தால், பெண்டாட்டி பிள்ளைகள் வந்து தொந்திரவு கொடுக்கிறார்கள்.
சில சமயங்களில் அரண்மனைக் காரியங்களையும் கவனிக்க வேண்டியதாய் இருக்கிறது. படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.
இளமையிலேயே படிக்காத தன் குற்றத்தை எண்ணி நொந்தான். கடைசியில் பட்டம் வழுதிக்கே கிடைத்துவிட்டது. (ஆகையால்)
இளமையிலேயே கல்வி கற்க வேண்டும்.
எழுதியவர்: மயிலம் தமிழ்க்கல்லூரியில் விரிவுரையாளரா யிருந்த வித்துவான் சுந்தர சண்முகனார்.
– ஆத்திசூடி அமிழ்தம், குழந்தைக் கதை மலர், முதல் பதிப்பு: 30-8-1948, பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி.
![]() |
பேராசிரியர் சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922 – அக்டோபர் 30, 1997) புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த ஒரு மிகச்சிறந்த தமிழ்த்தேசிய அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழில் முறையியல் (Methodology) அடிப்படையில் புதிய ஆய்வுத் துறைகளை உருவாக்கிய முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். “சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழ்நாட்டுத் தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்.”, என தமிழ்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அறம் செய விரும்பு
சுந்தர சண்முகனார்
July 18, 2026
ஆறுவது சினம்
சுந்தர சண்முகனார்
July 18, 2026
ஈவது விலக்கேல்
சுந்தர சண்முகனார்
July 18, 2026
