ஓதுவது ஒழியேல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 18, 2026
பார்வையிட்டோர்: 86 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒதுவது – படிப்பதை, ஒழியேல் – நிறுத்தாதே. 

ஓர் ஊரில் வேலன் என்று ஒரு பையன் இருந்தான். அவனுக்கு விளையாட்டு வெல்லக்கட்டி. படிப்பு வேப்பங்காய். பள்ளிக்கூடத்தை, விட்டு அடிக்கடி நின்றுவிடுவான். விட்டிலும் படிக்கமாட்டான்.

எதிர் வீட்டில் முத்து என்று ஒரு பையன் இருந்தான். அவன் எப்போதும் படித்துக்கொண்டே யிருப்பான். ஒருநாள் இருவரும் தெருவில் விளையாடினார்கள். அங்கு ஒரு சாமியார் வந்தார். வேலனைப் பார்த்து ஆத்தி சூடித் கதையிலிருந்து ஒரு கதை கேட்டார். அவன் அடிக்கடிப் படிக்காததால் மறந்துவிட்டான், ஆனால் முத்து விடாது படித்து வந்ததால் கதை சொன்னான். முத்துவுக்கு ஒரு பேனா பரிசு கிடைத்தது. வேலன் ஏமாந்தான். 

ஒருநாள் வேலன் தன் பாட்டனார் வீட்டிற்குச் சென்றான். அங்கு அவர் ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்தார். வேலன் பார்த்து. என் தாத்தா இந்த வயதிலும் படிக்கிறீர்கள்? என்று கேட்டான். அதற்கு அவர், படிக்கப் படிக்க அறிவு வளரும் என்று பதில் கூறினார்.

பின்பு பாட்டனார் சரசுவதி படத்தைக் காட்டி, இவள் யார் என்று கேட்டார். கல்விக்கு அரசி என்று வேலன் சொன்னான். அவள் கையில் இருப்பது என்ன என்று கேட்டார். புத்தகம் என்றான். உடனே பாட்டனார், அவள் தான் கல்விக்கு அரசியாயிற்றே, அவள் ஏன் இன்னும் படிக்கிறாள் என்று கேட்டார். வேலனுக்குப் புத்தி வந்தது. நானும் இனிமேல் அவளைப்போல எப்போதும் படிப்பேன் என்று படிக்க ஆரம்பித்தான். (ஆகையால்)

படிப்பதை நடுநடுவே நிறுத்தக் கூடாது. 

எழுதியவர்: மயிலம் தமிழ்க்கல்லூரியில் விரிவுரையாளரா யிருந்த வித்துவான் சுந்தர சண்முகனார்.

– ஆத்திசூடி அமிழ்தம், குழந்தைக் கதை மலர், முதல் பதிப்பு: 30-8-1948, பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி. 

சுந்தர சண்முகனார் பேராசிரியர் சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922 – அக்டோபர் 30, 1997) புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த ஒரு மிகச்சிறந்த தமிழ்த்தேசிய அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழில் முறையியல் (Methodology) அடிப்படையில் புதிய ஆய்வுத் துறைகளை உருவாக்கிய முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். “சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழ்நாட்டுத் தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்.”, என தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *