ஐயம் இட்டு உண்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 18, 2026
பார்வையிட்டோர்: 87 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு கிராமத்தில் கறுப்பண்ணன் என்று ஒருவன் இருந்தான். அவன் பொல்லாத கருமி. பிச்சைக்காரருக்கும் பிச்சையே போடமாட்டான். அவனுக்கு நல்ல தம்பி என்று ஒரு மகன் இருந்தான். உண்மையில் அவன் நல்ல தம்பிதான்.

அவன் ஒருவருக்காவது பிச்சைபொட்டு விட்டுத்தான் சாப்பிடுவான். அதற்காக அவனைக் கறுப்பண்ணன் கண்டிப்பான். எப்படியாவது தகப்பனத் திருத்த வேண்டும் என்று மகன் எண்ணி வந்தான். 

ஒருநாள் நல்லதம்பி, தன் தகப்பன் எதிரில் காக்கைக்குச் சோறு வைத்தான். ஒரு காக்கை வந்தது. பின்பு எல்லாக் காக்கைகளையும் “கா கா” என்று கூவி அழைத்தது. பல காக்கைகளும் வந்து சாப்பிட்டன.

உடனே மகன் தகப்பனை பார்த்து, ஏன் இந்தக் காக்கை தான் மட்டும் சாப்பிடாமல் மற்றைய காக்கைகளையும் அழைத்துச் சாப்பிடுகிறது என்று கேட்டான்.

அதற்குத் தகப்பன், “அது காக்கைகளுக்கு இருக்கும் நல்ல பழக்கம்” என்றான்.

உடனே மகன், நீங்கள் மட்டும் ஏன் பிச்சை போடாமல் சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டான்.

தகப்பன் வெட்கப்பட்டுத் தலை குனிந்தான்.

அன்று முதல் சுறுப்பண்ணன் பிச்சைக்காரருக்குப் பிச்சை போட்டுவிட்டே சாப்பிட வந்தான். அதனால் அவனுக்கும் புகழும் புண்ணியமும் கிடைத்தன. (ஆகையால்) 

பிச்சை போட்டுவிட்டுச் சாப்பிட வேண்டும். 

எழுதியவர்: மயிலம் தமிழ்க்கல்லூரியில் விரிவுரையாளரா யிருந்த வித்துவான் சுந்தர சண்முகனார்.

– ஆத்திசூடி அமிழ்தம், குழந்தைக் கதை மலர், முதல் பதிப்பு: 30-8-1948, பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி. 

சுந்தர சண்முகனார் பேராசிரியர் சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922 – அக்டோபர் 30, 1997) புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த ஒரு மிகச்சிறந்த தமிழ்த்தேசிய அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழில் முறையியல் (Methodology) அடிப்படையில் புதிய ஆய்வுத் துறைகளை உருவாக்கிய முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். “சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழ்நாட்டுத் தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்.”, என தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *