ஈவது விலக்கேல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 18, 2026
பார்வையிட்டோர்: 98 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர் ஊரில் ஒரு வள்ளல் இருந்தார். அவர் யார் போய்க் கேட்டாலும், இருப்பதை இல்லை என்னாமல் கொடுப்பார். ஆனால், அவருக்குக் கருமி என்று ஒரு மாமன் இருந்தான். பிறர்க்கு உதவி செய்வது என்றால் அவனுக்கு மனம் வராது.

வள்ளல் யார்க்கு எதைக் கொடுக்கப் போனாலும், வேண்டாம் வேண்டாம் என்று தடுத்துக்கொண்டே யிருப்பான்.

வள்ளலைப் பார்த்து நீங்கள் இப்படிக் கொடுத்துக்கொண்டே யிருந்தால் சீக்கிரம் ஏழையாகிவிடுவிர்கள் என்று கெட்ட புத்தியும் புகட்டுவான்.

வள்ளலுக்கு அது பிடிப்பதில்லை. எப்படியாவது கருமிக்கு நல்ல புத்தி புகட்டவேண்டும் என்று அவர் எண்ணிவந்தார். 

ஒருநாள் கருமி ஊர்ப் பணத்தைத் திருடிவிட்டான். உடனே அவ்வூர் அரசன் கருமிக்கு விலங்கு போட்டுவிட்டான். நீ ஆயிரம் ரூபா கட்டினால் உன்னை விடுவேன் என்றும் தெரிவித்தான்.

கருமியின் கையில் பணம் இல்லை. வள்ளலைக் கொடுக்கும்படிக் கேட்டான். அவனுக்குப் புத்தி புகட்ட இதுதான் நல்ல சமயம் என்று வள்ளல் நினைத்தார்.

உடனே அவர், என்னிடம் பணம் இல்லை; அப்படிக் கொடுத்தாலும் நான் சீக்கிரம் ஏழையாகிவிடுவேன் என்று சொல்லிக் கையை விரித்து விட்டார். 

வேறு வழியில்லாமையால் கருமியைச் சிறையில் அடைத்துவிட்டார்கள்.

பிறர்க்குக் கொடுத்ததை நாம் தடுத்ததனாலேயே நமக்கும் வள்ளல் கொடுக்காது விட்டார் என்று கருமி தன் குற்றத்தை உணர்ந்து வருந்தினான். (ஆகையால்) 

ஒருவர் மற்றொருவருக்குக் கொடுப்பதைத் தடுக்கக்கூடாது. 

எழுதியவர்: மயிலம் தமிழ்க்கல்லூரியில் விரிவுரையாளரா யிருந்த வித்துவான் சுந்தர சண்முகனார்.

– ஆத்திசூடி அமிழ்தம், குழந்தைக் கதை மலர், முதல் பதிப்பு: 30-8-1948, பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி. 

சுந்தர சண்முகனார் பேராசிரியர் சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922 – அக்டோபர் 30, 1997) புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த ஒரு மிகச்சிறந்த தமிழ்த்தேசிய அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழில் முறையியல் (Methodology) அடிப்படையில் புதிய ஆய்வுத் துறைகளை உருவாக்கிய முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். “சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழ்நாட்டுத் தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்.”, என தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *