கண் சிமிட்டும் வானவில்
கதையாசிரியர்: இரஜகை நிலவன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
கிரைம்
கதைப்பதிவு: April 15, 2026
பார்வையிட்டோர்: 109
அத்தியாயம் 13-14 | அத்தியாயம் 15-16 | அத்தியாயம் 17-18
அத்தியாயம் 15 – களக்காட்டில் நடந்த களேபரம்!

நெய்லி ரீமா ஹோட்டல் வந்த போது அங்கே ஒரு போலீஸ் பட்டாளமே காவல் இருந்தது.
முதலில் பயந்து போனவள், வரவேற்பில் அமர்ந்திருந்த பெண்ணிடம் “எதற்காக இத்தளை போலிஸ் கூட்டம்?” என்று கேட்டாள்.
“ஒ! அதுவா? நீங்களும் உங்களோடு இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களையும் கொரோனா டெஸ்ட் எடுக்க வைத்து உங்களை தனிமைப் படுத்த போகிறார்களாம்”
“ஓ! அப்படியா?நானும் என்னவோ ஏதோ என்று ப யந்து போனேன்” என்றாள்.
“வேறு எதற்காக பயந்தீர்கள்?” என்று கேட்டாள் வரவேற்பில் அமர்ந்திருந்த பெண்.
“ஒன்றுமில்லை?” என்று முகத்தை துடைத்துக் கொண்டு கூட வந்திருந்தவர்களிடம் விளக்கினாள்.
“போச்சுடா. இனி 14 நாட்கள் கோரண்டைனா?” என்றவாறு தலையில் கை வைத்தான் ஒருவன்.
“வேறு வழியேயில்லையா?”என்று கேட்டான் இன்னொருவன்.
“ம்கூம் ” என்றவாறு உதட்டைப்பிதுக்கினாள் நெய்லி.
காவல் துறையினர் எல்லா வழி முறைகளையும் செய்து விட்டு 14 நாட்களுக்கான விடுதித்தொகையையும் வாங்கிக்கொடுத்து விட்டு “இவர்கள் எங்கும் போகமலிருப்பதை கண்காணிப்பது உங்கள் கடமை”என்று அந்த விடுதியின் மேலாளருக்கு கட்டளையிட்டு விட்டுக் கிளம்பினர்.
“பதினான்கு நாட்கள்” ஆங்கிலத்தில் கிறீச்சிட்டான்” இன்னொருவன்…தலையில் கை வைத்து அடித்துக் கொண்டே…
“வேறு வழியில்லை ” என்றவாறு கையை தூக்க்கினாள் நெய்லி.
நெய்லி கைப் பேசியை எடுத்து நரேனை அழைத்தாள். நடந்ததையெல்லாம் விவரித்த போது “அப்பா…. கொஞ்சம் மூச்சு விட நேரம் கிடைத்திருக்கிறது” என்றான் நரேன் பெருமூச்சு விட்டவாறு.
“சும்மா ரிலாக்ஸ் பண்ணுறதை விட்டுட்டு என்ன செய்யணும்ணு யோசி. இவனுக சும்மா இருக்க மாட்டானு… வெரட்ட ஆம்பிச்சிருவானுவ”
“சரி. நீ எப்ப ஆஸ்பத்திரிக்கு வருகிறாய்?”
“நரேன் எனக்கும் சேர்த்து தான் “கோரண்டைன்” (தனிமைப்படுத்துதல்) அதைத் தெரிஞ்சுக்கோ” கோபமாகக் கத்தினாள் நெய்லி.
“ஓ. ஸாரி… ஸாரி”
“உன் ஸாரியெல்லாம் குப்பையிலே தூக்கி போட்டுட்டு மொதல்ல அந்த ஆலகாலச் செடியைக் கொண்டாரப் பாரு”
“நெய்லி. நீயும் கூட என் நிலைய புரிஞ்சுக்கல்ல … சரி. கவிதா வந்தாளா? எதுவும் போன் வந்ததா? வசந்த் ஏதாச்சும் போன் பண்ணினா?”
“ம்ம்ம்… கவிதா போன் பண்ணினா… இங்கயே அவள் வந்தாள்ணா அவளையுயம் (தனிமைப்படுத்துதல்) கோரண்டைன்” ல 14 நாள் இங்கே உள்ள. வச்சுருவானுவ…அதனால அவள. அங்க ஆஸ்பத்திரிக்குத்தான் வரச்சொல்லியிருக்கேன்” நெய்லி சொல்லி முடிக்கு முன் வாசலில் நிழலாட திரும்பிப்பார்த்த நரேன் “ஆங் கவிதா வந்தாச்சி அப்புறமா பேசறேன்” என்று கைப்பேசியை அணைத்து விட்டு, “வா கவிதா என்னா… என்ன செய்தி…? வசந்த் போன் பண்ணினா?” என்று கேட்டான்.
அவள் “இல்லை” என்று சொல்லி விட்டு அவன் படுக்கையின் அருகில் பெட்டியை வைத்து விட்டு, “வாஸ் ரூம் எங்க இருக்கு?” என்றாள்.
அவன், கை காட்ட, அவள் போய் முகம் கழுவிக்கொண்டு வந்தாள். “ரொம்ப அடியோ?” என்றாள் அவன் கைகளைத் தொட்டுப் பார்த்து.
“ஆமாம். எழும்பி நடக்கக் கூட முடியவில்லை. அது சரி..வசந்திற்கு போன் பண்ணினாயா?… அவனுக்கு என்னாச்சு?” என்றான் எழுந்து நொண்டிக்கொண்டே அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து, அவளையும் இன்னொரு நாற்காலியில்
அமரும்படி சைகை காட்டினான்.
“நான் கேட்க வேண்டிய கேள்வியை எல்லோரும் என்னிடமே கேட்கிறீர்கள். வசந்த் கூட பேசி நாலு நாளாச்சி. போனை எடுக்க மாட்டெங்கிறார்ணு சொல்லித்தானே மெட்றாசிலிருந்து இங்கே வந்தேன்…” அவள் முகத்தை துடைத்துக் கொண்டாள்.
“உன் வருத்தம் புரிகிறது கவிதா. நானும் என்ன செய்ய என்று
புரியாமலிருக்கிறேன். என்னாலே நடக்க முடியாத சூழ் நிலை”
“நரேன். உங்கள் நிலை எனக்கு புரிகிறது… ஆனால் வசந்த் நிலமை என்னாச்சி… ஏதாவது தீவிரமா நட்ந்திருக்குமோண்ணி….”
ஏறக்குறைய அழ ஆரம்பித்தாள்.
‘சே…சே… நீ நெனக்கிற மாதிரி எதுவும் நடந்திருக்காது.. எதற்கும் ஒன்று செய்வோம். நான் திரும்பவும் ரமணிக்கு போன் பண்ணுகிறேன். நீ சாவகாசமாக, நாங்கள் தங்கியிருந்த அறைக்குப் போய் பெட்டியை வைத்து விட்டு கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள். சாயங்காலம் ஒரு போலீஸ் கம்ப்ளெய்ண்டும் கொடுத்து விடலாம். எதற்கும் கவலைப் படாதே… சும்மா மனசை போட்டு அலட்டிக்காதே…. போ…போய் கொஞ்சம் ஓய்வு எடுத்து விட்டு வா.. அப்புறம் பேசலாம்” என்று அறையின் சாவிகளைக் கொடுத்து எவ்வாறு போக வேண்டுமென்று வழியும் சொல்லிக் கொடுத்து, ஒரு ஆட்டோ காரனுக்கு போன் பண்ணினான்.
அத்தியாயம் 16 – அமைச்சரின் சூழ்ச்சி!
மறுநாள் மாலையில் நெய்லி அலைபேசியில் நரேனைத்தொடர்பு கொண்டு, “கவிதா வந்தாளா? என்ன சொன்னாள்.?”என்று கேட்டாள்.
நரேன் எல்லாவற்றையும் விவரித்து விட்டு “காலையிலே வந்து எனக்கு காட்டிற்குள் செல்வதற்கு அனுமதி வாங்கித்தாருங்கள் நான் போய் வசந்திற்கு என்னாயிற்று என்று பார்த்து விட்டு அந்தச் செடியைக் கொண்டு வருகிறேன்” என்றாள். அனுப்பி வைத்தேன். அவள் அந்த ஆலகாலச்செடியைப் பார்க்கும் வரை தொடர்பில் இருந்தாள்.
அதன் பின் என்னாயிற்று என்று தெரியவில்லை. போன் அடிக்கிறது, ஆனால் எடுக்க மாட்டேன் என்கிறாள்” கொஞ்சம் கவலை தோய்ந்த தொனியோடு சொன்னான்.
”உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கிறதா”? பெண் பிள்ளையை காட்டுக்கு,,,,, அதுவும் கொஞ்சம் கூட தெரியாத இடத்துக்கு…
இப்படி அனுப்பி வச்சிட்டு …. சே!…. ம்…ம்….சரி… அவளுக்கு எதாவது ஒண்ணு ஆச்சிண்ணா…. என்னச் செய்யபோறோம்ணு தான் தெரியல… திடீர்னு வச்ந்த் வந்து கேட்டால் என்ன பதில் சொல்லப் போறோம்ணு தான் தெரியல…
சரி நீ சீக்கிரம் ஆஸ்பத்திரியிலே இருந்து எழுமபி வெளியே வர்றதுக்கு பாரு… எங்க திட்டம் என்னண்ணு சொல்றேன்.. இந்த பதினாலு நாள் முடிந்ததும் நேராஆஸ்பத்திரிக்கு வந்து உன்னையும் கூட்டிக்கிட்டு ஒரு காரிலே நேரே காட்டுக்கு போற மாதிரி தான் ஐடியா… சோ…. தயாராக இருக்கிறது நல்லது… அதுக்கு முன்னாடி வசந்த் அல்லது கவிதாவின் போன் வந்தா உடனே போன் பண்ணு…”
“சரி”
“என்ன ஒண்ணும் பேச மாட்டேங்கிற…”
“பின்ன என்ன?… என்ன சொன்னலும்…. செய்தாலும்… தப்புண்ணு சொன்னா நான் என்னசெய்றது….”
“நரேன். ஏரக்குறைய நான் ஒரு அடிமை மாதிரி தான் உணர்கிறேன்”
“ஏன் நெய்லி அப்படி சொல்கிறாய்?”
”இவனுக வெரட்டுற வெரட்டல்ல என்ன செய்யப் போறோம்ணு தான் புரியல… ம்…ம்… நீ முடிஞ்சா அதுக்கு முன்னால முடிஞ்சா காட்டிற்குப் போக முடியுமா பாரு.. இவனுகட்ட கைய நீட்டி பணம் வாங்கிட்டு இப்ப என்ன செய்யணும்ணு தான் புரியல…”
“ஸாரிப்பா… போனமா செடிய புடுங்கினமா … கொண்டு கொடுத்தமா… நம்ம வேல முடிஞ்சிதுண்ணு நெனச்சேன்.இவ்வளவு எதிர் பார்க்காத நிகழ்வுகள் நடக்கும்ணு நெனக்கல… கண்டிப்பா முயற்சி செய்யறேன்.”
அமைச்சர் மணிமாறனின் கோபம் உச்சியில் நின்று கொண்டிருந்தது. “பிரபு, கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தீரா?
அந்த மருந்துக்கம்பெனி காரன் நான் என்னவோ அவனை ஏமாற்றி விட்டதைப் போல கத்தி விட்டுப் போகிறான். நீ இங்கே இருந்து
என்னத்த புடுங்கிகிட்டு இருக்கேண்ணு புரியலை…” அறையின் அங்குமிங்கும் அலைந்து கொண்டே கேட்டவர், தன் உதவியாளன்
முத்துராமனைக் கூப்பிட்டு” முத்து, இனி இவரை நம்பிப் பிரயோசனமில்லை. என்ன செய்யலாம். நீயே சொல்லு” என்றார்.
தலையை சொறிந்து கொண்டு நின்ற முத்து, ஏதோ சொல்லிய போது முதலில் அமைச்சருக்கு புரியவில்லை. “என்ன முத்துராமன் கொஞ்சம் பலமா சொல்லு” என்றார்.
”நம்ம தான் வந்தவுடனே நம்ம வேலய ஆரம்பிச்சுருவோமே சார். ஆஸ்பத்திரியிலே ஒரு நர்ஸப் புடிச்சி கையிலே கொஞ்சம் பணத்தைக் கொடுத்துட்டேன் . இது வரைக்கும் கெடச்ச தகவல் பிரகாரம், அனேகமாக, நரேன் உடம்பு சரியானதும் காட்டிற்கு போறதா பிளான் இருக்கு. பதினாலு நாளாயிற்றுண்ணா.. அந்த நெய்லி அதான் அவனுடைய காதலியும் அந்த இங்கிலாந்து காரனுவளும் சேர்ந்து காட்டுக்குள்ள போற மாதிரி ஐடியா…”
“அது சரி….” அமைச்சர் கேட்க ஆரம்பிக்கு முன், “ அதுக்கு முன்னால அவன் காட்டுக்குள்ள போயிற்றாண்ணா நமக்கு எப்படி தெரியுமுண்ணுதானே கேக்கிறீங்க?..”என்றான் முத்துராமன்.
“முத்து நீ வில்லண்டா.. நான் கேக்க நெனக்கிறத அப்படியே யோசிக்கிறடா… ஆமா… அதுக்கு என்ன வழி பண்ணியிருக்க..”
“நீங்க கவலைப்படாதீங்க… இனிமே நரேன் ஒரு இஞ்ச் அசைஞ்சாலும் நமக்கு செய்தி கொடுக்க ஆள் இருக்கு”
“ஆங்… எதையும் ஆதாயமில்லாமல் முத்து செய்ய மாட்டான். இதுக்குத்தான் வந்த அன்னைக்கே பத்தாயிரம் வாங்கிட்டுப் போனியா? ” என்ற அமைச்சர் “பிரபு நீங்க ஒண்ணு பண்ணுங்க. அந்தக் கொரோனா மருந்துச் செடியை கொண்டு வர்றதுக்கு வேற ஏதாவது வழி இருந்தாலும் கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்க..” என்றார்.
“அய்யா.அந்த நீலாங்கர நர்சை பார்த்துட்டு வர்றேன். முடிஞ்சா அந்த கண்ணன் பயலையும் புடிச்சு இழுத்துட்டு வர்றேன்” என்றான் உதவியாளன் முத்து.
“என்ன பண்ணுவியோ தெரியாது. அந்த ஆலகாலச் செடி சீக்கிரமா நம்ம கைக்கு வரணும்” என்றார் அமைச்சர்.
– தொடரும்…
![]() |
பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க... |
