வாழ இடம் இல்லாமல் தவித்த வௌவால்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 23, 2026
பார்வையிட்டோர்: 1,314 
 
 

ஒரு முறை காட்டில் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் மிகப்பெரிய சண்டை ஏற்பட்டது.

பறவைகளின் கூடுகளை குரங்குகள் கலைத்துப் போட்டன. யானைகள் , பறவைக் கூடுகள் இருந்த மரங்களை ஆட்டித் துன்புறுத்தியது.

இதில் வௌவால் , எதற்கு வம்பு என்று விலங்குகள் குழுவிலும் பறவைகள் குழுவிலும் இருந்து வந்தது.

பறவைகளின் அரசன் கழுக்குக்கும் விலங்குகளின் ராஜா சிங்கத்திற்கும் ஏற்பட்ட அமைதி பேச்சுக்குப் பிறகு விலங்குகளும் பறவைகளும் சண்டையை கைவிட்டன.

வௌவாலை சிங்கம் அழைத்துப் பேசியது ‘நீ பறவையா விலங்கா’ என்று கேட்டது சிங்கம்.

வௌவால் ‘ராஜா நான் விலங்குதான்’ என்றது.

‘பறக்கிற நீ எப்படி விலங்கு ஆக முடியும் ? நீ பறவைகள் கூட்டத்திற்கு செல்’ என்று சிங்கம் கூறி விட்டது.

வௌவால், பறவைகள் அருகில் சென்றது.

கழுகு ‘நீ முட்டை யிடுவதில்லை அல்லவா? நீ எப்படி எங்கள் கூட்டத்தில் சேர முடியும்’ என்று கூறி விரட்டி விட்டது.

இரண்டு குழுவிலும் மாறி மாறி இடம் பெற்றதால் இரண்டு தரப்பும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் வௌவால், பாழடைந்த கட்டிடங்களில் போய் வசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

நீதி – நேரத்திற்கு ஒரு வேடம் போடக் கூடாது.

(ஈசாப் கதைகளிலிருந்து)

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *