அவன் என்பது நீங்களாகவும் இருக்கலாம்!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: புனைவு
கதைப்பதிவு: October 12, 2025
பார்வையிட்டோர்: 137 
 
 

தெரு எனக் குறிப்பிட முடியாதபடியான அந்தச் சந்தின் வழி அவன் நடந்து கொண்டிருக்கிறான். அந்தச் சந்து எதுவென அவனுக்குத் தெரியவில்லை. முன்பு ஒருபோதும் பார்த்திராதது எனினும், ஏற்கனவே அதில் வந்திருப்பது போலவும், அது தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ளது எனவும் உணர்வு தோன்றுகிறது அவனுக்கு.

கனவில் காண்பது போல எனும் எண்ணம் எழவே, காட்சியை உன்னித்து, அதுவும் கனவுதான் போலும் என யூகம்கொண்டான்.

கனவுள்ளிலான அவனை, கனவுள்ளிலான அவனேயும், கனவு காணும் அவனது எண்ணப்படியாய் பார்த்துச் சோதித்ததில், அது கனவேதான் என்பது உறுதியானது.

இக் கனவில் இருந்து விடுபட தேட்டம் கொண்டான். கண்களைத் திறந்தால் போதும், கலைகிற உறக்கத்தில் கனவும் போய்விடும் என்கிற நிலையில், அவனால் கண்களைத் திறக்கக் கூடவில்லை. குறைந்தபட்சம் கனவில் நடந்துகொண்டிருக்கும் அவன் திரும்பி வந்தாலாவது தேவலாம் என கனவு காணும் அவன் நினைத்தான்.

கனவு காணப்படும் அவனோ கனவு வழி போய்க்கொண்டே இருக்கிறான்.

– சுந்தர சுகன், ஜூன் 2002. இக்கதை சுந்தர சுகன் இதழில் அவன் என்ற தலைப்பில் வெளியானது.

ஷாராஜ் இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *