பாய்ச்சல்





(1992ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மரத்தை வெட்டி வீழ்த்திவிட்டுக் கோடரியும் கயிறும் விறகு வெட்டிக்குப் பக்கத்தில் மனம்விட்டுப் பேசிக் கொண்டிருந்தன.
காட்டுக்குள் நுழைந்த ஒரு மரங்கொத்தி மாறி மாறி நான்கு மரங்களைத் தன் அலகால் கொத்திவிட்டுப் பறந்து போனது.
‘இந்த மரங்கொத்தியைப் பார்த்தாயா? நான்கு மரங்களை மாறி மாறித் தன் அலகால் வெட்டியது – ஒரு மரத்தை யாவது அதனால் உருப்படியாக வீழ்த்த முடிந்ததா?’ என்று கயிற்றைப் பார்த்துக் கேட்டது கோடரி.
‘மரங்கொத்தியால் அது முடியாது’ என்றது கயிறு.
‘ஏன் அப்படிச் சொல்கிறாய்?’
கயிறு சொன்னது:-
‘நாலு மரத்தையும்
வெட்டுகிறவன்
ஒரு மரத்தையும்
விழுத்துவதில்லை’
– காசி ஆனந்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்கழி 1992, காந்தளகம், சென்னை.