உங்க அழகு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு…! – ஒரு பக்க கதை
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,140
‘’உங்க அழகு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு…!’’
அவன் சொன்னபோது சற்றே நாணித்தாள் ரேஷ்மா.
அதனாலதான் பலமுறை நான் உங்ககிட்ட என் விருப்பத்தைச் சொல்லிட்டேன். உங்க வீட்டுல வந்து சம்மதம கேட்கவும் தயாரா இருக்கேன். ப்ளீஸ் எனக்காக…
அவன காரிலிருந்து இறங்கி வந்தான்.
‘’இங்க பாருங்க மிஸ்டர்…நான் எப்பவோ என் அப்ஜெக்ஷனை சொல்லிட்டேன். முடியாது, முடியாது. என் வீட்டுலயும் சம்மதம் கிடைக்காது. ஸோ நீங்க எனக்காக காத்திட்டிருக்க வேண்டாம். பெட்டர் தன் நெக்ஸ்ட் சான்ஸ்…’’
சொன்னவள் விருட்டென நடந்தாள்.
இளம் திரைப்பட இயக்குநரான அவனுக்கு வருத்தமாய் இருந்தது,
தன் புதிய படத்தின் நாயகிக்காக அழகான கல்லூரிப் பொண்ணைத் தேடி வலை வீசியவனுக்கு முதல் முறையே தோல்வியில் முடிந்ததன்
வருத்தம் அவனுக்கு..!
– எட்டயபுரம் ராஜூ (1-10-2008)
தொடர்புள்ள சிறுகதைகள்
அதுவரை பொறுத்திரு!
மா.வீ.தியாகராசன்
September 21, 2026
புலம்பலால் வெளிவந்த உண்மை…
ராமன் செல்வராஜ்
September 21, 2026
நல்லதுக்கு காலமில்லை
இரா.கலைச்செல்வி
September 21, 2026