மெய்ப்பட்டது கனவாக வேண்டும்!
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 9, 2024
பார்வையிட்டோர்: 4,383
அதிகாலையில் காணும் கனவுகள் நனவாகுமாமே?! அதிகாலைக் கனவுகள் மெய்ப்படும் என்றால்.. மெய்ப்படும் நனவு ஒன்று கனவாக வேண்டும் என்று மனம் மன்றாடியது. விஷயம் வேறொன்றுமில்லை!
விடியவிடிய கொட்டித் தீர்த்த பெருமழையில் சாலைகள் வாய்க்காலாய் மாற, வழிநெட்க வாகனங்கள் மிதந்தன.
அதிகாலை ரயிலேறக் கால்டாக்ஸி ‘புக்’ பண்ணிக் காத்திருந்தான் கணேஷ்.!
வண்டி வந்ததும் மனைவியோடு வண்டியேற….
கால்டாக்ஸி டிரைவர் பூர்வத்தில் படகோட்டியாய் பயணித்திருக்க வேண்டும். வெகு லாவகமாய் பதற்றமின்றி ஓட்டினார். வழிநெடுக , பால் காரரும் பயணிக்கும் சிலரும் நீரில் நின்றுபோன வண்டியைத் தள்ளியபடியே தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
சடக்கென்று கணேசன் மனைவி அப்படிக் கேட்பாளென்று யாரும் எதிர்பார்க்கவில்லை!
‘நம்ம வண்டியும் இப்படி நின்று போனால்…?’ என்றாள்.
ஏற்கெனவே டிக்கெட் கிடைக்குமா கிடைக்காதா என்று தவித்துப் புக் பண்ணியிருக்க புத்தியில்லாமல் இப்படியா கேட்பார்கள்?!
டிரைவர் பின்பக்கம் திரும்பி-பார்வையால் எரித்தார் பரமசிவனாக.
கணேசன் மட்டும் கடவுளைப் பிரார்த்தித்தான் ‘மெய்ப்பட்ட காட்சிகள் கனவாக வேண்டுமென்று!’
டிரைவர் மீதான கருணையல்ல…! கணேசன் உள்மனம் சொன்னது…!
என்மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்?
டிரைவரிடம் ஸ்டேஷனில் இறங்கியதும் காசைக் கொடுக்கும்போது கைகுலுக்கிச் சொன்னான். ’சூப்பரா ஓட்டுனீங்க புரோ!’ என்று!